
இரவும் அல்ல
பகலும் அல்ல -இருந்தும்
என்னைக் கவர்ந்தாய்
நீ !

தங்கமும் அல்ல
வைரமும் அல்ல -இருந்தும்
என்னில் ஜொலித்தாய்
நீ !

உன்னைப் பார்த்ததும்
எதோ ஓர் நிம்மதி என்னில்
காரணம் அறியேன்
அறிவாயோ
நீ !

அலை கடலென
ஓடிவரும் நீரில் -என்
அலைபாயும் மனதையும்
அடித்து சென்றாயே
நீ !

உன் கரிய இருளுக்குள்
என்னையும் வைத்து
பூட்டினாயே
நீ !

உன் அந்தி வானச்
சிவப்பில் என்னையும்
சிறை வைத்தாயே
நீ !

உன் மாலை மயக்கத்தில்
என்னையும் மயக்கினாயே
நீ !

உன் குளிர் கொண்ட
தென்றலால் என்னையும்
வருடிச் சென்றாயே
நீ !

உன் மேக அலையில்
என்னையும் மிதக்க
வைத்தாயே
நீ !

உன் மலை அழகால்
முழுவதும் என்னை
கவர்ந்தாயே
நீ !
பகலும் அல்ல -இருந்தும்
என்னைக் கவர்ந்தாய்
நீ !
தங்கமும் அல்ல
வைரமும் அல்ல -இருந்தும்
என்னில் ஜொலித்தாய்
நீ !
உன்னைப் பார்த்ததும்
எதோ ஓர் நிம்மதி என்னில்
காரணம் அறியேன்
அறிவாயோ
நீ !
அலை கடலென
ஓடிவரும் நீரில் -என்
அலைபாயும் மனதையும்
அடித்து சென்றாயே
நீ !
உன் கரிய இருளுக்குள்
என்னையும் வைத்து
பூட்டினாயே
நீ !
உன் அந்தி வானச்
சிவப்பில் என்னையும்
சிறை வைத்தாயே
நீ !
உன் மாலை மயக்கத்தில்
என்னையும் மயக்கினாயே
நீ !
உன் குளிர் கொண்ட
தென்றலால் என்னையும்
வருடிச் சென்றாயே
நீ !
உன் மேக அலையில்
என்னையும் மிதக்க
வைத்தாயே
நீ !

உன் மலை அழகால்
முழுவதும் என்னை
கவர்ந்தாயே
நீ !
