தேடல்
இரவினில் என்னுள்
என்னைத் தேடினேன்
தூக்கம் தொலைந்து போனது
தேடல் இன்னும் தொடர்கின்றது !!!
நினைவுகள்
சின்னஞ்சிறு இதயத்தில்
ஆயிரமாயிரம் கனமான
நினைவுகள் .
தோல்விகள்
மனதை பக்குவப்படுத்த
இறைவனால் கொடுக்கப்பட்ட
வரங்கள் .
கண்ணீர்
மனதில் உருவாகி
கண்களில் கொட்டும் அருவி
துக்கத்திலும் சந்தோசத்திலும் .
தென்றல்
இதமாய் வருடிச் செல்லும்
இறைவனின் படைப்பு .
கவிதை
இதயச் சுமைகளை
இறக்கி வைக்க உதவும்
ஆயுதம் .
தனிமை
என்னையே நான் அறிகிறேன்
என் இனியத் தனிமையில் .







