கடவுளின் படைப்பில்தான்
எத்தனை எத்தனை
அழகு !
மனிதா இம்மண்ணுலகை
உன் பூதக்கண் கொண்டு
பார்க்காதே !
இந்த இயந்திர வாழ்வை
விட்டு வெளியில் நீயும்
வந்துவிடு !
ஓர் நிமிடம் நீயும் ஓர்
முழு மனிதனாய்
மாறிவிடு !
உன் மனக்கண் கொண்டு
இந்த பூமியைப்
பார் !
மாலையில் மடியும்
சிறு பூக்களும்
அழகுதான் !
அமைதியாய் மிதந்து
செல்லும் நதியோரத்து
மரத்தின் இலையும்
அழகுதான் !
தனித்து நிற்கும்
கருகிய மரமும்
அழகுதான் !
கருவானில் மின்னும்
வெண்ணிலவும்
அழகுதான் !
சூரியனும்
அழகுதான் !
கீழ்வானமும்
அழகுதான் -மனிதா
உன் படைப்பும்
அழகுதான் !!!





