Tuesday, April 13, 2010
சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் -1
முதல் முறையாக A.C.BUS இல் 2008 தீபாவளிக்கு நெல்லை செல்ல 3.40 pm டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன் , அன்று மழை. மனித சங்கிலி போராட்டம் என்று ஏக கலவரம் சென்னையில் . இந்த நேசமணி , திருவள்ளூர் பெயர் குழப்பத்தால் 3 மணிக்கு கோயம்பேடு போயும் பேருந்தை தவறவிட்டேன் . நான் காத்திருந்தது திருவள்ளூர் பேருந்து நிற்க்குமிடம் , டிக்கெட் பதிவு செய்திருந்தது நேசமனியில் .நான் டிக்கெட் காண்பித்து கேட்டபோதும் அலுவலர்களும் சரியாய் பேருந்து எங்கே நிற்கும் என்று சொல்லவில்லை . எல்லாம் ஒரே நடைமேடைதான் நடைமேடை துவக்கத்தில் திருவள்ளூர் , கடைசியில் நேசமணி(எல்லாம் ஒரு அனுபவத்திற்கு பின்பு அறிந்து கொண்டது ) , ஒரே இடத்திற்கு செல்ல என்ன ஒரு திட்டமிடல் நம் அரசாங்கத்தில் .............!! மழை காரணமாய் பேருந்துகள் அனைத்தும் தாமதமாய் வரும் என்று அறிவிப்பு வேறு .
என் அருகில் இருந்த பெண்ணும் தனக்கான பேருந்து இன்னும் வரவில்லை , ஒரு மணிநேரமாய் காத்திருக்கிறேன் என்று சொன்னதால் நானும் நமக்கும் தாமதம் ஆகலாம் என்று காத்திருந்தேன் என் தோழியுடன் , அவள் நாகர்கோவில் போக மார்த்தாண்டம் பேருந்தில் முன்பதிவு செஞ்சிருந்தாள்.
மணி 3.50pm எனக்கோ இருப்பு கொள்ளவில்லை , மறுபடியும் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் இந்த பேருந்து கடைசியில் நிற்கிறது என்கிறார் கூலாக , நானும் தோழியும் மின்னல் வேகத்தில் சென்றால் என் பேருந்து சென்று ஐந்து நிமிடம் ஆகிறது என்று சொல்கிறார் அங்கு பணியில் இருப்பவர் . டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது மொபைல் நம்பர் கேட்கிறார்கள் எதற்கென்று தெரியவில்லை . மார்த்தாண்டம் பேருந்தும் புறப்பட தயாராய் இருந்ததால் தோழி ஏறிட்டா .நான் டிக்கெட் கையிலே வைத்துக்கொண்டு பாவமாய் நிற்கிறேன் . அப்பொழுது பார்த்து இங்கிருக்கும் உடன்பிறப்பு கால் பண்ண இருந்த கோவத்தில் அவனை திட்டிதீர்த்தேன் . கூட வந்து பஸ் ஏத்தி விடுறியா ? ஒரு டிக்கெட் வாங்கி தரியானு இது வரை அவன் மேலிருந்த கோவத்தை எல்லாம் காமிச்சேன் . (நம்ம தப்பதான் நாம ஒத்துக்கமாட்டோம்ல ) அவன் கடுப்பாகி வச்சுட்டான் . அங்கிருந்த கண்காணிப்பாளர் நான் தவற விட்ட பேருந்தின் ஓட்டுனரை தொடர்பு கொண்டு இப்பொழுது எங்கிருக்கிறது என்று கேட்டார் (சில நல்ல உள்ளங்களும் உள்ளன ) எல்லாப் பேருந்துகளும் தாமதமாய் வந்துசேர நான் போகவேண்டியது மட்டும் படுவேகமாய் ரொம்பதூரம் போய்விட்டது ஒரு பத்து நிமிடத்திற்க்குள் (A.C la போக குடுத்து வைக்கல ).
இப்போ என்னமா பண்ண ? நான் வேணும்னா உனக்கு ஒரு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ல போக ஏற்பாடு பண்றேன் , இப்போ டிக்கெட் கான்செல் பண்ணாலும் நாற்ப்பது % போய்டும் யோசிச்சு சொல்லுமான்னு சொல்றாரு , என்ன பண்ண வீட்டுக்கு போனா போதும்னு சரின்னு சொல்லிட்டேன் . ஒரு வழியா ஒரு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ல உக்கார வச்சுட்டார் , என்னுடைய டிக்கெட் பின்குறிப்பில் எனக்கான காரணம் எழுதுகிறார் " மழையினால் ....வயதுப்பெண் பேருந்தை தவறவிட்டுவிட்டார் , இப்படிக்கு ......." அவருக்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை நான் இருந்த அவசரத்துல மறந்துட்டேன் .
(A.C.Ticket 570 , U.D Ticket 315 ) .என்னால அரசுக்கு அன்று 255 லாபம் . (எப்படிலாம் கொள்ளை அடிக்குறாங்க !!!). அந்த தீபாவளி அனுபவத்தால் 2009 வருடம் தீபாவளிக்கே நான் போகல . இங்கிருக்கும் அண்ணா குடும்பத்துடன் கொண்டாடிவிட்டேன் .
எனக்கு ரொம்ப நாள் ஆசைங்க , நம்ம ஊர்க்காரங்க மட்டும் (நெல்லை , தூத்துக்குடி )சென்னைல எத்தனைபேர் இருக்காங்கனு தெரியனும் . ட்ரைன்ல முன்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே காத்திருப்பு பட்டியல் காண்பிக்கிறது . இத்தனைக்கும் சாதாரண நாளில் கூட முன்பதிவு செய்ய முடியவில்லை . அறுபது நாள் முன்பதிவு தொண்ணுறு நாளாக அதிகப்படித்தியும் நிலைமை அப்படியே உள்ளது . ஒருவருட முன்பதிவு என்று மாற்றினாலாவது எனக்கு டிக்கெட் கிடைக்குமா ?
நான் போன பேருந்து நடுவில் நின்ற கதை அடுத்த பதிவில் ..................

