லாட்டரி சீட்டு பலரின் வாழ்கையையே பாதாளத்தில் தள்ளியது பெரும்பாலும் படிக்காதவர்கள் குருட்டுத்தனமாய் ஜெயிக்கும் ஜெயிக்கும் என்று சம்பாதிக்கும் சில பல ரூபாய்களையும் லாட்டரி வாங்கியே உருப்படாமல் போனவர்கள் நிறைய உண்டு . இப்போ அந்தக் கவலை இல்லை தமிழ்நாட்டில் லாட்டரி தடைசெய்யப்பட்ட ஒன்று ஆனால் அமோகமாய் டாஸ்மாக் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது . ஏழைகளின் வயிற்றில் அடிப்பதில் தனியாரோ அரசோ ஒன்றுகொன்று சளைத்தது அல்லவே .
படிக்காதவர்களை விட்டுவிடலாம் இன்று படித்த நம்மில் பலர் பல விதமாய் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறோம் . டிவி நிகழ்சிகளில் கேட்கும் கேள்விக்கு பதில் அனுப்புவோருக்கு இந்த பரிசு என்று வரும் . சில வருடங்கள் முன்பு வரை அதற்க்கு ஒரு போஸ்டல் கார்டு செலவு 25 பைசாவோடு போய்விடும் . இன்று அதெல்லாம் போய் நவீன அறிவியல் முன்னேற்றம் வீட்டில் இருந்த இடத்தில் இருந்தபடியே மொபைலில் தட்டுங்கள் பரிசை வெல்லுங்கள் . உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ஒரு மெசேஜ் மூன்று ரூபாய் மட்டுமே. இதையே முழுநேர தொழிலாய்க் கொண்டு பல டிவி நிகழ்சிகள் . இதிலும் மன சாட்சியே இல்லாமல் இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சானலில் வரும் சினிமா சினிமா நிகழ்ச்சி . பல பேர் பார்த்திருக்கக் கூடும் அதில் வரும் ஹீரோ ஹீரோயின் பாதி முகம் சேர்த்து வைத்து ஒருமுகமாய்க் காட்டி மூச்சு விடாமல் இரண்டு பேர் பேசிக் கொண்டே இருப்பர் . மாடு பிடிக்கிற மாதிரி பேரம் 40000 இல் ஆரம்பித்து நேரம் குறையக் குறைய பரிசுத் தொகை குறைந்து கொண்டே வரும் . காலர் லைனில் இருப்பார் பெயர் ஊர் எதுவும் கேட்கப்படாது ஆனால் அவர் தவறான விடை சொல்லுவார் லைன் கட்டாகிவிடும் . பார்க்கிறவன் எல்லாம் லூசுங்க என்ற நினைப்பு அங்கிருக்கும் ஹீரோ ஹீரோயின் யாரென்று இன்றிருக்கும் பள்ளி போகும் குழந்தைகளைக் கேட்டால் கூட சரியாய் பதில் சொல்லுவர் .
அதிலும் அவர்கள் குடுக்கும் க்ளு Tha m_ nn a இதிலும் வரும் காலர் சம்மந்தமேயில்லாமல் வேறு வொரு பெயர் சொல்லுவார் லைன் கட் ஆகிவிடும் . அண்மையில் நண்பன் சொன்னது அந்த ஷோ நல்லா ஏமாத்துராங்கப்பா ஷோ பாரு எவனும் சரியா பதில் சொல்ல மாட்டான் லைன் கட் ஆகும் அவங்களுக்குள்ளேயே ஆள் வச்சு போன் செஞ்சி ஏமாத்துறாங்க . இதில் நிஜமாவே போன் பண்ணுறவங்களுக்கு நீங்கள் வெயிட்டிங்கில் உள்ளீர்கள் தொடர்பிலேயே இருங்கள் எந்நேரமும் உங்களுக்கு வாய்ப்பு வரலாம் என்று சொல்லியே ஒருமணிநேரம் வெயிட்டிங்கில் வைத்து அவர்களுக்கு நல்லா பில் போகும் . ஒருவர் ஒருமணி நேரம் வெயிட்டிங்கில் இருந்தால் அவர் போஸ்ட் பெய்டு வைத்திருந்தால் அவருக்கு அந்த ஒரு மணி நேர பில் மட்டும் 3000 , ஒரு நிமிடத்திற்கு அந்த ஷோவில் பத்து ரூபாய் . அதிலேயே கீழே போகும் கால் பேர் மினிட் பத்து ரூபாய் என்று கண்ணுக்கே தெரியாத அளவில் . அது எல்லோரும் பார்ப்பார்கள் என்றும் சொல்ல முடியாது ஐ நமக்கு தெரிஞ்ச ஹீரோ ஹீரோயின் ட்ரை பண்ணலாமே என்று உடனே போன் தான் எடுப்போம் . இந்த மாதிரியான நிகழ்சிகளுக்கும் நம் செல் நம்பர் வைத்திருக்கும் (AIRTEL , AIRCEL,BSNL, VODAFONE ETC ) கம்பெனிகளுக்கும் என்ன தொடர்பு . நம் பணம் இந்த செல் நம்பர் கம்பனிகள் மூலம் டிவி சானல்களுக்கு எந்த வகையில் திருடி கொடுக்கப்படுகிறது .வெறும் 40000 பரிசுத் தொகையைக் காட்டி தினம் தினம் எத்தனைபேரை ஏமாற்றுகின்றனர் . ஒரு இருபது பேர் லைனில் இருந்தாலே ஒருமணி நேரத்துக்கு ஒருவருக்கு 3000 என்று எடுத்துக் கொண்டால் இருபது பேருக்கு ? இந்த நவீன கொள்ளைக்கு லாட்டரி சீட்டே தேவலாம் போல .
