1 . பள்ளியில் என் புத்தம்புதிய சைக்கிள் என் அண்ணா ஆசையா என் பெயர் எழுதி குடுத்தான் . பள்ளி முடிந்து சைக்கிள் எடுக்கும்பொழுது பஞ்சர் ஆயிருக்கும் . சரின்னு நானும் ஒரு 1 .5 KM உருட்டிகிட்டே வருவேன் , கடுப்பா வரும் . பஞ்சர் கடையிலதான் தெரியும் ஒரு பத்து பஞ்சர் இருக்கும் . அப்போதான் சொன்னாரு இது முள்ளு குத்தி வந்தது இல்லமா யாரோ வேணும்னே ஊசி வச்சு வீல சுத்தவிட்டு பஞ்சர் பண்ணி இருக்காங்க என்று . வேற என்ன செய்ய பஞ்சர் போட்டு வீடு வருவேன் . இது பல முறை நடந்தது .நான் வர நேரம் லேட் ஆகியும் இன்னும் வந்து சேரலன்னு அப்பா இல்ல அண்ணா என்னை தேடியே வந்துடுவாங்க . யார்டா இது தொடர்ந்து நம்ம சைக்கிள பஞ்சர் பண்றாங்கன்னு எனக்கும் ஒன்னும் புரியல. பையன் வர வாய்ப்புக்கள் குறைவு . தனித்தனி கிரௌண்ட்லதான் சைக்கிள விடுவோம் . பொண்ணுங்க சைடு கிரௌண்ட்க்கு பசங்க வரவும் கூடாது . கடைசி வரைக்கும் கண்டு பிடிக்க முடியல . நானும் எத்தன முறை டயர் மாத்துறது ? என் அண்ணா வெறுத்து போய் என் பெயரை அழிச்சுட்டான் , நிஜமா அதுக்கு பிறகு அந்தமாதிரி நடக்கவே இல்ல .
2 . காலேஜ்ல ஒரு நிகழ்ச்சிக்காக நம்ம பாப்பையா வந்தார் . காலேஜ் பழக்கம் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மாணவர்களின் பங்களிப்பாக கவிதை , ஓவியம் etc பெரிய சார்ட் பேப்பரில் செய்து குடுக்க சொல்லுவாங்க . ஒருமுறை " தீபம் " என்ற பெயரில் விழா நடந்தது . நானும் ஒரு சார்ட் பேப்பர் முழுவதும் வரும்படி கொஞ்சம் பெரிய கவிதை எழுதி குடுத்தேன் , ஸ்டேடியம் இல்லாத காரணத்தினால் நிகழ்ச்சிகள் எல்லாம் எக்ஸாம் ஹால்லதான் நடக்கும் . அதற்க்கு போகும் வழியெங்கும் நுழைவாயிலிருந்து இருபுறமும் சுவர்களில் எங்கள் சார்ட் பேப்பர் ஓட்டபற்றிருக்கும் . நானும் என் சார்ட் தேடுறேன் கண்ணிலேயே படல . என் வகுப்பு மாணவன் வந்து மதார் கவிதை நல்லா இருக்குனு சொல்றான் . என்னப்பா சொல்ற என் சார்ட் காணோமே என்று நான் கேட்க அவனும் அது ஒட்டபட்டிருந்த இடத்துக்கு கூட்டிட்டு போனான் . நுழைவாயில் வெளிப்புறம் உள்ள கண்ணாடியில் அது ஒட்டப்பட்டு கிழிக்கப்பட்ட சுவடுகள் மட்டுமே மிஞ்சி இருந்தது . அந்த இடம் எல்லாருடைய பார்வைக்கும் படும் இடம் என்பதால் ஏதோ ஒரு நல்ல உள்ளம் மனசு பொருக்காம அதை கிழிச்சுருக்கு.இன்னமும் அது யாரென்று தெரியல . கண்டிப்பா பொண்ணுங்க அதை பண்ணிருக்க மாட்டாங்க , ஏதோ ஒரு பையன்தான் . பசங்கதான் என்ன நடந்தாலும் காட்டி கொடுக்க மாட்டாங்களே !!!!!!!!!!
