இது ஒரு மீள்பதிவு .
வீட்டில் இருந்த வரை திருக்கார்த்திகை வெகு சிறப்பாய் இருக்கும் . விதவிதமான கொலுகட்டைகள் . எங்கள் வயலில் விளைந்த நெல்லில் , பச்சரிசி தயார் பண்ணி அதை ஊற வைத்து அக்காவும் அம்மாவும் மாற்றி மாற்றி வீட்டு உரலில் உலக்கையால் இடித்து அந்த அரிசி மாவாவது பார்த்து ரசிப்பேன் , இதில் என்பங்கு அவர்கள் இடித்து தரும் மாவை சல்லடை அரிப்பில் பிரித்தெடுப்பது . என்னதான் மாவு மில்கள் இருந்தாலும் பெரும்பாலும் உரலில் மாவு இடிப்பதே எங்கள் வீட்டு வழக்கம் . அம்மா சீதனமாய் 40 வருடங்கள் முன்பு கொண்டு வந்தது இன்றும் நல்ல முறையில் இடித்துக் கொண்டிருக்கிறது .உரலில் இடிக்கும் இட்லி பொடி, சம்பல் என் Favourite . அதே போல் இடிமசாலா போட்டு வைக்கும் குழம்பு , கூட்டும் ..............அதெல்லாம் சாப்பிட்டாதான் தெரியும் .

நானும் உலக்கை வைத்து இடித்து பார்ப்பேன் மாவுதான் வராது , உரலில் போட்ட அரிசி அப்படியே இருக்கும் .என் அக்கா வருவா தூரப்போ நீ இடிச்சு என்னைக்கு மாவகுறதுன்னு திட்டுவா .அதென்னவோ நான் இடிச்சா மட்டும் மாவே வரதில்லை . என் அம்மா இடிக்கும்போது ஸ் ஸ் ஸ் னு ஒரு சத்தமும் கூடவே வரும் .
மாவு தயாரிப்பு முடிந்ததும் அம்மாக்கு பாகு தயாரிக்கும் பணி , அக்காவும் நானும் பனை ஓலையை அரை அடி வாக்கில் வெட்டி வைப்போம் . இந்த நேரத்தில் அண்ணா சுண்ணாம்பு கொண்டு வீட்டு திண்ணையில் வரி வரியாய் விடுவான் . அம்மாவின் பாகு - பனை வெல்லம் , சுக்கு , ஏலக்காய் எல்லாம் போட்டு காய்த்து மாவிலே இட்டு நன்றாக பிசைந்து எடுக்க அப்பவே சாப்பிடனும் போல இருக்கும் . இதிலே தேங்காய் , சிறு பருப்பும் சில வேலையில் கலப்பதுண்டு . (தேங்காய் இல்லாமல் வீட்டு சமையல் இருக்காது, ரசத்தில் கூட தேங்காய் மிதக்கும் ) அம்மா பக்குவமாய் மாவு பிசைந்து குடுக்க அக்காவும் நானும் ஊர் கதை பேசி வெட்டி வைத்த பனை ஓலையில் பக்குவமாய் வைத்து வேகவைப்போம் ,

பின்பு கை புட்டு , உதிரி புட்டு என மூன்று விதமாய் அனைத்தும் மலை ஆறு மணிக்குள் முடிந்து விடும் . பின்பு வீட்டு சன்னல் , படிக்கட்டு என எல்லா இடத்திலும் அக்காவும் நானும் போட்டி போட்டுக் கொண்டு விளக்கேற்றுவோம் . சுவாமி முன்பு நாங்கள் செய்த கொழுக்கட்டை வைத்து அப்பா பூஜை செய்ய , அனைவரும் சாமி கும்பிட்டு உக்காந்து கொழுக்கட்டை சாப்பிடும் அழகே தனி , அக்கம் பக்கம் வீடுகளுக்கு கொழுக்கட்டை பரிமாற்றமும் நடைபெறும் .
அப்புறம் பனைவரஞ்சம்பா என்று ஒரு வகை நெல் உண்டு . இதை தனிப்பட்ட முறையில் எங்கள் பகுதியில் பயிருடுவதில்லை , ஆனாலும் கலப்படமாய் வருவதுண்டு . மற்ற வகை நெல் பயிரின் மேல் கொஞ்சம் உயரம் கூடுதலாய் நிற்கும் இதன் தோலும் , உள்ளிருக்கும் அரிசியும் கருப்பு நிறத்தில் இருக்கும் .இந்த அரிசியில் இடிக்கும் மாவு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் அக்கா ,அம்மா யாராவது வயலில் பார்த்துட்டா அறிஞ்சி எடுத்துட்டு வந்துடுவாங்க . உரலில் போட்டு இடித்து தோல் நீக்கி தண்ணீரில் ஊற வச்சு மறுபடியும் உரலில் போட்டு கொஞ்சம் சுக்கு ஏலக்காய் போட்டு மாவிடுச்சா அந்த மனமே சாப்பிடத் தூண்டும் . இந்த மாவு நெஞ்சு வலிக்கும் ஒருவித மருந்து . இப்போ அக்காவும் வீட்ல இல்ல நானும் இல்ல மாவும் இடிக்குறது இல்ல . வளராமலே இருந்துருக்கலாம் .
போன வருடம் சென்னையில் , திருகார்த்திகை என்றவுடன் மேலே சொன்ன அனைத்தும் மனதில் வந்து போனது . விளக்கு வாங்கும் போது வந்த அக்காவின் நினைவு ( மணமாகி இப்பொழுது கர்நாடகாவில்) . வீடு வந்து அம்மாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறேன் கொழுக்கட்டை செய்முறை விளக்கம் கேட்டு . மாவு பிசைந்து கொண்டிருந்த அம்மாக்கு என் குரலை கேட்டதும் அழுகை . நா பனவோலை கொழுக்கட்டை பத்தி பேசினதும் அம்மாக்கு அடக்கமாட்டாமல் கண்ணீர் வருகிறது , எனக்கும் . சரிமா அதான் அண்ணா பசங்க இருக்கங்கள்ள பின்ன என்னமா வருத்தம்னு கேட்டா , யாரு இருந்து என்ன நீங்க யாரும் இல்லியேன்னு அம்மா சொன்னதும் அந்த நிமிடம் அம்மாவின் அன்பும்சென்னையின் வெறுமையும் கண்முன்னே .............
பிறகு நானும் கொழுக்கட்டை செய்தேன் முதல் முறை என்றாலும் நன்றாகவே வந்தது ( தோழிகள் சொன்னது ) . தோழிகள் சேர்ந்து சாமி கும்பிட்டதும் அக்காவின் நியாபகம் வர தொலைபேசியில் அழைத்தேன் , என்ன சாமி கும்பிட்டாச்சானு கேட்டா இன்னிக்கு என்ன விசேஷம் திடிர்னு கேக்குற.. அவ பதிலை கேட்டதுமே சப்புன்னு ஆய்டுச்சு , இன்னிக்கு திருக்கார்த்திகைனு சொன்னா மெதுவா காலன்டர் பார்த்து அட ஆமானு சொல்றா , இங்க யாரும் இத கொண்டாட மாட்டாங்க அதனால தெரியலன்னு சொல்லி தப்பிச்சுட்டா , என்ன பண்ண பார்டர் தாண்டினா எல்லாம் மறந்து போய்டுது , . சின்ன வயது கார்த்திகை பத்தி கூற ஆமானு ஒரே வார்த்தையில முடிச்சுட்டா பிறகென்ன வழக்கமான உபசரிப்புகளுடன் முடித்துக் கொண்டேன் .