முதல் முறை ஒரு ஆணின் இடத்திலிருந்து அவன் ஏங்கித் தவிக்கும் பெண்ணிற்கு எழுதுவதுபோல் இக்கவிதை .இக்கவிதையில் ஒரு ஆணின் உணர்வுகள் என்னால் முழுமையாய் பிரதிபளிக்கப் பட்டுள்ளதா என்று தெரியவில்லை . படித்துவிட்டு உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் .
உன் கூந்தல் ஒற்றை ரோஜாவும்
ஒரு ரோஜா வனமாய்
தோன்றியது -பெண்ணே
உன் உதட்டோர சிரிப்பில்
ராகங்கள் பலவும்
கேட்கின்றது -பெண்ணே
உன் திருமண அழைப்பிதல்
நீட்டும்பொழுது -என்
கனவுலகம் மறைந்தது
பெண்ணே !!!!
***********************************************
உன் கைவிரல் பிடித்து நடக்கையில்
உலகம் என் காலடியென
உணர்கிறேன் !!
உன் ஒரு நிமிடப்
புன்னகையில் என்னுலகை
மறக்கிறேன் !!
உன் விழிக்கண் பார்வையில்
என் உறவுகளைத்
தொலைக்கிறேன் !!
கண் விழித்து பார்க்கையில்
அத்தனையும் கனவென
உணர்கிறேன் !!!
*************************************
ஆழ்கடலில் புதைக்க நினைத்த
நினைவுகள் எல்லாம்
கடல் அலைகளாய்
மேலே வர
அழிக்க முடியா நினைவுகளுடன்
அமைதியாய் நிற்கிறேன்
கடற்கரையோரம்!!!!



