skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Monday, March 8, 2010

தமிழ்மணம் , தமிலிஷ் -ஓட்டு வியாபாரம்

                                  இந்திய நாட்டு அரசியல் மத்தியில் பி.ஜே .பி இல்லனா காங்கிரஸ் . தமிழ்நாட்டில் தி .மு .க இல்லனா அ.தி.மு.க . இத விட்டா நமக்கும் வேற வழியில்ல . புதுசா ஒரு கட்சி யாராவது ஆரம்பிச்சா அது நல்ல விசயங்களுக்கு போராடினாலும் நாம் அதற்க்கு எந்தளவு ஆதரவு குடுப்போம் ? மக்களிடம் அதன் நல்ல விசயங்களும் , கொள்கைகளும் எந்த அளவில் சென்றடையும் ? . சில வளர்ந்த பெரிய கட்சிகளுக்கே அடிமை ஆகிவிட்ட நாம் புதியவர்களின் வரவை மிகப் பெரிதாய் கண்டுகொள்ள மாட்டோம் . இதே நிலைமையே பதிவுலகத்திலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது . ஒன்னுமில்லா பதிவு ஒரு பத்து வரியில் எழுதிருக்கும் பதிவுகளுக்கு கிடைக்கும் ஓட்டுக்களும் , அதற்க்கு வரும் பின்னூட்டங்களும் இதற்குச்  சான்று . சில பின்னூட்டங்களை அடிச்சுக்கவே முடியாது , உதாரணம் : அருமை , நன்று ,  :-))))))))))), :-((((((((((((((((( , சொல்றதுக்கு ஒன்னும் இல்ல இன்னும் பல . தமிழ்ல வார்த்தை பஞ்சமா ?                            
                               பல அறிமுக எழுத்தாளர்கள் நல்ல நல்ல பதிவுகள் எழுதிருப்பாங்க , கம்ப்யூட்டர் டெக்னாலாஜி , உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் நடந்த , நடக்கும் நிகழ்வுகள் , வரலாற்று உண்மைகள் என்று இப்படி வரும் பல பதிவுகள் சீண்டுவாரின்றி காத்து  வாங்கும். அதற்க்கு விழும் ஓட்டுகளும் மிகக் குறைவே . தமிழ்மணம் , தமிளிஷ் பாபுலர் பக்கத்துக்கு போக குறைந்தது பத்து ஓட்டு . நூறு பேரு வந்து படிச்சாலும் ஓட்டு போடுறவங்க மிகக் குறைவு . பதிவுலகம் வந்த கொஞ்ச நாள்லயே புரிஞ்சது கட்சியில் சீட்டு வாங்க ஒரு பத்து பேர காக்கா புடிக்கணும் ,இங்க  பாபுலர் பக்கத்துக்கு போக நாமலும் ஒரு பத்து பேர்கிட்ட நல்ல ஒரு உறவை மேம்படுதிக்கணும் . எனக்கு நீ ஓட் போட்டியா ? நீ என்ன எழுதினாலும் பரவாயில்லை அத படிககுறோமோ இல்லியோ நன்றி உணர்ச்சி ஓடிப்போய் ஒரு ஓட்ட குத்திரனும் . அப்படியே அருமைனு ஒரு கமெண்ட் போட்டு வந்துடனும் . நாம என்ன கிறுக்கினாலும் பாபுலர் பக்கம் கன்பார்ம் . இப்போ புதுசா மார்க்கெட்டிங் மெயில் வேற . அப்புறம் ஒவ்வொரு பதிவு முடிவிலும் மறக்காம ஓட்டு போடுங்கனு இலவச இணைப்பு மாதிரி ஒரு வரி . ஏன் இப்படி ?  பிறர் ரசிக்குற மாதிரி எழுதிருந்தா கண்டிப்பா ஓட் பண்ணுவாங்க .
                                சன் டிவி வாங்குற படம் மட்டும்தான் ஓடும்னு இல்ல . பசங்க , சுப்ரமணியபுரம் என்று நியாயமான மக்கள் விளம்பரத்தால் ஆதரவால் ஓடிய படங்கள் பல . அப்புறம் இந்த தமிழ்மணம் மகுடம் பத்தி சொல்லியே ஆகணும்.சில பேர் எழுதுற பதிவுகள் மட்டும் தொடர்ந்து மகுடத்தில் இருக்கும் , அறிவுபூர்வமான பல நல்ல பதிவுகள் மகுடம் எங்க ஒரு படி கூட ஏறி இருக்காது .அந்த மகுடப் பதிவுகளைப் படித்தால் அப்படி ஒன்றும் பிரமாதமாய் இருக்கும் என்று சொல்ல முடியாது . போன வாரம் மகுடத்தில இருந்த பதிவுகளைப் பார்த்தா ரத்தக் கண்ணீரே வந்திடும் போல . எல்லாம் நித்யானந்தம் பற்றிய பதிவுகள் என்ன கொடுமை இது ? மெகா பட்ஜெட் படம் வெளியான குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியாவது கொஞ்ச நாள் தள்ளி போடுவது போல் இந்த நித்யா ஜூரம் முடியட்டும்னு எத்தனை பேர் காத்திருந்தாங்களோ தெரியல . ஒரு விஷயம் கிடைச்சா போதும் அலசல் , எனது பார்வை , போர்வைன்னு படிச்சு முடியல ஒரு கட்டத்துல வெறுத்து போய் 2  நாள் தமிளிஷ் பக்கமே வரல .

