skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Saturday, March 19, 2011

தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்

சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலும் பல IT நிறுவனங்களின் கூடாரமாகவும் இருப்பதால் அந்த ரோட்டில் வாகன போக்குவரத்துக்கு எப்போதும் பஞ்சமே இருப்பதில்லை .டைடல் பார்க் சிக்னல் புதிதாய் அந்த இடத்தை கடப்பவருக்கு குழப்பமே வரும் அந்த அளவு கொஞ்சம் சிக்கலான சிக்னல் அது .பறக்கும் ட்ரெயின் வந்தபின் அந்த இடத்தின் மக்கள் கூட்டம் கேட்கவே வேண்டாம் .டைடல் பார்க் ஊழியர்கள் பறக்கும் ட்ரெயின் ஸ்டேசனை எந்த சிக்னலுக்கும் காத்திருக்காமல் இலகுவாய் தரை உயர பாலத்தை (பூட் OVER BRIDGE )பயன்படுத்தி நேராய் ஸ்டேசனின் இரண்டாம் தளத்துக்கே செல்ல முடியும் . அவர்களைத் தவிர மற்றவர்கள் சிக்னலுக்கு காத்திருந்து ஒருஒரு சாலையையும் கவனித்து கடந்து முடிப்பதற்குள் அதிகபட்சம் பத்து நிமிடங்களாவது ஆகும் . OMR இல் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் வந்துகொண்டே இருப்பதைப் பார்த்தால் நம் பொறுமையே போய்விடும் .அத்தனைக்கும் காத்திருந்து ஒரு சாலையைக் கடந்து மீண்டும் நடு ரோட்டில் நிற்க வேண்டும் .திருவான்மியூர் இல் இருந்து மத்திய கைலாஷ் வழி சாலை சிக்னல் ஓபன் ஆகும் .இந்த இரண்டு சாலைகளையும் கடக்கும் நேரத்தில் நாம் போக வேண்டிய பேரூந்து காலியாய் அடுத்தடுத்து சென்று நம் வயித்தெரிச்சலை வேறு கிளப்பும் .நடு ரோட்டில் நின்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .அத்தனையும் தாண்டி அக்கரையில் இருந்து இக்கரை வருவதற்குள் பாதி உயிர் போய்விடும் .
அடுத்து நமக்கான பேரூந்து ஒரு அரை மணி நேரம் கழித்து இதோ வந்துட்டேன் என்று சொல்லி நம் முன் நிற்கையில் ஏறவா வேண்டாமா என்று சிந்திக்க வைக்குமளவுக்கு அங்கு ஏற்கனவே கூட்டம் அப்பிக் கொண்டிருக்கும் .அடுத்து அதில் ஏறவும் ஒரு பெருங்கூட்டம் நம் கூடவே காத்திருக்கும் .ஆபீஸ் டார்ச்சரை விட வீடு வந்து சேருவதற்குள் வரும் இந்த மாலை நேர டார்ச்சர் பற்றி சொல்லி மாளாது .இதில் பழக்கப்பட்டவர்கள் சரியாய் சிக்னல் பார்த்து கடந்து விடுவர் .புதிதாய் அந்த இடத்துக்கு வருபவர் கொஞ்சம் திணறித்தான் போவர் அதிலும் ஸ்டேசனில் இருந்து SRP TOOLS வழி செல்லும் பேரூந்து நிறுத்தத்தை அடைய கடப்பவர்கள் OMR - திருவான்மியூர் சாலை சிக்னலை மட்டுமே பார்த்து வேகமாய் கடக்க முற்படுவர் .அங்கே வலப்புறம் மத்திய கைலாஷ் - OMR சிக்னல் அடைபட்டிருக்கும் ஆனாலும் மத்திய கைலாஷ் - திருவான்மியூர் செல்லும் சாலைக்கு சிக்னல் கிடையாது அதில் வாகனங்கள் எப்போதுமே சென்று கொண்டிருக்கும் .இங்கிருந்து கடக்கும் வேகத்தில் அந்த சாலையை பலர் கவனிப்பதில்லை .
