மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு , உடை , உறையுள் . இதில் முதல் இரண்டும் பெரும்பான்மை அனைவருக்கும் கிடைத்து விடும் . மூன்றாவதுதான் சிக்கலே . இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு இல்லனா நாய் கூட சீண்டாதுன்னு சொல்வாங்க . சென்னையில் இருக்கும் அனேவரது கனவும் சொந்த வீடாகவே இருக்கும் . இடத்திற்கேற்ப 10 இலச்சம் முதல் ஒன்றரை கோடி வரை சொந்த வீடு வாங்கலாம் . சென்னை எனறால் கட்டிய வீட்டை வாங்குவதே நமக்கு நல்லது . சொந்த ஊர் பக்கம் என்றால் நாமே சொந்த இடத்தில் நமக்கு பிடித்தமாதிரியான வீடு கட்டிக்கொள்ளலாம் .இதில் வாங்குவதோ , கட்டுவதோ படித்த மக்களே சில நேரங்களில் ஏம்மாந்துவிடுகின்றனர். இங்கே சில பொதுவான கவனிக்கப்பட வேண்டியவை உங்களுக்காக .
கட்டிய வீட்டை வாங்குமுன் கவனிக்க வேண்டியவை .(Flat-அடுக்குமாடிகுடியிருப்பில் , villa -தனி வீடு )
Layout
1 . Flat (or )Villa வாங்குமுன் அதன் இருப்பிடத்தை நன்கு விசாரிக்க வேண்டும் . சரியான தண்ணீர் , கழிவு நீர் வடிகால் திட்டம் உள்ளதா என்று பார்க்க .
2 . அவ்விடத்திலிருந்து மற்ற அத்தியாவசிய இடங்கள் (Bus stand , Airport , Railway station , school , Hospital , college ) எவ்வளவு தூரத்தில் உள்ளன என்று விசாரிக்க . (Builders கொடுக்கும் கட்லோக் கில் அரைமணி நேரம் ஆகும் இடத்திற்கு பத்து நிமிடம் என்று போட்டுறுப்பர்)
3 .அதிக தூரத்தில் குறைந்த விலைக்கு வீடு கிடைக்குதுன்னு வாங்கி அப்புறம் பெட்ரோல் போட்டு முடியாது .
4 .அட்வான்ஸ் புக்கிங் ல வீடு வாங்கும்போது garden view flat நா அதுக்கு பணம் கூடுதலா கேட்ப்பாங்க . ஆசை பட்டு வாங்கிடுவீங்க . வீடு கட்டியபின் பார்த்தா அந்தளவுக்கு அங்க கார்டன் இருக்காது . நீங்க layout (மொத்த பிளான் ) பார்த்து ஏமாந்து போய்டுவீங்க . (நா வேலை பார்த்தா கம்பெனில இப்படித்தான் ஏமாத்தினாங்க , எங்களுக்குத்தான் தெரியும் கார்டன் ரொம்ப சின்னதா வரும் என்று )
4 . எந்த ஐட்டம் எல்லாம் extra charge ல வரும் என்று முன்னமே நல்லா பாருங்க . Loft (சாமான் போட்டு வைக்கும் பரணி )கூட எக்ஸ்ட்ரா ஐட்டம்ல சேர்த்துடுவாங்க . ஆனா அது எக்ஸ்ட்ரா ஐட்டம் கிடையாது .
5 .முடிஞ்சவரைக்கும் அவங்க எண்ண மாதிரி பொருள்(company Brand ) எந்த தரத்துல (Quality ) பயன்படுத்துறாங்கனும் தெரிஞ்சுக்கங்க . பல builders தரக்குறைவான பொருள் பயன்படுத்தி கடைசி டச்சப் நல்லா பளபளன்னு குடுத்துடுவாங்க .
Layout in villa
Plan in Apartment
Single villa
6 . வாஸ்து பார்த்து Flat வாங்குமுன் நல்ல காற்றோட்டம் இருக்கும் பக்கம் வாங்குங்க . Flat ல காத்து வரது ரொம்ப கம்மி .
7 .பார்க்கிங் , maintenance ஆகும் அமௌன்ட் எவ்வளவுனும் பாருங்க . maintenance பணமே மாசமாசம் வாடகை அமௌன்ட் மாதிரி அவ்ளோ ஜாஸ்தியா இருக்கும் .
8 . கார் இருக்கோ இல்லியோ ஒரு கார் பார்க்கிங் சேர்த்து வாங்கிடுங்க . பின்னாடி பார்க்கிங் இடம் இல்லாம கஷ்டம் வரும் . அப்போ வந்து builders a தப்பு சொல்ல முடியாது .
9 .எந்த மாதிரியான லிப்ட் வைக்க போறாங்க , இல்ல இருக்குனு பாருங்க . இன்னமும் தடை செய்யப்பட்ட சில லிப்ட் வகைகள் பயன்பாட்டுல இருக்கு . திடீர்னு அரசாங்க ஆளுங்க வந்து அதன் பயன்பாட்ட நிறுத்திட்டா கஷ்டம் நமக்குத்தான் .
10 . பத்திரம் சரியான முறையில் இருக்கா? அரசு பதிவு builders தானா? அவர்களின் முந்தைய கட்டிடங்கள் , அதன் தரம் எல்லாம் பாருங்க . முடிந்த வரை வீடு வாங்குமுன் ஒரு CIVIL ENGINEER உடன் கலந்துரையாடுக.
11.அடுக்குமாடி குடியிருப்புனா எல்லா வீடுகளும் பெரும்பாலும் ஒரேமாதிரி இருக்கும் . கட்டும்பொழுது வீடு புக் பண்ணா சில Builders வீடு வாங்குறவங்க விரும்புற சிலசில மாறுதல்கள் செஞ்சு குடுப்பாங்க . அதுக்காக நீங்க ஓவரா கட்டிய சுவரை எல்லாம் இடிக்க சொல்லகூடாது . கவனிக்க இதில இடிக்க , கட்ட என இரண்டு வேலை . இதற்க்கான ஆள் கூலி , பொருள் செலவு எல்லாம் உங்கள் அக்கௌன்ட் (எக்ஸ்ட்ரா பணம் )லதான் வரும் . இதையும் முன்பே விசாரிக்க .
12 .நீங்க வீடு கட்டும்போது புக் பண்ணா உங்க அக்ரிமெண்ட்ல Defects liability period -12 months இருக்கும் . இது நீங்க உங்க வீட்டு சாவி கைல வாங்குறதுல இருந்து 12 மாதம் எடுத்துக்கொள்ளப்படும் . இந்த 12 மாதங்களுக்குள் உங்கள் வீட்டில் வரும் ஓட்டை உடைசல்களை சம்மந்தப்பட்ட Builders அவர்கள் சொந்த பணத்திலேயே சரிசெய்து தரவேண்டும்(அதுக்காக நீங்க உக்காந்திருந்து உடைக்க கூடாது , Builders ,Engineers க்கு தெரியும் எந்த மாதிரி Faults வரும் என்று ) . உங்கள் அக்ரிமெண்டில் Defects liability period -12 months இருக்கானு பாருங்க .
13 .அக்ரிமென்ட் தமிழோ ஆங்கிலமோ சத்தியமா படிக்குரவங்களுக்கு பாதிகூட புரியாது . ஆங்கிலம் என்றால் First Party , Second Party னு பக்கத்துக்கு பத்து தடவை போட்டு உங்கள நல்ல குழப்புவாங்க உஷரா இருக்கணும் .
அடிச்சு பிடிச்சு வீடு வாங்குறது முக்கியம் இல்ல , நாம போடுற பணத்துக்கு சரியான தரமான வீடு வாங்குரோமாங்கரதுதான் முக்கியம் .இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்க்க , என்னால் முடிந்தவரை சொல்றேன் (தெரியலனா விசாரிச்சாவது)
பதிவு பெருசா போய்ட்ட காரணத்தினால சொந்த வீடு கட்டுமுன் கவனிக்கவேண்டிய விடயங்கள் அடுத்த பதிவில் .
