இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன்னு இருந்த என்னை பதிவே போட வச்சுடீங்க .பத்திரிகைகளுக்கும் பதிவுலகத்துக்கும் என்ன வித்தியாசம் ? ஒரு ஒரு பதிவரும் நித்யா பத்தி ஒரு பத்து பதிவுகளுக்கு மேல போடுவாங்க போல , விட்டா கொஞ்ச நாள் பிறகு "நித்யாவின் என் பதிவுலகத் தொகுப்புகள் " என்று புத்தகம் வெளியிட்டாலும் ஆச்சர்யம் இல்லை .எல்லாரும் back up எடுத்து வச்சுடுங்க பிறகு என்னை மாதிரி கூகிள் ஆண்டவர் கருணை பட்டால் உங்கள் நித்தியானந்த ஆண்டவரின் பதிவுகளை நீங்கள் இழக்க நேரிடலாம் ,ஒருவேளை அவரின் சக்தியினால் மீட்டெடுக்கலாம்.
நித்யாவைப் பற்றிய பலரின் பதிவுகளை படித்து அதற்க்கு எதிர்வினை பக்கவினை என்று பலரின் அடுத்த பதிவுகள் ஒரு தொடர்கதை போல் போய்க் கொண்டே இருக்கிறது . நீ நித்யா பதிவு போட்டிட்டியா ஐயோ நான் இன்னும் போடலையேனு நடு ராத்திரில உக்காந்து போட்ட பதிவுகள் எத்தனையோ ? ஏதோ ஒரு கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் வன்முறையில் மரணமாம் , அதைப் பற்றி மேற்கொண்டு எதுவும் தெரியவில்லை . மீடியாக்களும் அதை இரண்டு வரி செய்தியாக்கி விட்டன , பதிவுலகமும் கூட . .வாரத்துக்கு ஒரு பரபரப்பு செய்தியும் நமக்கு கிடைச்சுகிட்டேதான் இருக்குது . நயன்தாரா-பிரபுதேவா , வேட்டைக்காரன் , அவதார் , அசல் etc இதில் எனது பார்வை உனது பார்வைன்னு,இப்போ நித்யா முடியல . ஏதாவது புதுசா வந்துருக்கான்னு சல்லடை போட்டு தேடனும் போல .பல பேர் நித்யா ஜூரம் போகட்டும்னு ஒருவேளை காத்திருக்கலாம் என்னைப்போல் .
நித்யா போய் இப்பொழுது கல்கி மேல் சிலரது பார்வை விழுந்திருக்கிறது .என்கூட கல்லூரியில் பயின்ற என் சக வகுப்பு பெண் கல்கியே கிருஷ்ணரின் கலிவுலக கல்கி அவதாரம் என்று கழுத்தில் ஒரு மாலையும் அதில் கல்கி தம்பதியினரின் போட்டோவும் என்று இருப்பாள். "கல்கி பகவான் " சொற்ப்பொழிவு கேட்க்க திருநெல்வேலியில் இருந்து சென்னை வருவாள் கலி முத்திடுச்சுடா சாமின்னு இருப்போம் . ஒருவேளை இனி கல்கி பற்றி வருங்காலத்தில் ஏதாவது கேட்ட செய்தி வந்தால் அவள் கழுத்தில் இருக்கும் மாலையும் கல்கியின் போட்டோவும் கூட காணமல் போகலாம் . படித்த மெத்த அறிவாளிகளே இப்படி இருக்கும் பொழுது யாரை நொந்து என்ன பையன் ? இதை ஒரு செய்தியாக்கி பணம் பார்க்கும் ஊடகங்களுக்கும் பதிவு எழுதி ஹிட்ஸ் சம்பாதிக்கும் பதிவுலகத்திர்க்கும் பெரிதொன்றும் வித்தியாசம் இல்லை .
