பள்ளிக்காலமும் நானும் -1
பள்ளிக்காலமும் நானும் -2
வகுப்பு ஒன்பது . அதுவரையிலும் பள்ளிக்கு நடராஜர் சர்வீஸ் ல போன எங்களுக்கு ஆப்பு வந்தது . ஒரு ஆள் சாக இடம் கிடைக்காமல் நாங்கள் நடந்து போற வழியில் தற்கொலை செய்து கொண்டார் . அதற்க்கு பிறகு அந்த வழியில் போகும்பொழுது அந்த ஆள் மனதில் வந்து பயமுறுத்துவார் . அவர் இறந்து கிடந்த மரத்தின் பக்கம் திரும்பாமல் செல்லவேண்டும் என்று மனது நினைத்தாலும் எங்க தலை அங்கதான் பார்க்கும் . அப்புறம் எங்கள் கூட்டம் குறைய ஆரம்பிச்சது .எல்லாரும் சைக்கிள்ல போக ஆரம்பிச்சாங்க . நான் கொஞ்சம் உயரம் கம்மி அதனால ஒன்பது வரைக்கும் சைக்கிள் வாங்கித்தரல. (எனக்கும் சைக்கிள் ஓட்ட தெரியாது ). அப்புறம் கொஞ்ச நாள் பெரியண்ணாதான் pickup , Drop .
எனக்கும் புது சைக்கிள் வாங்கியாச்சு .வீட்ல சும்மா நிக்குது . ஓட்டாத சைக்கிள் அ தினமும் தொடச்சு வைப்பேன் , வந்தது காலாண்டு விடுமுறை பத்து நாள் . அண்ணா வாடகை சைக்கிள் மொத்த வாடகைக்கு எடுத்து வந்தான் . அண்ணாவும் அக்காவும்தான் எனக்கு பயிற்சியாளர்கள் .இடுப்ப வளைக்காத , நேரா பார்த்து ஓட்டு , ஸ் ஸ் ஸ் அப்பா சைக்கிள் பழகுறதுல எவ்வளவு கஷ்டம் .டக் அடிச்சுதான் ஓட்டுவேன் (இப்போ வரைக்கும் கூட ). கொஞ்சம் பழகினதும் ஆள் துணை இல்லாம நான் மட்டும் ஓட்டி பழகினேன் .
ஒருவேகத்துல ஓட்டி ரோட்டு ஓரமா விழுந்துட்டேன் . பக்கத்துல ஒரு இரண்டு அடி தூரத்துல பதினஞ்சடி பள்ளம் . ஜஸ்ட் மிஸ் . அப்ப பார்த்து என் பெரியண்ணா கடந்து போக யார்ல அது விழுந்து கிடக்கானு கேட்க்க . அண்ணா நான்தானு சொல்ல அண்ணா பயந்து போய்ட்டான் . ஒருவழியா பல வீர வெற்றி தலும்புகளுக்குப் பின் மூனே நாள்ள சைக்கிள் ஓட்ட கத்துகிட்டேன் . நான் பழகின சைக்கிள் தான் ரொம்ப பரிதாம நிலைமைல இருந்துச்சு . அதுக்கு என் அண்ணா எவ்ளோ தெண்டம் குடுத்தான்னு தெரியல . கண்டிப்பா அத பழைய இரும்பு வியாபாரத்துக்குதான் போட்டு இருப்பாங்க .விடுமுறை முடிந்து புது சைக்கிள்ள போகும்பொழுது மனசுல அப்படி ஒரு சந்தோசம் . அப்புறம் கொஞ்ச நாள் ரோட்ல வர ஆடு , மாடு மேலல்லாம் மோதி பல விபத்துக்களை சந்தித்தேன் . எல்லாம் உயரம்தான் காரணம் , கால் நீளம் பெடல் வரைக்கும்தான் இருக்கும் பிறகு எப்படி நான் கீழ ஊன்றி balance பண்ண முடியும் . அப்புறம் கொஞ்சம் நல்லா ஓட்டினபிறகு முன்னாடி போற ஆள முந்தி போறது , கை விட்டு ஓட்டுறதுன்னு செம அட்டகாசம் .
