skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, March 23, 2010

எப்போ அத்தே ஊருக்கு வருவ?

              எப்போ அத்தே ஊருக்கு வருவ? என் அண்ணன் பையனிடமிருந்து வந்தக்  கேள்வி இது . கேக்கும்போது கொஞ்சம் கண்களில் கண்ணீர் . அவனுக்கு இப்போ 7  வயசு . நான் காலேஜ் படிக்கும்போது , சென்னை வந்ததிலிருந்து வீட்டுக்கு போகும்போதெல்லாம் எனக்கும் அவனுக்கும் சண்டை வரும் . முக்கியமா டிவி ரிமோட் சண்டை . அவன் அதை எடுத்து மறைத்து வைக்க அவனிடமிருந்து நான் பிடுங்க .சில நேரம் என்னை தேட விட்ருவான் .

                வீட்டிலே நான் கடைசிப்  பிள்ளை என்பதால் மற்றவர்களின் அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் பழகியே வந்த எனக்கு நான் அதிகாரம் பண்ண அவன் கிடைச்சான் . பெரும்பாலும் எங்களுக்குள் ரிமோட் சண்டைதான் வரும் . 4  நாள் விடுமுறையில் ஊருக்குப்  போனா முதல் நாள் " ஐ எங்க அத்த வந்துட்டா" . இரண்டாம் நாள் "அத்த நீ எப்போ தூங்குவ ?" நான் சொல்லிருப்பேன் நான் தூங்கின பிறகு நீ சுட்டி டிவி பாரென்று . பாதி நேரம் தூங்கியே கழிப்பேன் . அவனும் பொறுமையா இருப்பான் . கொஞ்ச நேரம் போன பிறகு"எண்ணப  நீ மட்டும் டிவி பாக்குற , என் சானெல் வைக்க மாட்டேங்குற ? " என்று கெஞ்சுவான் , நான் காதிலேயே வாங்கமாட்டேன் . அழ ஆரம்பிச்சுருவான் . அவனுக்கு என்ன பிடிக்குதோ அதத்தான் நாம பாக்கணும் அது விளம்பரமா இருந்தாலும் . உடனே எனக்கு கோவம் வரும் " என்னல எப்போ பார்த்தாலும் சுட்டி டிவி பாக்குற ? (நான் +2 வரைக்குமே கார்டூன் பார்த்துருக்கேன்) . சில நேரம் ரிமோட் குடுத்து தூங்க போய்டுவேன் . மூன்றாவது நாள் "அத்த நீ எப்போ ஊருக்கு போவ ?" , நான் "எதுக்குல கேக்குற ? " ம்ம் டிவி பாக்கணும் .

              பல தடவ எங்களுக்குள் சண்டை நடக்கும்போது என் அம்மா "அவன்கிட்ட போய் சண்டை போடுறியே " ஏன்  அவன அழ வைக்க . அப்போ அவனுக்கு வயசு 6 , எனக்கு அவன விட 4 மடங்கு வயசு . நானும் கொஞ்சம் பாரபட்சத்தோடதான்  நடந்திருக்கேன் . அவன் தங்கச்சினா எனக்கு உயிர் . அதுவும் என்கிட்டே அவ்ளோ பாசம் . என் அம்மா , அண்ணா எல்லாம் அவளுக்கு மருந்து குடுக்க போராடும்போது நான் குட்டிம்மா வாய் காட்டு குடிசுருமானு என் கையால குடுத்தா எதிர்ப்பு காட்டாம அப்படியே நான் சொல்றத செய்வா, அண்ணாவும் அப்படி என்னல உன்கிட்ட இருக்கு இது இப்படி இருக்கு உன்கிட்டனு அதிசயமா கேட்பான் , எனக்கும் தெரியல. (பெரியவங்களுக்கு எல்லாம் நான் திமிர் பிடிச்ச பொண்ணா  தெரிவேன் முதல் பார்வையில் , குழந்தைங்க என்கிட்டே அவ்ளோ ஒட்டிப்பாங்க )  .

            இவன் மேல பாசம் உண்டு ஆனா கொஞ்சம் கண்டிப்பும் . ஒருநாள் நடந்த ஒன்று என்னையே மாத்திடுச்சு . அப்போ நான் வீட்ல இருந்த சமயம் குலசை திருவிழா . வேஷம் போட்ட சாமிங்க எல்லாம் வீட்டுக்கு வருவாங்க . இவனும் காணிக்கை போட்டு விபூதி வாங்கிருக்கான் . நான் வழக்கம் போல தூங்கிட்டு இருக்கேன் . இவன் வந்து அத்த கை எடுன்னு சொல்லி என் நெத்தில விபூதி பூசுரான் . அந்த நொடி என்மேல எனக்கே வெறுப்பு வந்தது . ஒரு சின்னப்  பையன் கிட்ட இருக்குற குணம்கூட எனக்கு இல்லாம போயிடுச்சேன்னு. அதுக்கு பிறகு எங்களுக்குள்ள ரிமோட் சண்டை வந்தது இல்ல . இப்போ நானும் அவன்கூட டோராவின் பயணம் பாக்குறேன் .எப்போ நான் வீட்டுக்கு போனாலும் நான்தான் அவன குளிக்க வைப்பேன் . இப்போலாம் வெக்கப் படுறான், அவனுக்குத்  தெரியுமா எத்தனை வயதானாலும் அவன் எனக்கு குழந்தை என்று ? .அவன்   8 மணிக்கே தூங்கிடுவான், பெரும்பாலும் நான் போன் பண்றதே 9 க்கு மேலதான்  .போன வாரம் போன்ல பேசும்போது,என்னல நான் போன் பண்ணும்போதெல்லாம் தூங்கிடுற , எத்தனை மணிக்கு நீ தூங்குற என்று கேட்க ,"அதுவா நான் 1 மணிக்கே தூங்கிடுவேன் " னு சொல்லும்போது அவன் குழந்தைத்தனம் . சரில அத்தை  வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரணும் ? கேட்டா அவன் பதில் "எனக்கு சப்போட்டா பழம் , முறுக்கு இப்படித்தான் அவன் லிஸ்ட் போகும் . சப்போட்டா பழம் அவனுக்கு 3  வயசுல இருந்து நான் பழக்கிவிட்டது .அப்பா , அண்ணா வாங்கி குடுத்தாலும் பெரும்பாலும் அவனுடைய லிஸ்ட் என்னிடம் இதுவாகத்தான் இருக்கும் . நானும் அவன் கேட்டது எல்லாமே வாங்கி குடுத்துடுவேன் .( எனக்கு சின்ன வயசுல இந்த மாதிரி அத்தைங்க இல்லியே ? அவங்களுக்கும் கல்யாணம் ஆய்டுச்சு .)

            அம்மா திட்றாங்க ஏன்  வரும்போதெல்லாம் டிரஸ் வாங்கிட்டு வர வீடு முழுக்க நீ வாங்கிட்டு வந்ததுதான் இருக்கு . அம்மாகிட்ட சொல்லிட்டேன் எனக்கு கல்யாணம் ஆகுற வர நாந்தான்  இவங்களுக்கு வாங்கித்  தருவேன் அதை நீ ஏதும் சொல்லகூடாதுன்னு . 3 பேரு என்ன அத்தைன்னு கூப்பிட இங்கிருக்கும் சின்ன அண்ணா பொண்ணு மட்டும் ஆன்டி என்று கூப்பிடும்போது அந்த அத்தை பாசம் கொஞ்சம் மிஸ்ஸிங் . என்ன பண்ண அவளை அப்படியே வளர்த்துட்டாங்க . இப்போ பொறந்து 7 மாசமே ஆன குட்டி சிவாகிட்ட "என்னல அத்தை பாத்து அழற , அப்புறம் அத்தை உன்ன பாக்க வர மாட்டேன்" என்று அவங்க ஆன்டி கத்து கொடுக்குமுன் நான் அத்தை சொல்லிகுடுக்குறேன் . வேளைக்கு வந்த பிறகு வந்த முதல் தீபாவளியில் அம்மா , அப்பா , அக்கா , பெரியண்ணா , சின்ன அண்ணா குடும்பம் என்று ஒருவர் விடாமல் புது டிரஸ் என்னுடைய சம்பளத்தில் வாங்கி குடுக்கும்போது என் அம்மா கண்ல வந்த கண்ணீர் .( இதுவரைக்கும் நீங்க வாங்கி குடுக்கலனா இதுக்கு பிறகாவது வாங்கி குடுங்க . நாம வாங்கி குடுக்குற ஒரு கதர் துணி கூட பெத்தவங்களுக்கு பட்டுதான். )   அதன் பிறகு வந்த  தீபாவளியில் எல்லாம் குட்டீஸ்க்கு மட்டும்தான் டிரஸ் . அதுவே 4 பேருங்க . இப்போ புது குட்டி வந்து 5 ஆய்டுச்சு .

          அடுத்த மாசம் ஊருக்கு மறுபடியும் புதுத்துணியுடன் , 3 பேரையும் நானே  குளிக்க வச்சு என் கையால  போட்டு விடனும் . இன்னமும் அவன்கிட்ட சொல்லல நீங்களும் அதுவரைக்கும் சொல்லாதீங்க . கண்டிப்பா ரிமோட் சண்டையும் போட மாட்டேன் . உங்க மேல சத்தியம் .
Posted by மதார் at 10:12 AM
Labels: அத்தை
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ▼  March (20)
      • பெண்ணே இது நியாயமா ?
      • பெண்ணாய் பிறத்தலே பாவமோ
      • எப்போ அத்தே ஊருக்கு வருவ?
      • நானும் பொங்கலும்
      • ஹைக்கூ கவிதைகள்
      • கல்யாணம்
      • உணர்தலும் புரிதலும்
      • தாமிரபரணி
      • என்டோஸ்கோபி என்ற நரக வேதனை (பெண்களுக்காக )
      • சொந்த வீடு கட்டுமுன்- கவனிக்க வேண்டியவை
      • பெயர் அர்த்தம் கூறுக !
      • பள்ளிக்காலமும் நானும் -4 ( முற்றும் )
      • பள்ளிக்காலமும் நானும் -3
      • பள்ளிக்காலமும் நானும் -2
      • பள்ளிக்காலமும் நானும் -1
      • சொந்த வீடு வாங்குமுன் -கவனிக்க வேண்டியவை
      • தமிழ்மணம் , தமிலிஷ் -ஓட்டு வியாபாரம்
      • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
      • திருந்தவே மாட்டீங்களா ?
      • சில்லறை கொடுக்கா சில்லறை மனிதர்கள் .
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio