skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, April 13, 2010

உலக சினிமா vs உள்ளூர் சினிமா - 1


இப்பொழுதெல்லாம் பல பதிவுகள் சினிமா பற்றியே வருகின்றன , அதுவும் அயல் நாட்டுப் படங்கள் பற்றியது . 30 வருடங்களுக்கு முன்பு வந்த படங்களைப் பற்றியும் நம்மூர் பதிவர்கள் அலசி ஆராயும் பொழுது மனதில் கொஞ்சம் வருத்தம் வருகிறது .


            ஏன் நம் தமிழ் மொழியில் நல்ல படங்கள் இதுவரை வந்தது இல்லையா ? நம் சொந்தப் படைப்புகளை நாமே கண்டுகொள்ளாமல் இருந்தால் வேறு யாரு வந்து சொல்வது ? அயல்நாட்டவரா ? நாம் அவர்கள் நாட்டுப் படைப்புகளை ஆகா ஓகோவென்று பாராட்டி எழுதுவதுபோல் அவர்கள் செய்வார்களா ? அதற்காக அயல் நாட்டு அறிவு நமக்கு வர வேண்டாமா ? குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஒட்டிக் கொண்டிருக்கவா ? என்று இடக்கு மடக்காக எல்லாம் கேட்க்க கூடாது .அயல் நாட்டு அறிவும் வேண்டும் , முதலில் நம்மை சுற்றி ஒரு நூறு கிலோமீட்டர் தொலைவினில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டபின் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் நடப்பதைப் பற்றி விலாவரியாய் அலசி ஆராயலாம் .

             இங்கே பதிவுலகில் பலருடைய profile  சென்று பார்த்தால் அங்கே தமிழ் படங்கள் , தமிழ் புத்தகங்கள் , தமிழ் எழுத்தாளர்கள்  இருக்குமோ இருக்காதோ , நிறைய ஆங்கிலப் படங்கள் , ஆங்கிலப் புத்தகங்கள் , ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்கள் குறைந்தது நான்கைந்தாவது இருக்கும் . புரியுதோ புரியலையோ ஆங்கிலப் படங்கள் பார்க்கணும் , ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கணும் .அப்படி என்ன ஆங்கில மொழியின் மேலொரு மோகம் என்று தெரியவில்லை . ஆங்கில அறிவு வேண்டும் அதுவே நம் தமிழ் மொழியை மறக்கச் செய்யும் ஒரு ஆயுதமாய் மாறிவிடக் கூடாது . சராசரி வாழ்கையில் வரும் உரையாடலில் கூட பேசும் தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியலன்னு அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொல்லும் கொடுமைகளும் நடக்கின்றன , அல்லது அப்படி தமிழ் புரியவில்லை என்று சபைதனில் கூறுவதை பெருமையாய் நினைக்கின்றனர் .உதாரணம் : ஆயிரத்தில் ஒருவன் - இப்படம் முடிந்து வெளி வரும்பொழுது இரண்டாம் பாதியில் பேசும் வசனங்கள் புரியவில்லை என்று பல குரல்கள் காதில் விழுந்தன . வருத்தப் பட வேண்டிய விஷயம் .

            இப்பதிவுலகில் ஏதோ எழுதி நம் பதிவுகளின் எண்ணிக்கைகளை  கூட்டுவது பெரிதல்ல . இருக்கும் தமிழர்கள் எல்லாம் பதிவர்களோ , எழுத்தாளர்களோ அல்ல . பதிவுலகை பற்றி அறிந்தோர் வெகு சிலரே . அவர்களும் அயல் நாட்டுப் படங்களைப் பற்றி பதிவுகளைப் போட்டு அதிகமான வோட்டுகளை வாங்குவதும் வருந்தக் கூடியது . எத்தனையோ நல்ல பதிவர்கள் இங்கு உள்ளனர் .உங்களுக்குத் தெரிந்த விசயங்களை மற்றவர் அறிய எழுதுங்கள் , அதுவும் பயனுள்ளதாய் , பதிவுலகிற்கு நான் புதிய வரவே . உங்களுக்கு அறிவுரை கூறுமளவிற்கு எனக்கு அனுபவமோ வயதோ இல்லை . சினிமா , புத்தகம் பற்றி எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை . எழுதுங்கள் அது நம் தமிழ் மொழியில் வெளி வந்துள்ள சிறப்பானப் படங்கள் புத்தகங்கள் பற்றியதாய் இருந்தால் அதைப் படிக்கும் நம் மக்களும் நம் மொழியில் தெரியாதவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு பாலமாய் இப்பதிவுலகம் இருக்கட்டும் .

             இந்த பதிவு நீண்டு விட்டது , என்னை பாதித்த படங்கள் , புத்தகங்கள் , எழுத்தாளர்கள் பற்றி மற்றுமொரு பதிவில் .

பி.கு . இப்பதிவு யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல .


என் ப்ளாக் 2 முறை தொலைந்து போனதால் மறுபடியும் அனைத்தும் பப்ளிஷ் பண்றேன் . இதை ஏற்கனவே படித்தோர் பொறுமை காக்கவும் . ட்ராப்ட் ல் வைக்க முடியாமல் ஒரு முழு back up எடுக்கவே இந்த முயற்சி
Posted by மதார் at 10:31 AM
Labels: சினிமா
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ▼  April (16)
      • சாவுகளும் சடங்குகளும்
      • அந்திவானம்
      • மாநகராட்சி பேருந்தும் , T .C யும் .
      • அழகு
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் 2
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் -1
      • கிராமம் நகரம் நான்
      • உள்ளூர் சினிமா VS உலக சினிமா -2
      • உலக சினிமா vs உள்ளூர் சினிமா - 1
      • முகம் தெரியா வில்லன்கள்
      • அம்மாவின் கொழுக்கட்டையும் திருகார்த்திகையும்
      • கூகிளாண்டவரின் தாண்டவ ஆட்டம் (Me Pavam)
      • அங்காடித் தெரு - தெரு கோணல்
      • பிள்ளையாரப்பா நீயே நியாயம் சொல்லு
      • அடுத்த வீட்ல ஆள் இருக்கா?
      • நண்பா இது உனக்காக
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio