Tuesday, April 13, 2010
சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் 2
சென்னை வந்ததிலிருந்து ஊருக்கு போவது அரசு அல்ட்ரா டீலக்ஸ் இல்தான் . ஏனென்றால் பாதியில் பழுதடைந்தால் அரசுப் பேருந்து என்றால் மாற்றுப்பேருந்து உடனே கிடைக்கும் மற்றும் பாதுகாப்பான பயணம் வேறு . இதற்காகவே ஒரு அனுபவம் கிடைத்தது .,
ஒரு எட்டு மாதத்திற்கு முன்பு நானும் என் தோழியும் தூத்துக்குடி பேருந்தில் சென்னை கோயம்பேட்டில் ஏறினோம் . பேருந்து முழுவதும் காலியாய் இருந்தது இருக்கைகளும் பெரியதாய் , இருவர்க்கும் சந்தோசம் தாங்கல, ஏனா எங்களுக்கு முன்னால் இரு வரிசை இருக்கைகளும் காலி . சரி தாம்பரம் வந்தும் யாரும் ஏறலன்னா நாம தனித்தனியா தூங்கலாம்னு செம பிளான் . எங்க கெட்ட நேரம் எல்லாம் நிரம்பிடுச்சு , சரின்னு தூங்கிட்டோம் . நா நல்ல தூக்கம் ஒருமணிக்கு பஸ் எங்கயோ நிக்குது யாரோ பேசிக்கிறாங்க .
என்னப்பா ஆச்சு ?
பஸ் வீல் ல காத்து நிக்கமாட்டேங்குது ...........
எனக்கு எந்த இடம்னு கூட தெரியல . நாங்க வந்தது 7.30pm பஸ் , நாங்க இருந்தது மூன்றாவது வரிசை இருக்கை . நடத்துனர் "எல்லாரும் இறங்கி அடுத்த பஸ்ல இந்த பஸ் போகாது " சகபயணி ஒருவர் கடுப்பாகி எனப்பா பஸ் அவ்ளோ நேரம் சென்னைல நிக்கும்போது காத்து நிக்குதா இல்லையான்னு செக் பண்ண மாட்டீங்களான்னு திட்ட ஆரம்பிசுட்டாறு , எனக்கு தூக்கம் போச்சு , எல்லாரும் பஸ் ல இருந்து இறங்குறாங்க , என் அருமை தோழி கும்பகரணி தூக்கம் கலையாம , நானும் ஜன்னலோர இருக்கை , நடுவுல அவளோட பெரிய ட்ட்ரலி சூட்கேஸ் , அவளை எழுப்பி நிலைமையைச் சொல்லி விளங்க வைப்பதற்குள் நாங்கள் வந்த பேருந்து காலி .கடைசியில் இறங்கி அடுத்து பஸ் ஏறினால் எங்களுக்கு கிடைத்தது கடைசி இருக்கை . அந்த நாடு ராத்திரியில் இருட்டில் நிற்கவும் முடியாது , வேறு வழி இல்லாமல் ஏறினால் நடத்துனர் முதல்லே எங்க பஸ்ல ஏறச் சொன்னோம் அப்பவே ஏறி இருக்கலாம்னு அவர் பங்குக்கு கடுப்பேத்த செம டென்ஷன் .
நாங்க முதல்ல வந்த பஸ் 7.30 , அப்புறம் நடுவில மாறி ஏறினது 8.30 பஸ், யாராவது தாமதமா கிளம்புற பஸ்ல ஏறுவாங்களா? எல்லாம் நேரம்னு கடைசி சீட்ல உக்காந்தோம் . நடுவில ஒரு சீட் இருக்கும் , இது வரை பார்க்காதவர்கள் இனி பார்க்கவும் , கடைசி வரிசை நான்கு இரண்டு இடப்புறமும் இரண்டு வலப்புறமும் போக நடுவில் ஒரு சீட் இருக்கும் அதை சாய்க்க முடியாது , நாங்க இருப்பதே கடைசி அதிலயும் அந்த நட்டநடு சீட்ல இருக்குற சின்னபையன் தியானத்துல இருக்குற மாதிரி அசையாம தூங்குறான் , அவன் சைசுக்கும் உக்காந்த போசிசனுக்கும் செம காமெடி அந்த நேரத்திலும் அவனை வச்சு என் ப்ரெண்டு அடிச்ச comedyla கொஞ்ச நேரம் தூங்கவே இல்ல அப்புறம் அவ தூங்கிட்டா . திடிர்னு பார்த்தா நா என் காலுக்கடியில் வச்சுருந்த பை மேல விழுந்து கிடக்கிறேன் கடைசி சீட் புண்ணியத்தால் , சும்மா தூக்கி தூக்கி போட்டதுல இரவு முழுதும் தூக்கம் இல்ல . மதுரை வந்தபின்பு நடத்துனர் (புண்ணியவான் ) வந்து முன்னிருக்கை காலியாய் இருக்குனு சொன்ன பிறகே உயிர் வந்தது . மதுரை முதல் தூத்துக்குடி வரையே நித்திரைதேவி எங்களிடம் . அவ்வளவு அமர்க்களமாய்

