skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Monday, March 22, 2010

நானும் பொங்கலும்

 

பொங்கல் நாளில் எழுதியது , ப்ளாக் காணமல் போனதால் மீள்பதிவு .






ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு பத்து நாட்கள் முன்னமே வீட்டில் பொங்கல் வேலை களைகட்டும் . (கல்லூரி நாட்களில் விடுதியில் இருந்ததால் தப்பித்தேன் ) +2 வரை ..............எப்படியும் பொங்கலுக்குள் வீட்டில் எல்லோரும் எடை குறைந்துவிடுவோம் .(பின்ன வருஷம் ஒருமுறைதான் சுத்தம் செய்வோம் ) ஏனடா இந்த பொங்கல் வருகிறதென்று சில வேளைகளில் சலித்ததுண்டு (வேலைப்பளுவினால் )



                           பொங்கல் முன்னிரவு 3 மணிவரை நானும் அக்காவும் சுண்ணாம்பினால் வீடு முழுவதும் போடும் கோலங்கள் அதிலே பல வண்ணங்களில் பெயிண்ட் பண்ணும் அண்ணா விடியற்காலை நான்கு மணிக்கே பொங்கல் வைக்கும் அம்மா . பொங்கலன்று  ஏழு மணிக்கே துயிலேளுகை எனக்கு (முன்னிரவு போட்ட கோல கலைப்புதாங்க ) சில நேரங்களில் பால் பொங்கிருக்கும் .( சாப்பிடுவதுதானே நம் கடமை )


                        பின்பு தினசரி பார்த்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே நான் ,அப்பா , அக்கா , அண்ணா வென குடும்பமாய் கிலோகணக்கில் காய்கறி வெட்டுவோம் .1 மணி வாக்கில் காக்கைக்கு சோறு போடும்வரை சத்தியமாய் நான் குளித்திருக்க மாட்டேன் இதற்காகவே வருடாவருடம் நான் வாங்கிய திட்டுகள்................. இன்றும் தொடர்கின்றன .

(அக்கா மணமாகி வேறு வீடு போயாச்சி , நானும் இங்கே சென்னையில் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி வீடு போய் சேரும்வரை படும்பாடு , இதிலே கோலம் போட சொல்லி அம்மா கெஞ்சும்போது பயண களைப்பினால் போடவும் முடியாது , அக்கா இல்லாமல் போட மனதும் இல்லை இதனால் சென்ற வருடம் அம்மாவிடம் வாங்கிய திட்டுகள் , இந்த வருடம் கோலம் ??? ஏதோ கோலம் போட்டேன் ,கம்ப்யூட்டர் பார்த்து நிறைய கோலம் மறந்து போச்சுங்க. அம்மாதான் அவ இருந்தா வரைக்கும் நல்லா கோலம் போடுவா நீயும் இருக்கியேன்னு ? அப்புறம் ஏன் அவளை கல்யாணம் பண்ணி குடுத்தீங்க கோலம் போட வச்ருக்கலாம்ல என்று கொஞ்சம் செல்ல சண்டை . அப்புறம் என் அக்கா வரைந்த கோலம் மேலேயே கொஞ்சம் போட்டேன் கொஞ்சம்தான் போட முடிஞ்சது . எனக்கு பூக்கோலம்தான் போட முடியும் அவ பயங்கரமா நெளிவுக் கோலம் போட்ருக்கா .எப்படி பார்த்தாலும் எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்கணும்னு தெரியல , நான் முழிச்ச முழியப் பார்த்து அண்ணாவும் அம்மாவும்  ஒரே கிண்டல் கோவத்துல  ஏதோ போட்டு வச்சேன் . அடுத்த மாசம் வீட்டுக்கு அக்கா வருவா . நான் போட்ட அவ கோலம் பார்த்து ரத்த கண்ணீர் விடப்போறா .)


                             அடுத்து பொங்கல் விளையாட்டு விழா , ஊர் இளவட்டங்கள் எல்லாம் சேர்ந்து மூன்று மணிக்கு மைக்கில் ஊர் பெரியர்வர்கள் அனைவரும் ஊர் கோவில் மைதானதிற்கு வரவும் .சும்மா களைகட்டும் மைதானம் .+2 வரை பெண்களுக்கான போட்டியில் அதிகப்படியான போட்டி எனக்கும் என் அத்தை மகளுக்குமே , வெற்றியும் எங்களுக்கே . slow சைக்கிள் race இல் பழக்கதோசத்தில் வேகமாய் ஒட்டிசென்று முதல் பரிசு எனக்கே என்று சொல்லி பின்பு நிஜம் புரிந்ததும் அசடு வழியும் இளவட்டங்கள் !!! யானைக்கு கண் , வால் வரைய கண்களை கட்டிவிட்டு பிறகு சுற்றி விடுவார்கள் என்னதான் அதற்க்கு முன்பே எல்லைகளை பார்த்து மனப்பாடம் செய்து வைத்து இருந்தாலும் சுற்றுகிற சுற்றில் மதியம் சாப்பிட்ட பொங்கல் நெஞ்சுக்கு வந்துவிடும் பிறகு எங்கிருந்து கண்,வால் வரைய ?? இருந்தும் முயலும் தைரியசாலிகள் தப்பான வழியில் போகும்பொழுது மட்டும் ஊக்கப்படுத்தும் வாண்டுகள் . கடைசியில் கட்டவிழ்த்து விடும்போது யானை வரையப்பட்ட போர்டு ஒருபுறமும் நாம் ஒருபுறமும் நிற்ப்போம் . அப்போது வழியும் லிட்டர் அசடு .இப்படியே தொடரும் பல போட்டிகள் இரவு வரை .சில போட்டிகள் திருமணமானவர்கள் vs  திருமணம் ஆகாதவர்கள் . எப்போதுமே திருமணம் ஆனவர்களே ஜெயிப்பாங்க .இந்த வருட பொங்கலில் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி திருமணமானவர்கள் vs  திருமணம் ஆகாதவர்கள் , நான் தப்பிச்சுட்டேன் . போன பொண்ணுங்க பாவம் . நான் தூர இருந்து பார்த்து சிரிச்சேன் . நான் இருக்குற சைஸ்க்கு கயிறு இழுக்க போனா அந்த கயிறே என்னை வேண்டாம்னு சொல்லிடும் . எதுக்கு அவமானம் .

                         இரண்டாம் நாள் சைக்கிள் ஓட்டம் நானும் பங்கு பெற்றதுண்டு , ஸ்கூல் பயணம் சைக்கிள் என்பதால் தைரியமாய் போவதுண்டு , அம்மாதான் பயப்படுவாங்க (வேகமா வரும்போது விழுந்துட்டா அடிபடுமே ) நமக்கு பயம் எல்லாம் இல்ல . சும்மா புயல் மாதிரி வருவேன்ல .( ஸ்கூல் போகும்போதே கை பிடிக்காம சைக்கிள் ஓட்டுவேன் ) .காயமும் வாங்கிருக்கேன் , இருந்தாலும் பங்கு பெறுவதில் ஒரு சந்தோசம் , (இதெல்லாம் பள்ளிவரையே கல்லூரி போனபின் நானேகலந்துகொள்ளவில்லை). அன்றைய நாள் பானை உடைப்புடன் முடிவுறும் . ஆண்களும் , பெண்களுமாய் கட்டப்பட்ட கண்களுடன் கையிலே கம்புடன் பானையைத் தேடும் பொழுது பாவமாய் இருக்கும் நல்ல காமெடி யும் அதுதான் , இறுதியில் யாராவது உடைத்துவிடுவார் உடைத்தவர் முகத்திலே வருமே ஒரு சந்தோசம் கின்னஸ் க்கும் மேலானது . இரவு ஆட்டம் பாட்டம் , பட்டிமன்றம் (நானும் பேசிருக்கேன் ) பரிசு வழங்கும் விழா உடன் இனிதே நிறைவுறும் .இப்பொழுது ஊர் கோஷ்டி சண்டை என்று இரண்டு பட்டு நிற்கிறது . (இரண்டாவது கோஷ்டி எங்கள் குடும்பம் என்ன பண்ண எங்க குடும்பத்தையும் இதிலே சேர்த்துட்டாங்க எல்லாம் என் சித்தப்பா புண்ணியத்தால் , )

பொங்கல் என்றாலே மறக்க முடியாதது அம்மா வைக்கும் பொங்கல் குழம்பு , விளைகிற பச்சை காய்கறிகள் , கிழங்குகள் ,நவதானியங்கள் எல்லாம் சேர்த்து இடிமசாலா போட்டு பெரிய மண்பானை நிறைய வைப்பார்கள் . அதையே ஒருவாரம் சுண்ட வைத்து சாப்பிடும்போது கண்டிப்பாய் அதற்க்கு நிகரான சுவை அஞ்சப்பரிலும் , நலாசிலும் கிடைக்காது அவ்வளவு கைப்பக்குவம் அம்மாவிடம் .


Posted by மதார் at 11:37 AM
Labels: பொங்கல்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ▼  March (20)
      • பெண்ணே இது நியாயமா ?
      • பெண்ணாய் பிறத்தலே பாவமோ
      • எப்போ அத்தே ஊருக்கு வருவ?
      • நானும் பொங்கலும்
      • ஹைக்கூ கவிதைகள்
      • கல்யாணம்
      • உணர்தலும் புரிதலும்
      • தாமிரபரணி
      • என்டோஸ்கோபி என்ற நரக வேதனை (பெண்களுக்காக )
      • சொந்த வீடு கட்டுமுன்- கவனிக்க வேண்டியவை
      • பெயர் அர்த்தம் கூறுக !
      • பள்ளிக்காலமும் நானும் -4 ( முற்றும் )
      • பள்ளிக்காலமும் நானும் -3
      • பள்ளிக்காலமும் நானும் -2
      • பள்ளிக்காலமும் நானும் -1
      • சொந்த வீடு வாங்குமுன் -கவனிக்க வேண்டியவை
      • தமிழ்மணம் , தமிலிஷ் -ஓட்டு வியாபாரம்
      • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
      • திருந்தவே மாட்டீங்களா ?
      • சில்லறை கொடுக்கா சில்லறை மனிதர்கள் .
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio