skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Sunday, November 14, 2010

நட்பு - எதுவும் முடியும்-1

"குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் "

"என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற முடியுமா "

"படிச்சுருவேமா "

"சரி பண்ணு "

வாழ்க்கையில் எத்தனையோ விதமான மனிதர்களை சந்திக்கிறோம் அவர்கள் மூலம்தான் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் எத்தனை . ஒருசில மனிதர்களை பார்த்தவுடனே அவர்களை விட்டு விலகிவிடத் தோணும் சிலருடன் நட்பு பாராட்ட தோணும் . அப்படி நட்பாய் இருக்கும் ஒருவரை பற்றி வேறுவிதமாய் கேள்விப் படுகையில் பெரும்பாலானோர் அவர்களை விட்டு விலக ஆரம்பிப்போம் . அப்படி விலக நினைத்து எண்ணத்தை மாற்றிக் கொண்டு கொஞ்சம் மாற்றித்தான் பார்ப்போமே என்று பழகிய நண்பன் ஒருவனுடனான பேச்சுதான் மேலே உள்ளவை .

பிறந்ததிலிருந்தே அண்ணா , நண்பர்கள் , படிப்பு என அத்தனையிலும் பெண்களைவிடவும் ஆண்களுடனே வாழ்க்கை அமைந்தது . ஓரளவு ஆண்களைப் பற்றி புரிதலும் இருந்தது . என்னுடன் முதல் கம்பெனியில் வேலை பார்த்தவன் பார்க்கவே குழந்தை போல் பால் வடியும் முகம் . ஒரே வருட கல்லூரி படிப்பு ஒரே துறை வேலையிலும் ஒரே துறை என பேச நிறைய விஷயங்கள் . வேலையிலும் நாங்கள் நால்வர் ஒரே இடம் , நானும் என் ப்ரெண்டும் client சைடு அவனும் இன்னொரு பையனும் contractor சைடு . பார்த்த வேலை சிவில் கட்டிட துறையில் pile foundation என்பதால் நாள் முழுவதும் நால்வரும் ஒரே இடத்திலேயே இருந்து பார்த்த கொஞ்ச நாளிலேயே நல்ல நட்பு எங்களுக்குள் . பெரிய இடத்து பிள்ளை என்பது அவனை பார்த்த உடனே யாராலும் கண்டு பிடிக்க இயலும். கோடிகளுக்கு  சொத்து பெண்பிள்ளைகள் இல்லா வீடு .

அவனுக்கு இருந்த இருக்கிற பெண் தோழிகள் பற்றி சொல்லுகையில் வயதுக் கோளாறு கொஞ்ச நாள் இப்படி  இருப்பான் என்று அதிகம் கண்டுகொள்ளுவதில்லை . கொஞ்ச நாளிலேயே இன்னொருவன் மூலம் இவனின் இன்னொரு முகம் தெரிய வருகையில் அதிர்ச்சி அதுவரையில்  அந்த மாதிரியான ஒரு மனிதனிடம் பேசினது கூட இல்லை .  அப்பொழுது அவனுக்கு இருந்த அரியர் பேப்பர் அவனை எழுதச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தேன் . தேவையான material வரை குடுத்து தினமும் அவனை படிக்க சொல்லி நான குடுத்த டார்சரில் அவன் கண்ணீர் விடாத குறைதான் .    

என்னுடன் இத்தனை நாளாய் நட்பாய் இருந்த ஒருவனைப் பற்றி கேள்விப் படுகையில் அதற்க்கு மேல் அவனுடன் தொடர வேண்டிய நட்பை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் . இதே ஒரு நான்கு வருடங்கள் பழைய ஆளாய் நான் இருந்திருந்தால் கண்டிப்பாய் அவனுடனான நட்பை அந்த உடனே முறித்திருப்பேன். என்னுடன் அவன் பழகிய அந்த ஆறு மாதங்களில் ஒருமுறை கூட தப்பாய் ஒருவார்த்தை கூட அவன் பேசிருக்கவில்லை.பின்பு எப்படித்தான் முறிப்பது ? முறிக்க காரணம் தேடிக் கொண்டிருந்த வேளையில் அவனே அதைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான் .

"நான் ரொம்ப கெட்டவன் மா"

"அப்படியா எப்படி "

"நான் .................பண்ணிருக்கேன் "

"தெரியும் "

"தெரிஞ்சும் எப்படிமா என்கிட்ட பேசுற "

"நீ எப்படி வேணா இருந்துட்டு போ அது எனக்கு தேவை இல்லை ஆனால் என்கிட்ட இதுவரைக்கும் நீ நல்லவனாத்தான் பேசிருக்க இனியும் அப்படியே இரு முடிஞ்சா நீ பண்ற தப்பை நிறுத்து அது பற்றி என்கிட்ட எதுவும் என்கிட்ட சொல்லாத என்னால உன்னை அப்படி கற்பனை கூட செஞ்சு பார்க்க முடியல உன் அம்மாவுக்கும் குடும்பத்துக்கும் கர்த்தருக்கும் துரோகம் பண்ணாதே "

"இல்லமா என்னால இது இருந்து வெளில வர முடியும்னு தோணல "

"சந்தோசம் எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா நீ இதுல இருந்து வெளியே வருவே , சரி நீ இப்படி மாற என்னக் காரணம் ? "

அவனுடன் பழகிய பெண்கள் அவனை தன்  வலையில் விழ வைக்க முயற்சி பண்ணியதில் இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டது நான் மட்டுமே என்று பின்னாளில் தெரிய வந்தது .அவனுடன் டிப்ளமோ கல்லூரியில் ஒரே அறையில் தங்கிருந்த சீனியர் மாணவரின் தவறான பழக்கம் பார்த்து பார்த்து நாளடைவில் இவன் பழகிப் போனான் . பழக்கத்தை விட முடியாமல் அன்று முழித்துக் கொண்டிருந்தான் . அப்படியே ஓங்கி அறையலாம் போல் வந்த கோவம் (அத்தனையும் போனில் சொல்லிகொண்டிருந்ததால் அறைய முடியவில்லை )  கடந்த கால வாழ்க்கையை கேட்டவுடனே அடங்கிப் போனது .




அடுத்து நான் என்ன செய்தேன் நாளை வரும் கொஞ்ச பெருசா பதிவு போய்விட்டதால் இரண்டு பகுதிகளாய்.
Posted by மதார் at 9:29 PM
Labels: அனுபவம், நட்பு
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ▼  November (7)
      • மலை மாலை பக்தி உல்லாசப்பயணம்
      • அழகை ரசிக்கிறது தப்பா ?
      • டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும் - எச்சரி...
      • சமையலோ சமையல் - வாழைப்பூ செய்முறை படங்களுடன்
      • நட்பு - எதுவும் முடியும்-2
      • நட்பு - எதுவும் முடியும்-1
      • அவள் அவளாய் உன்னவளாய்
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio