என் முந்தைய பதிவில் கட்டிய வீட்டை வாங்குமுன் கவனிக்க வேண்டியவற்றை பற்றி எழுதி இருந்தேன் படிக்க இங்கே . இப்பதிவு சொந்த வீடு கட்டுமுன் கவனிக்கவேண்டியவை பற்றி
1 .படித்த அனுபவம் வாய்ந்த ஒரு DCE (டிப்ளமோ இன் சிவில் இன்ஜினீயரிங் ) அல்லது BE படித்த Engineer வைத்து கட்டுவது நல்லது . கிராமப் புறங்களில் தெரிந்த கொத்தனார் வைத்தே இன்றளவும் பல வீடுகள் கட்டப்படுகின்றன .
2 .கொத்தனாரோ, இன்ஜிநீயரோ முழு பொறுப்பும் அவர்கள் இடம் விடுவதை தவிர்க்க வேண்டும் . உங்களுக்கு இதுல ஒண்ணுமே தெரியாதுன்னு முதல்லயே அவங்க தெரிஞ்சுகிட்டா நஷ்ட்டம் உங்களுக்குத்தான் .
3 .வீடு கட்டுமுன் உங்களிடம் உள்ள வீட்டு ப்ளானை நல்ல ஒரு எச்டிமேட்டரிடம்(Estimator )குடுத்து அதற்க்கான ஒருஒரு ஐட்டதிர்க்கும் (Quentities for each item )ஆகும் மொத்த அளவுகளை தெரிந்து கொள்க .உங்கள் Engineer கிட்டயும் போட்டு தர சொல்லுங்க . அவரிடமே கூலி , பொருள்செலவு ஒருஒரு ஐட்டதிர்க்கும் போட சொல்லி ஒரு மொத்த பட்ஜெட் தெரிஞ்சுக்குங்க .(சென்னையில் எச்ட்டிமேட்டர் நிறைய இருக்காங்க . Lot of Estimators are Available in chennai )
இதை BOQ (Bill Of Quantities ) னு சொல்வாங்க , இந்த மாதிரி ஒன்னு உங்க கைலயும் இருக்கணும் . Rate கூலி , பொருள் , கட்டுவோரின் லாபம் எல்லாம் சேர்த்தே இருக்கும் .
4 .கூலி சம்பளம் (பெரியாள்-ஆண் ,சித்தாள்-பெண் , கட்டுபவர் -mason ), தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்கள் செங்கல்/நம்பர் , சிமெண்ட் /மூட்டை ,ஜல்லி /லோட் ,மணல்/லோட் , கம்பி /டன், பலகை /ஐட்டம் ,பெயிண்ட் , ஜன்னல் , கதவு , டைல்,marble ,ஆணி வரைக்குமான விலையினை தெரிந்து கொள்க . எவ்வளவு ஆகும் என்ற முன்கனிப்பும் வேண்டும் .
5 .முன்கணிப்பு முழுவதும் சரியாய் இருக்காது , இருந்தாலும் ஒரு 90 % சரியாய் வரும் . நீங்கள் எதுவும் தெரியாமல் இருந்தால் வீடு கட்டி தருபவர் உங்களை ஏமாற்ற பல வழிகள் உண்டு . இன்றைய காலகட்டத்தில் கூலி ஆட்களின் சம்பளமே மொத்த பட்ஜெட்டில் பாதி வந்து விடும் இதில் மிக கவனம் வேண்டும் .
6 .கடன் வாங்கி வீடு கட்டினால் முடிந்த வரை விரைவில் கட்டி முடிக்க பாருங்கள் . கிராமப்புறங்களில் வீடுன்னா படபடன்னு கட்டி முடிக்க கூடாது திருஷ்ட்டி விழும் போட்டுத்தான் கட்டணும்னு சொல்வாங்க , அதையெல்லாம் காதுல போட்டுக்காதீங்க. போட்டு கட்டினா வட்டிதான் குட்டி போடும் , அப்புறம் உங்க தலைல துண்டதான் போடணும் .
7 . முடிஞ்ச வரைக்கும் கட்டினத இடிச்சு கட்டாதீங்க.
8 .முடிஞ்சவரைக்கும் பட்ஜெட்க்குள்ள கட்டி முடிக்க பாருங்க .
9 .சென்னையில் இடம் வாங்கி நாலைந்து நண்பர்கள் சேர்ந்து வீடு கட்டிக்கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தால் , அதில் ஒருவரே முழுபொறுப்பும் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினாலும் அவரை முழுவதும் நம்ப வேண்டாம் .
10 . பழகினவர் , நண்பர் என்று அவர்கள் வாய்மொழியாய் கூறுவதை மட்டும் நம்பி பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டாம் . பின்னாளில் பிரச்னை வந்தால் பத்திரம் மட்டுமே பேசும் , அவர் வாய்மொழியில் சொன்னவைக்கு சாட்சி இல்லை .
11 . நீங்கள் கொடுக்கும் ஒருரூபாய் பணமாக இருந்தாலும் உரியவரிடம் முறையாய் கையெழுத்து உடனே வாங்குதல் நலம் , கூடவே ஒரு சாட்சி கையெழுத்தும் இருத்தல் அவசியம் .நீ பணமே தராம என் கையெழுத்தை போட்டு ஏம்மாதிட்டனு பின்னாளில் சொல்ல முடியாது .
12 .இன்றைய மார்க்கெட் நிலவரப்படி(பொருள் , ஆள்கூலி ) சென்னை போன்ற பெருநகரங்களில் 1200 /sft க்கும் கிராமப்புறங்களில் 700 /sft க்கும் சொந்த வீடு கட்டலாம்.இதை வைத்து நீங்களே ஒரு சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம் .
13 .பொருள்களின் விலை பட்ஜெட் போடும்போது ஒருமாதிரியாகவும் கட்டும் காலத்தில் கூடவும் வாய்ப்புள்ளது , இதனால் பட்ஜெட் கூடலாம் அது ஒரு 10 % வரை மட்டுமே பட்ஜெட் தொகையிலிருந்து கூடலாம்.