skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, February 14, 2012

யாளி




எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக்க எடுத்து என்னருகிலேயே பலநாட்களாய் அதுவும் தூங்கியது . வழக்கம் போல் போன ஞாயிறு அன்று ஏற்பட்ட ஒருமணிநேர பவர் கட் , புத்தகத்தை கையில் எடுக்க வைத்தது . ஆரம்பித்ததுமே வேகமாய் செல்ல ஆரம்பித்தது . யாளியைப் பற்றிய தேடல் வெளிநாட்டில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாத ஆரம்பம் . உண்மையை சொல்லவேண்டுமானால் புத்தகம் வாங்கும் வரை அந்த உயிரினத்தின் பெயர் யாளி என்று எனக்கும் தெரியாது . கதையில் அதைப் பற்றிய விசாரணைக்கு உட்படும் மனிதர்களைப் போலவேதான் நானும் இருந்தேன் . அது போதி தர்மர் பற்றிய அறிமுகத்தைப் போல் இருந்தது .



தமிழ்நாட்டின் பழமையான பெருங்கோயில்களில் இருக்கும் தூண்களில் கண்டிப்பாய் யாளி இருக்கும் . அடியில் யானையை வைத்து யாளியை பெரியதாய் செதுக்கி இருப்பர் . யாளி என்ற உயிரினம் ஒரு காலத்தில் இருந்ததா அல்லது அது ஒரு கற்பனை உயிரினமா என்ற கேள்விதான் கதை முழுக்க நம்முடனே பயணிக்கிறது . படிக்க படிக்க அதில் சொல்லப்பட்டவை போலவேதான் பல சந்தேகங்கள் மனதில் வருகின்றன . எப்படி கண்ணால் கூட பார்க்காத ஒரு உயிரினத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் கோயில்களில் கொடுக்கப் பட்டிருக்கும் அதுவும் அத்தனை தத்ரூபமாய் இருக்கும் முப்பரிமாண சிலைகள் .

எங்கள் ஊர் சாஸ்தா கோயிலில் ஒரு பெரிய சாமி சிலை இருக்கும் எப்படியும் ஒரு பண்ணிரெண்டு அடி உயரத்தில் இருக்கும் . சாமிக்கு மாலை போட என அவருக்கு பின்னே படிக்கட்டுகள் வைத்திருப்பர் . சாமியின் பெயர் ஆழி . யாளி ,ஆழி உச்சரிப்பில் ஒரே மாதிரியே இருக்கின்றன . யாளி உருவத்தில் பெரிய விலங்கினம் அதாவது கோயில்களில் வடிமைக்கப்பட்டிருக்கும் சிலையின் அடிப்படையில் சொல்வதாய் இருந்தால் யானையைப்போல ஐந்து மடங்கு உருவத்தில் பெரியது . யாளியும் சரி சாமியும் சரி உருவத்தில் பெரியவர்கள் இதில் கூட ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கிறது . யாளிதான் மருவி ஆழி யாய் ஆனதோ என்னவோ .இந்தப் பெயர் ஒற்றுமையைக் கூட எளிதில் ஒதுக்கவும் முடியாது . தமிழனின் பழமையான நாகரீகம் என்று சொல்லப்படும் ஆதிச்சநல்லூரில் கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பட்டயம் இன்றளவும் சில வகுப்பு மக்களிடம் திருமணத்தில் அது வழக்கில் உள்ளது . ஆதிச்சநல்லூர் சுற்றியுள்ள பகுதியில் இந்த பழக்கம் இருந்து நான் பார்த்ததில்லை . அதேபோல் அங்கு கண்டெடுக்கப்பட்ட குதில்கள் போல் பல இன்றளவும் மக்களிடம் பயன்பாட்டில் உள்ளது . ஒரு குதிலின் வடிவமே இத்தனையாயிரம் ஆண்டுகளாய் அடுத்தடுத்த தலைமுறையினறினால் கடத்தி வரப்பட்டு இருக்கும்போது யாளி கூட கடத்தி வரப்பட்டு ஆழியாய் மாறியதோ என்னவோ .



கதையினூடே ஹீரோவின் உருவில் கதாசிரியர் மணி எதார்த்த இந்தியாவைப் பற்றி பேசுகிறார் . மக்களின் தொழில் அடிப்படையில் வந்த சாதி அமைப்பு அதன் அடிப்படையில் வந்த குடியிருப்புகள் என்று இலகுவாய் பெரிய விசயங்களை கடத்தி செல்கிறார் . அங்கங்கே வரும் வண்ணப்படங்கள் கதையின் வேகத்தை இன்னமும் கூட்டுகின்றன . எங்கே யாளி எங்கே யாளி என்று நம்மையும் காடு மலை என்று தேட வைக்கிறார் . உண்மையில் யாளி என்ற உயிரினம் இருந்திருக்குமா ? . நம் மூதாதையர் பல விசயங்களை நமக்கு கடத்தியது கல்வெட்டு மற்றும் கற்சிலைகள் மூலமாகத்தானே . அவற்றையெல்லாம் நம்பும் நாம் அதே சிலைகளில் தமிழகம் முழுக்க பரவிக்கிடக்கும் யாளியை மட்டும் கற்பனைச் சிலையாகவே எண்ணுகிறோம் .

ஒருவர் பார்த்து ஒருவர் என்று சிலைகள் வடித்திருந்தாலும் முதல் சிலை எந்த வகையில் வடிவமைக்கப் பட்டது வடித்தவர் யார் என்று படைத்தவரைத்தான் தேடுகிறது .யாருக்குத் தெரியும் ஒருகாலத்தில் டைனோசர் போலவே இதுவும் வாழ்ந்திருக்கலாம் . கதையில் வருவதுபோல் இதுவே டைனசராகவே கூட இருக்கலாம் . தமிழ்நாடு ,ஆந்திரா மாநிலக் கோயில்களில் மட்டுமே இச்சிலைகள் இருப்பதாய் மணி சொல்கிறார் . ஒருவர் கூடவா இதை பற்றிய தேடல் கொள்ளவில்லை .கடலில் புதைந்து போன லெமூரியாக் கண்டத்தைப் போல் நம் யாளியும் சிலைகளிலேயே புதையுண்டு போய்விட்டது . யாருக்குத் தெரியும் ஒரு காலத்தில் நம் யாளியும் ஒரு உயிரினமாய் இவ்வுலகுக்கு தெரிய வரலாம் . டையனோசர் தான் யாளியாகக் கூட இருக்கலாம் அப்படி ஒரு உண்மை இருந்தால் ஆதிச்சநல்லூர் மர்மம் போல நம் யாளியும் மறுபடியும் மண்ணுக்குள் புதைக்கப் படலாம் .தமிழன் சார்ந்த தீர்ப்புகள் ஒருபோதும் திருத்தப்படமாட்டாது .







Posted by மதார் at 9:59 PM
Labels: புத்தக விமர்சனம், மணி தணிகை குமார், யாளி
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ▼  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ▼  February (1)
      • யாளி
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio