skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Thursday, April 15, 2010

மாநகராட்சி பேருந்தும் , T .C யும் .

                    கொஞ்ச நாள் முன்னாடி நடந்த ஒன்று  சைதாபேட்டை பஸ் ஸ்டாண்ட்ல ஒருத்தர் 2  டிக்கெட் செக் பண்றவங்கள சும்மா திட்டிகிட்டே போறாரு (என்ன திட்டினாருன்னு தெரியல )நான் பஸ்ல இருந்தேன் , அதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு தெரியல , ஒரு T .C திட்டுறவர துரத்துறாரு , அவரு கால்ல இருந்து செருப்பெல்லாம் எடுத்து காட்டுறாரு , T .C பயந்து திரும்பி வருது , மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு . இந்த T .C ங்க தொல்ல தாங்க முடியல காலைல 9.30 ஆபீசுக்கு பஸ்ல 9.35 க்கு நாம டைம் பார்த்துட்டே இருக்கும்போது சரியாய் நமக்குனே பொறந்தவங்க மாதிரி வருவாங்க , நாம லேட்டா வரும்போதுதான் ஒரு 3 இடத்திலாவது நாம வர பஸ்ஸ கரெக்டா செக் பண்ணுவாங்க . அப்படியே பத்திக்கிட்டு வரும் .
இதுல நான் ரொம்ப பீல் பண்ணது அக்டோபர்ல ஊருக்கு போகும்போது மாலை 6 .30  பஸ்  டிக்கெட் ஏற்க்கனவே புக் பண்ணிட்டேன் , நான் ஊருக்கு போகும்போதுதான் சென்னைல மழை , ஓவர் டிராபிக் எல்லாம் வரும் ,  கோயம்பேடு போற பஸ்ல சும்மா நெருப்பு மேல நிக்குற மாதிரி பயந்துட்டு இருக்கேன் , ஏற்க்கனவே ஒருமுறை பஸ் மிஸ் பண்ண அனுபவம் இருக்கு , சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் -1 மறுபடியுமான்னு என் மொபைல் screensaverla இருக்குற இஷ்ட தெய்வம் பிள்ளையார வேண்டிட்டு இருக்கேன் மணி 6 .40  . கோயம்பேடு மார்க்கெட்ல பஸ்,என்  பஸ் போயிருக்கும்னு பயம் வேற , ஒருவழியா C .M .B .T போய் இறங்கி ஓட ரெடி ஆறேன், T .C டிக்கெட் குடுமா, சார் எனக்கு பஸ்க்கு டைம் ஆய்டுச்சுன்னு அவசரத்துல சொல்றேன் புரிஞ்சுக்காம டிக்கெட் குடுத்துட்டு போனு   சொல்றாரு . நமக்குத்தான் அவசரத்துல  விட்டா கை அண்டாலகூட போகாதே , ஒருவழியா டிக்கெட் எடுத்து குடுத்துட்டு சும்மா P .T  உஷா ரேஞ்சுக்கு உள்ள ஓடிப்போறேன் , எதுதாப்புல எந்த மலையும் வரகூடாதுன்னு மறுபடியும் பிள்ளையார்கிட்ட விண்ணப்பம் .
                    சும்மா சொல்லகூடாதுங்க நம்ம பிள்ளையார் என்ன கைவிடல , பஸ் H .D .180 . ஸ்டார்ட் பண்ணி கிளம்ப ரெடியா இருக்கு . போய் ஏறின உடனே பிள்ளையர்க்கு அவ்ளோ நன்றி சொன்னேன் . இங்கயும் S .E .T .C  2  வது முறையா என் டிக்கெட் விசயத்துல தப்பு பண்ணிச்சு . என் நம்பர் டிக்கெட் டைம் க்கு வரலைன்னதும் என்ன தொடர்பு கொள்ளவே இல்ல , மொபைல் நம்பர் எதுக்கு வாங்குறாங்கன்னு தெரியல ? ஒருதடவ கண்டிப்பா டிக்கெட் புக் பண்ணும்போது கேக்க போறேன் .அவசரத்த கூட புரிஞ்சுக்காம அன்னைக்கு என்ன படுத்தின T .C என்னால திட்ட முடியல , இன்னிக்கு திட்டினவர பார்த்து சந்தோசமா இருந்துச்சு . அவங்க கடமைய செய்யட்டும் வேணாம்னு சொல்லல ஆனா நம்ம கஷ்டங்களையும் புரிஞ்சுக்கணும் அவங்க .  அக்மார்க் நல்ல பொண்ணுன்னு முத்திரை குத்தின மூஞ்சி என்னோடது என்கிட்டயும் அவங்க கடமை உணர்ச்சி ? கப்பல்ல போற திருட்டு தெரியாது சைக்கிள்ள போற திருட்டுதான் பெருசா தெரியும் . (ஒரிஜினல் வேற நான் மாத்திட்டேன்.)
                   மழை காலத்திலையும் ஒழுகுற பஸ் , டீசல் ஒழுகுற பஸ் - (அந்த பஸ்ல ஒருநாள் போகும்போது வீடு போற வர உயிர் கைல இல்ல) இந்த மாதிரி பஸ்ல 3  ரூபா டிக்கெட் எடுக்கிறதே பெரிய விஷயம் ........... டீசல் ஒழுகுற பஸ்ல இருக்குற டிரைவர் கிட்ட இத நீங்க டிப்போல சொல்ல மாட்டீங்களானு  கேட்டதுக்கு , நாங்க இத போய் எங்க ஆபீசர் கிட்ட சொன்னா ஓட்ட முடியலன்னா வீட்டுக்கு போனு சொல்றாங்கன்னு சொல்றார் . சத்தியமா அந்த டீசல் வாசத்துல எனக்கு மயக்கமே வந்துருச்சு . ஒரு சின்ன பொறி இருந்தா போதும் அந்த பஸ் பத்தி எரிய , மறுநாள் பேப்பெர்ல சென்னையில் ஓடிக்கொண்டிருந்த பேருந்து 80  பயணிகளுடன் நடு ரோட்டில் எரிந்து சாம்பல்னு தலைப்பு செய்தியா வந்திருக்கும் .
                  கட்டணத்த உயர்த்தி டீலக்ஸ் பஸ், A .C  பஸ்னு   இப்போ நெறைய ஓடுது , இதுல போக்குவரத்து துறை நஷ்டத்துல இயங்குதுன்னு நியூஸ் வேற . A .C  பஸ் பராமறிப்பு செலவு வரவ விட அதிகமாம் , அண்மையில் படித்த செய்தி . இவற்றிக்கு செலவழிக்க தேவைப்படும் பணத்தில் தரமான குறைந்த கட்டண பேருந்துகள் பல வாங்கலாமே !!!!!!!!!!! நாம டீலக்ஸ் மற்றும் A .C  பஸ் கேட்கலையே ?????????? என்று யோசிப்பர் நம் அதிகாரிகள் ??????????
Posted by மதார் at 12:29 AM
Labels: அனுபவம், சென்னை
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ▼  April (16)
      • சாவுகளும் சடங்குகளும்
      • அந்திவானம்
      • மாநகராட்சி பேருந்தும் , T .C யும் .
      • அழகு
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் 2
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் -1
      • கிராமம் நகரம் நான்
      • உள்ளூர் சினிமா VS உலக சினிமா -2
      • உலக சினிமா vs உள்ளூர் சினிமா - 1
      • முகம் தெரியா வில்லன்கள்
      • அம்மாவின் கொழுக்கட்டையும் திருகார்த்திகையும்
      • கூகிளாண்டவரின் தாண்டவ ஆட்டம் (Me Pavam)
      • அங்காடித் தெரு - தெரு கோணல்
      • பிள்ளையாரப்பா நீயே நியாயம் சொல்லு
      • அடுத்த வீட்ல ஆள் இருக்கா?
      • நண்பா இது உனக்காக
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio