பிள்ளையாரப்பா எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? ப்ளாக் எழுத வந்த 10 மாசத்துல இரண்டு முறை ப்ளாக் தொலைஞ்சு போச்சு . இப்போதான் பிப்ரவரி ல அவுட் ஆச்சு . இரண்டு நாளா கூகிளாண்டவர் கிட்ட போராடி ஜிமெயில் அக்கௌன்ட் மறுபடியும் அப்படியே அல்வா மாதிரி கிடைச்சது . ப்ளாக் உள்ள எட்டிபார்த்தா ஒன்னையும் காணோம் . எனக்கு அழுக அழுகையா வந்தது . முதல் சோதனை இங்கே
கருகிபோகுமென்றே தெரிந்தும் மார்கழியில் செண்டு பூ , வாடாமல்லி,தக்காளி எல்லாம் தோட்டத்துல போட்டு அழகு பார்ப்பேன். பூக்காரர் விலைக்கு கேட்டும் செண்டு பூ (சாமந்தி) அவருக்கு குடுக்காமல் சின்ன குழந்தைகள் பறிச்சு போக விடுவேன் . பொங்கலுக்கு நான் வளர்த்த செடியில் காய்த்த தக்காளி சித்தப்பா வீடு எல்லாம் கொண்டு போய் குடுப்பேன் .ஒரு மூன்று மாதங்கள் அவர்கள் என்னுடைய குழந்தைகள் . மொட்டு வைக்குறதுல இருந்து பூ , காய் வரும்வரை ஒவ்வொண்ணா பார்த்து ரசிப்பேன் . அப்புறம் வெயில் காலம் வந்து எல்லாம் வாடும்போது கூடவே நானும் வாடிப்போவேன் . அது மாதிரி பார்த்து பார்த்து நான் எழுதியவை எல்லாம் முதல் முறை தொலைந்து போனபோது என் தோட்டம் அழியும் நிலையை உணர்ந்தேன் . எப்படியோ எல்லாம் மீட்டு மறுபடியும் தொடர்ந்தேன் .இன்னைக்கு காலைல வச்சாரு மறுபடியும் ஆப்பு . நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க உங்களது யாஹூ deactivate செய்யப்பட்டதுனு ஒரு மெயில் நம்ம கூகிலாண்டவர்கிட்டயிருந்து . யோவ் நான் எங்கையா உனக்கு மெயில் பண்ணேன் , இல்ல எனக்கு அந்த யாஹூ வேணும்னு சொல்லி நானும் ஒரு பதில் மெயில் அனுப்பினேன் .அப்புறமா பார்த்தா இன்பாக்ஸ் இரண்டுன்னு வருது . சான்ஸ் இல்லியேன்னு இன்பாக்ஸ் தொறந்து பார்த்தா பழைய அழுக்கெல்லாம் சுத்தம் பண்ற மாதிரி புது மெயில் மட்டும் இருக்கு . அட ஆண்டவான்னு ப்ளாக் போய் பார்த்தா அங்கே கிளீன் போல்ட் . இந்த கூகிலாண்டவர் போகி விளையாட நாந்தான் கிடைச்சேனா ? மறுபடியுமான்னு கொஞ்ச நேரம் அதையே பார்த்துட்டு இருந்தா 17 போஸ்ட் காட்டுது. வியூ ப்ளாக் குடுத்தா எம்ப்டி . ரொம்ப நல்லவர் போல ட்ராப்ட் அ மட்டும் பாவம் பார்த்து விட்டுட்டு போயிருக்கார் .
எனக்கு எப்போதோ புத்தி கொஞ்சம் வேலை செஞ்சி ஒரு 10 நாள் முன்னாடி back up எடுத்து வச்சுருக்கேன் . அது தெரிஞ்ச பிறகுதான் கொஞ்சம் நிம்மதி வந்தது . என்ன அதுக்குபிறகு பப்ளிஷ் பண்ணது ஒரு நாலு மட்டும் இல்ல . அப்புறம் அதையும் கூகிளாண்டவர்கிட்ட தேடி எடுத்தேன் . எல்லாம் மறுபடியும் அப்லோட் பண்ணேன் . அவருக்கு அப்படி என்ன என்மேல கோவம் ? எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம் . கூகிளாண்டவா மறுபடியும் உன் சத்திய சோதனையை என்மேல காட்டாத அப்புறம் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டி அதையும் உன் மூலமாவே பப்ளிஷ் பண்ணிடுவேன் "BE CAREFUL".
