சுக துக்கங்களின்
கலவையாய் வாழ்க்கை !!!
சந்தோசத் தருணங்களை
மட்டும் அசை போடும் மனது !!!
நட்பின் முகங்களை
புகைப்படங்களில் தேடும் கண்கள் !!!
****************************************************************
****************************************************************
உன் புகைப்படக் குவியலில்
என்றாவது என் முகம் பார்க்கையில்
எனை கிண்டல் செய்து
அழவைத்து நீ
சிரித்த நினைவுகள் உன் மனதில்
ஒரு கணமேனும் வந்துபோகுமா?
இல்லை அது வரா வண்ணம்
என் புகைப்படங்களையும்
சேர்த்து அழித்துவிட்டாயா ?
என் நினைவுகளே தேவையில்லை என்று !!
*****************************************************************
*****************************************************************
கூட்டத்தில் யாரோ உன்பெயரழைக்க
எனையறியாமல் என் கண்கள் உனைத் தேட
மற்றவர் எனை நோக்காவண்ணம்
எனக்குள் நானே சிரிக்கிறேன்!!
உனக்குள் என்பெயராவது
நினைவிருக்குமா என்ற என் நினைப்பை
என்றாவது நீ பொய்யாக்குவாய்
என்ற நம்பிக்கைனூடே !!
என்முகம் பார்த்து நீ கொடுக்கும்
ஒருநிமிட புன்னகைச் சிதறலுக்காய்
காத்திருக்கிறேன் நண்பனே !!!
**********************************************************
**********************************************************
காலங்கள் பல கடந்தாலும்
இனிவரும் காலங்களிலாவது
ஒருநாளில் ஒருநொடியாவது
என் நட்பை நீ புரிந்து கொள்வாய்
என்ற எதிர்பார்ப்புடனே
காத்திருக்கிறேன் நண்பனே !!
***********************************************************
***********************************************************
காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மனிதர்கள் ஏற்படுத்திய
காயங்கள் மட்டும்
என்றென்றும் மாறுவதில்லை .
காலங்காலமாய்
அது நிலைத்திருக்கும ்
நம் மனதில் !!!!!! 