                                    அரசியல்வாதிங்க  பணம் குடுத்து ஓட்டு கேக்குறாங்க . இங்க ஓட்டு போட்டு ஓட்டு கேக்குறோம் . அரசியலுக்கும் பதிவுலகதிர்க்கும் வித்தியாசம் ஒன்னும் இல்ல .என்ன அதுல பல பேர் படிக்காத வெள்ளை வேட்டி , இங்க படிச்ச கலர் சட்டை அவ்வளவுதான் வித்தியாசம் . தயவு செஞ்சு இனிமேலாவது பிடிச்ச உங்கள பாதிச்ச பதிவுகளுக்கு ஓட் பண்ணுங்க அதை எல்லாருக்கும் அறியச் செய்ங்க .மகுடத்திலும்,பரிந்துரையிலும்  கண்ட கண்ட குப்பைகளை ஏற்றாதீர்கள்.நீங்கள் செய்தவதை பார்த்து ஏழு ஓட்டுகளுக்காக நிறைய கும்பல்கள் வரலாம்.நன்றாக  பதிவு  எழுதும் யாரும் ஓட்டுக்காக அலைவது இல்லை. அரசியல்வாதிகளையும் ,நித்தியானந்தனையும்  விமர்சிக்கும் நாம் ஓட்டுக்காக கடை நிலை அரசியல் செய்கிறோம்.பிடிச்ச ஆளுங்களுக்கு ஓட் போடுற பழக்கத்த விடுங்க . நமக்குள்ள பெரிய கூவம் நதியையே வச்சுக்கிட்டு அடுத்த தெருவுல போற சாக்கடைய பத்தி பேசக் கூடாது . இந்த நிலை நீடித்தால் புது கட்சி ஆரம்பித்த உடனே மூடுவிழா காண்பது போலவே புதியவர்களின் வரவும் இருக்கும் .
Posted by மதார் at 1:44 PM
Labels: பதிவுலகம்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ▼  March (20)
      • பெண்ணே இது நியாயமா ?
      • பெண்ணாய் பிறத்தலே பாவமோ
      • எப்போ அத்தே ஊருக்கு வருவ?
      • நானும் பொங்கலும்
      • ஹைக்கூ கவிதைகள்
      • கல்யாணம்
      • உணர்தலும் புரிதலும்
      • தாமிரபரணி
      • என்டோஸ்கோபி என்ற நரக வேதனை (பெண்களுக்காக )
      • சொந்த வீடு கட்டுமுன்- கவனிக்க வேண்டியவை
      • பெயர் அர்த்தம் கூறுக !
      • பள்ளிக்காலமும் நானும் -4 ( முற்றும் )
      • பள்ளிக்காலமும் நானும் -3
      • பள்ளிக்காலமும் நானும் -2
      • பள்ளிக்காலமும் நானும் -1
      • சொந்த வீடு வாங்குமுன் -கவனிக்க வேண்டியவை
      • தமிழ்மணம் , தமிலிஷ் -ஓட்டு வியாபாரம்
      • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
      • திருந்தவே மாட்டீங்களா ?
      • சில்லறை கொடுக்கா சில்லறை மனிதர்கள் .
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio