அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார் அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு நியாயமானது . இந்த உணர்வு ஒருஒருவர் மனதிலும் இருக்கணும் . இவர்கள் மேல் கோவப்பட நாம் யார் ? விற்கதெரிந்தவன்தான் வியாபாரி . அவர்களுக்கு அந்த சூட்சுமம் தெரிந்திருக்கு இந்திய ஓட்டைகளை நல்லா பயன்படுத்த தெரிந்திருக்கு . மற்றவர்களைப் பற்றியும் இந்தியா எதிர்நோக்கியுள்ள பெரிய பிரச்சனைகளைப் பற்றியும் பேசும் முன் நாம் கொஞ்சம் நம்மையே திரும்பி பார்க்கலாம் . ஒண்ணுமே இல்ல சென்னையை எடுத்துக்கலாம் .இன்னும் இரண்டு மாதங்களில் மழை வரும் , கழிவு நீர் சாக்கடை நிரம்பி ரோட்டு தண்ணி உள்ள போறதுக்கு பதிலா டிரைனேஜ் தண்ணீர் வெளிய வரும் .
நாம என்ன பேசுவோம் ? பாரு வருசா வருஷம் இந்த மாதங்களில் மழை வருது . அப்படியும் நம்ம அரசாங்கம் இந்த டிரைனேஜ் சரி பண்ணுதான்னு பாரு ? அடுத்தவங்களை குறை சொல்லியே நாம வளர்ந்துட்டோம் வேற என்ன சொல்ல முடியும் ? . அது அப்படி ஓவர்ப்லோ ஆக என்ன காரணம் ? வேற யாரு நாமதான் . ஆங்கிலத்தில் "Sewage Treatment System " என்று சொல்லப்படும் இந்த டிரைனேஜ் கட்டுமானம் அது போகும் இடங்களில் எல்லாம் ஒரே உயரத்தில் இருக்காது . தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் முறையிலேயே (Self cleansing velocity) கட்டப்பட்டிருக்கும் . அதாவது அதனுடைய உயரங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டிருக்கும் . வாகனங்கள் ஏற்ற பயன்படுத்தும் ஸ்லாப் மாதிரி இருக்கும் . அப்பொழுதே தண்ணீர் வேகமாக கடந்து செல்லும் அது போகும் பாதையில் இருக்கும் சில எடை கூடிய பொருட்களை வேகத்துடன் அடித்துச் செல்ல முடியும் . அப்படியும் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டால் மட்டுமே மனிதன் உள்ளே சென்று ஒரு கம்பி மூலம் அடைத்திருக்கும் இடத்தை தள்ளிவிட வட்ட வடிவ மூடி (Manhole) ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கும் .
சென்னையில் இந்த டிரைனேஜ் சிஸ்டம் சரிவர செயல்பட முடியாமல் இருக்க காரணம் என்ன ? நாம பயன்படுத்துற பாலிதீன் கவர்கள் . அப்படியே போற போக்குலயே எனக்கு என்னனு வீசிட்டு போவோம் . அது அப்படியே பறந்து போய் சரியா திறந்திருக்கும் சாக்கடை வாய்க்கால்களில் விழுந்து மெல்ல நகர்ந்து டிரைனேஜ் உள்ள போய் நல்லா லாக் ஆய்டும் . இதனுடன் சில திட பொருட்கள் எல்லாம் நாம அனுப்புறதுதான் . மருத்துவமனை கழிவுகள் (ஊசி , மருந்து பாக்கெட் , சில சமயங்களில் வெட்டிய உறுப்புகள் ) எல்லாம் இதுக்குல்லேதான் வரும் . இந்த டிரைனேஜ் சிஸ்டம் இல் திடக்கழிவுகள் என்று சொல்லப்படுவது கழிப்பறையிலிருந்து வெளியேற்றப்படும் மனிதக் கழிவுகள் மட்டுமே . ஆனால் நாம் இந்த டிரைனேஜ்ஜில் அனுப்பும் திடக் கழிவுகள் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை .
டிரைனேஜ் உள்ள போக வழியில்லாத பாலிதீன் பைகள் நாம சிமெண்ட் தரை போட மறந்த இடங்களில் விழுந்து கிடக்கும் . பூமிக்குள்ள போற கொஞ்ச நஞ்ச தண்ணீரும் (water percolation ) தடை படும் . பிறகு எப்படி நிலத்தடி நீர்மட்டம் உயரும் ?
"Sustainable Development " இருக்கிற இயற்கை வளங்களை நமக்கு பின் வரும் சந்ததியனருக்கு demand வராத வகையில் பயன்படுத்த வேண்டும் .நாம பயன்படுத்துற லட்சணத்துக்கு நமக்கே பற்றாக்குறைதான் . நவம்பர் மாதங்களில் வீணாய் கடலில் கலக்கும் தண்ணீர் என அரசியல்வாதிகள் விடும் ஸ்டேட்மென்ட்கள் நம்மூர் பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளில் அலங்கரிக்கும் . இது நவம்பர் மாத வருடாவருட சிறப்பு செய்திகள் . நாம வழக்கம்போல் ரோட்டிலே தேங்கி நிற்கும் குட்டைகளைப் பார்த்து அரசை குத்தம் சொல்லி பேசிட்டு போயிட்டே இருப்போம் . முடிந்தவரை நாம் நமக்காவது நல்லது செய்வோம் . நம்மை சுற்றி சரி பண்ண எவ்வளவோ விஷயங்கள் இருக்கு . பேருந்தின் வாசலிலேயே நின்றுகொண்டு அடுத்தவர்களுக்கும் வழி விடாமல் அடுத்து இறங்கனும் என்று சொல்லியே நான்காவது இறக்கத்தில் இறங்கும் சுயநல மனிதர்கள் தான் நாம் .
பி.கு.எப்போதோ படித்தது பாலிதீன் பைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் காலம் பதினைந்து லட்சம் ஆண்டுகள் .




