என் முந்தய பதிவு உள்ளூர் சினிமா VS உலக சினிமா -1
இங்கே என்னை பாதித்த சில தமிழ் சினிமாக்களை பற்றி உங்களுடன் ,
1 .அரங்கேற்றம்
கருப்பு வெள்ளை படம் , இதன் திரைக்கதை என்னை கட்டி போட்டு சேனல் மாற்றாமல் பார்க்க வைத்தது . மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்தது . இப்படத்தில் கமல் 20 வயது தம்பியாக வருவார்.இப்படம் முழுவதும் ஒரு பெண்ணை சுற்றியே வரும் . அது ஒரு பெரிய குடும்பம் , ஊரிலே மரியாதை நிறைந்தது . குடும்பத்தின் மூத்த பெண் கதாநாயகி . வறுமை குடும்பத்தை சுற்ற பணம் வாழ்வில் ஜெயிக்க கதாநாயகி தேர்ந்தெடுக்கும் வழி விபச்சாரம் . குடும்பத்திற்கு எதுவும் தெரியாது , நகரத்தில் வேலை செய்து அனுப்புவதுபோல் பணம் வீட்டை அடையும் . அதில் குடும்பமும் ஒரு வழிக்கு வந்து விடும் . கமலின் திருமணத்தில் நிஜம் வெளி வரும் . கதாநாயகியின் வாடிக்கையாளர் ஒருவர் திருமணத்தில் நிஜத்தை போட்டு உடைத்து விடுவார். அதுவரை ராணி போல் பாவித்த குடும்பம் அவளை உதறித் தள்ளும் . அவளை நேசிக்கும் ஆணாய் சிவகுமார் .ஒரு நிலையில் அவள் பைத்தியமாக அவளை மணமுடிப்பார் சிவக்குமார் . முடிவில் தான் யாரென்று தெரியாமல் கடலை நோக்கி ஓட பின்னாடியே சிவக்குமார் ஓட படம் முடியும் .இப்படம் வெளிவந்து எப்படியும் ஒரு 35 வருடங்களாவது இருக்கும் . என்னை பாதித்தது இப்படி ஒரு கதையில் அக்காலத்தில் நடித்த நாயகி , துணிச்சலான படத்தை இயக்கிய இயக்குனர் .2 .இங்கேயும் ஒரு கங்கை .
இப்படத்தில் உண்மைக் காதலனுக்கும் , நல்ல மனம் கொண்ட கணவனுக்கும் இடையில் மாட்டிகொண்டு நாயகி படும் மன வேதனை அழகாய் சொல்லப் பட்டிருக்கும் . ஊனமான நல்ல கணவனாக சந்திரசேகர் , காதலனாக முரளி .இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாய் இருக்கும் .உண்மை காதலை புரிந்து கொண்டு காதலனுடனே போ என்று சொல்லும் நல்லக் கணவன் , முடிவில் தாலியே ஜெய்க்கும்.
3 .வெற்றி விழா
கமல் ரசிகர்கள் அனைவரும் அறிந்த படம் , படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை இதன் வேகம் குறையாமல் செல்லும் . கமல் நல்லவரா ,கெட்டவரா என்ற அவரின் தேடல் நம்மையும் தேட வைக்கும் . இதன் இயக்குனர் பிரதாப் போத்தன் என்று தெரிந்த பின் ஆச்சர்யமாய் இருந்தது . படங்களில் ஒரு சோடா புட்டி கண்ணாடி போட்டு இவர் வந்தாலே நகைசுவை நடிகரை பார்ப்பதுபோல் சிரிப்பு வரும் .4 .தீர்ப்புகள் திருத்தப்படலாம்
சிவக்குமார் நடிப்பில் வந்தது , இப்படத்தின் எதிர்பாராத இடத்தில் வரும் திருப்பமே படத்தின் தலைப்பாக வரும் .5 .ஆறிலிருந்து அறுபது வரை
ரஜினி நடிப்பில் வந்தது , படத்தின் தலைப்பிலேயே கதை புரிந்துவிடும் என்றாலும் இப்படம் வெளிவந்த காலத்தில் வாழ்கைப் பயணம் எவ்வளவு கடினம் என்று தெரியும் . ரஜினியின் உணர்ச்சிபூர்வமான நடிப்பில் எப்பொழுது பார்த்தாலும் அழுகை வரும் .என் ப்ளாக் 2 முறை தொலைந்து போனதால் மறுபடியும் அனைத்தும் பப்ளிஷ் பண்றேன் . இதை ஏற்கனவே படித்தோர் பொறுமை காக்கவும் . ட்ராப்ட் ல் வைக்க முடியாமல் ஒரு முழு back up எடுக்கவே இந்த முயற்சி