3 .என்வாழ்விலே மறக்க முடியா ஆள் . என் நிம்மதியை 3 மாதம் கெடுத்த ஆள் . எங்கிருந்தோ என் மொபைல் நம்பர் தெரிஞ்சு எனக்கு கால் வந்தது . நானும் கால் அட்டென்ட் பண்ணுவேன் எதிர்முனையில் அமைதி மட்டுமே இருக்கும் .ஆள் போற இடம் எல்லாம் காயின் போன் ஒரு ரூபா போட்டு எனக்கு கால் பண்ணிடும் . கால் கட் ஆன அடுத்த நொடியே நான் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசினா போன் உரிமையாளர் கால் பண்ணது யாருன்னு தெரியலன்னு சொல்லிடுவாங்க . ஏர்டெல் ,ஏர்செல் ,வோடபோன்,பிஸ்என்எல் இருக்குற எல்லா சிம்ளையும் ஒரு நம்பர் . அவங்கள தொடர்பு கொண்டு பேசினாலும் நம்பர் உரிமையாளர் பத்தின விபரங்கள் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க . என் நண்பர்கள் எல்லாம் என் நம்பர் மாத்த சொன்னாங்க . எவனோ ஒருத்தனுக்காக நான் நம்பர் மாத்தவும் விரும்பல . மொபைல் வாங்கின நாள்முதலாய் என்னிடம் இருக்கும் நம்பர் அது .நானும் திட்டி பார்த்துட்டேன் .என் அண்ணா என் நண்பர்கள் எல்லாம் திட்டிட்டாங்க ஆள் அசரவே இல்ல . ஏதாவது பேசினாதானே, கால் வரும் மத்தபடி ரோட்ல போற வண்டி சத்தம் காக்கா கத்துறது இப்படித்தான் கேக்கும் . நானும் அப்புறம் கால் அட்டென்ட் பண்ணி அப்படியே வச்சிருவேன் அவன் பாலன்ஸ் போகட்டும் . என் மொபைல் வேற சோனி குறிப்பிட்ட நம்பர் மட்டும் குடுக்குற வசதிகளும் இல்ல , என் மொபைல் காண்டாக்ட்ஸ் லிஸ்ட்ல S1 ஆரம்பிச்சு ஒரு S 12 வரை போச்சு . ஒருமுறை வந்த பப்ளிக் நம்பர் மீண்டும் வராது. ஆரம்பம்னு ஒன்னு இருந்தா முடிவுன்னு ஒன்னு நிச்சயம் உண்டு . நானும் எவ்வளவோ திட்டி பார்த்தும் முடியாத அந்த நம்பர் டார்ச்சர் ஒருநாள் நின்னு போச்சு . ஒருநாள் நான் கால் அட்டென்ட் பண்ணி ரொம்ப அமைதியா பொறுமையா பேசினேன் .ஒரு 5 வரிதான் பேசினேன் . ரொம்ப மான ரோசம் உள்ளவன் போல அதன் பிறகு கால் வரல . S1 -S12 எல்லாம் அப்புறம் அழிச்சேன், நான் கடைசியா பேசினது கண்டிப்பா சொல்லனுமா ? .................சென்சார் கட் .
.இதை படிக்குரவங்களுக்கு ஒரு வேண்டுகோள் பொண்ணுங்க நம்பர்க்கு ரீசார்ஜ் பண்ணும்போது தெரிந்த நபர்களிடமோ அல்லது நம் வீட்டின் அருகில் இருக்கும் தெரிந்த கடைகளிடமே பண்ணுவது நல்லது . கண்ட இடங்களில் ரீசார்ஜ் பண்ணுவதால் இதுபோல் ஆபத்துகள் வரலாம்
என் ப்ளாக் 2 முறை தொலைந்து போனதால் மறுபடியும் அனைத்தும் பப்ளிஷ் பண்றேன் . இதை ஏற்கனவே படித்தோர் பொறுமை காக்கவும் . ட்ராப்ட் ல் வைக்க முடியாமல் ஒரு முழு back up எடுக்கவே இந்த முயற்சி .