ஒருமுறை வழக்கம் போல் ஸ்டேசனில் இருந்து சாலையை கடக்க வருகையில் கூடவே வந்தவன் மொபைலில் "சொல்லுடா எந்த ஸ்டாப் என்று சொல்லி டிக்கெட் வாங்கணும் " இப்படி அவன் கேட்கையிலே பையன் புதுசு போல என்று தெரிந்தது .வேகவேகமாய் அவன் ரோடு கடக்க எத்தனிக்கையில் சட்டென்று அவன் கை பிடித்து நான் நிறுத்த அவன் சந்தேகமாய் எனைப் பார்க்க வேகமாய் மத்திய கைலாஷ் -திருவான்மியூர் சாலையில் ஒரு கார் அவன் முன்னே வழுக்கிக் கொண்டு சென்றது .காரின் வேகத்துக்கு அவனிடம் சொல்லி நிறுத்த நேரமில்லை. மூளைக்கு செய்தி போய் அது உறுப்புகளுக்கு கட்டளையிடும் நேரத்துக்கும் குறைந்த நேரமே அப்போது இருந்தது . அனிச்சைசெயல் அவன் அந்நியன் ஒரு ஆண் என்பதெல்லாம் பார்க்கவில்லை .அவன் பார்வைக்கு நான் பதிலேதும் சொல்லாமலே அவனை கடந்து போய்க் கொண்டே இருந்தேன் .புது இடம் நிறைய சாலைகளின் இணைப்பு கொஞ்சம் சிக்கலான சிக்னல் வேறு இதில் காதில் மொபைல் .பழக்கப் படாத சிக்னல்களில் ஒரு நிமிடம் நின்று சிக்னல் எப்படி இருக்கிறது எந்தந்த சாலைகள் எங்கே போகிறது என்று கொஞ்சம் பார்த்துவிட்டுத்தான் கடந்து சென்றால் என்ன. .
தினம்தினம் கூட்டம் கூட்டமாய் மக்கள் அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர் .அங்கு ஒரு சுரங்கப் பாதையோ அல்லது தரை மேல் பாலமோ போட்டால்தான் என்ன?. சுரங்கப் பாதையைவிடவும் தரை மேல் பாலம் கட்டுமான பொருட் செலவும் ,நேரமும் குறைவு .அதன் மூலம் சில உயிரிழப்புகளும் ,விபத்துகளும் தவிர்க்கலாமே .காத்திருக்கும் நேரமும் குறையும் .அசன்ட்டாஸ் ரோடு பளபளக்கையில் அன்றாடங்காட்சிகள் மற்றும் அதிக பொதுமக்கள் பயன்படுத்தும் தரமணி ரோடு பல்லிளித்துக் கொண்டிருக்கும் .மழைக்காலங்களில் பட்ட துயர் அங்கே பயணித்த மக்களுக்கே தெரியும் .ஒருவழியாய் மழை ஓய்ந்த பின் ஒரு ரோடு மட்டும் தற்சமயம் சரி செய்யப் பட்டுள்ளது .இப்போது அதுபோலவேதான் இங்கும் நடக்கிறது .டைடல் பார்க் ஊழியர்களின் உயிர் மட்டும்தான் விலை மதிப்பற்றதா. OMR சாலையில் பல இடங்களில் Foot over Bridge பயன்படுத்தப் படாமல் துருபிடித்துக் கொண்டிருக்கிறது .தேவைப் படும் இடங்களில் அந்த தரை மேல் பாலத்தை போட்டால் தான் என்ன .முக்கியத்துவம் கருதி திட்டங்கள் செயல்படுத்தப் படும் காலம் எப்போதுதான் வருமோ ?
Posted by மதார் at 10:01 PM
Labels: Foot over bridge, Tidel park, சிக்னல், சென்னை
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ▼  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ▼  March (2)
      • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
      • மறக்க முடியா மரண தருணங்கள்
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio