என் முதல்பள்ளிபதிவு இங்கே
பள்ளிக்காலமும் நானும் -1
அப்புறம் எல்லார் பள்ளியிலும் வரும் பள்ளி ஆண்டு விழா , அதற்காகவே தவம் கிடப்போம் .அதுக்கான ஆசிரியர்களின் மெனக்கிடல் வேளைகளில் எங்களுக்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடக்காதே . எங்கள் வாழ்வில் ஒவ்வொரு வருடமும் அந்த நாட்கள் வசந்த நாட்கள் . எல்லா நாடக , நடன ஒத்திகைகள் முடிந்து ஒருவழியாய் இனிதே ஆரம்பிக்கும் ஆண்டு விழா . மாணவர்கள் , மாணவியர் என தனி தனியாய் அமர்ந்திருப்போம் . (நடுவில் ஒரு ஹிட்லர் எங்களை அதட்டிக் கொண்டே உட்க்கார வைத்திருப்பார் ).எங்கள் பள்ளியின் அழகே நடுவில் பெரிய stage சுத்திலும் மரங்கள் , வகுப்புகள் என்று வெயில் தெரியா வண்ணம் அழகாய் கட்டிருப்பர் .(கல்லூரி போனவுடன் நான் முதலில் தேடியது ஆடிட்டோரியம்தான் . பிறகுதான் தெரிந்தது வெள்ளிவிழா கண்ட எங்கள் கல்லூரியில் அது கிடையாது என்று .பின்ன அரசு கல்லூரி அல்லவா? இங்கே சென்னையில் தேர்வு நிமித்தம் பல மரமில்லா பள்ளிகளுக்கு போன பொழுது என் பள்ளி மனதில் ..........)
பள்ளியில் ஆண்டு விழாவின் போது மேடையில் என்னவோ அரசியல் கூட்டம் நடக்குற மாதிரி வெள்ளை வேட்டி சட்டையில் ஒரு 10 பேராவது உக்காந்திருப்பாங்க . எங்கள் முதல் சாபங்கள் அவர்களுக்கே . பின்ன மைக்க குடுத்தா விட மாட்டாங்க . மாணவர்கள் கை தட்டியே உக்கார வச்சுடுவாங்க . அப்புறம் வருவாரு பாருங்க ஒரு வில்லன் பெரிய நோட்டு ஒன்னு கைல இருக்கும் . ஆண்டரிக்கைனு ஆரம்பிப்பாரு மனுஷன் அசராம ஒரு அரை மணி நேரம் அந்த ஆண்டு முழுவதும் எங்கள் பள்ளி செய்த சாதனைகளைப் பட்டியலிடுவார் . பெரும்பாலும் அதைக் கேட்பதை விட அவர் காதில் இருக்கும் ஓட்டையை பார்த்த நேரங்களே அதிகம் . அவ்வளவு பெரிய ஓட்டை இருக்கும் . காது ஊசில குத்தினாங்களா இல்ல வேற எதிலும் குத்தினாங்களா தெரியல . அப்புறம் பரிசு குடுக்குற விழா அது இதுன்னு எங்க பொறுமையை ரொம்ப சோதிச்ச பிறகே கலை நிகழ்ச்சிகள் நடக்கும் .
முடிவில் நன்றியுரை . இதுவரை ஒழுக்கமாய் இருந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த மாணவக் கண்மணிகளுக்கு நன்றி . அப்போ ஒட்டுமொத்த சாபமும் எங்கள் ஹிட்லருக்கு போகும் . எங்களுக்குள்ளே "நாங்க எங்க இருந்தோம் அசைய விடாம நடுவுலே ஒன்னு கொக்கு மாதிரி நிக்குதே ", இது யாருக்கும் கேட்க்காது .
நான் சைக்கிள் ஓட்ட பழகியது அடுத்த பதிவில் .
