கத்தரிக்காய் :
சாம்பாரில் பெரும்பாலும் இதை சேர்ப்போம் ஆனால் இதை சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைவு . இதை வைத்து இரண்டு item பார்க்கலாம் .கத்தரிக்காய் தொக்கு :
தேவையானவை :
கத்தரிக்காய் - நபர்களைப் பொறுத்து எண்ணிக்கைமிளகு - ஒரு ஸ்பூன் (உருண்டை மிளகு பதினைந்து )
சின்ன சீரகம் - ஒரு ஸ்பூன்
வெந்தயம் -கொஞ்சம் போதும்
பச்சை மிளகாய் - கால் கிலோ கத்தரிக்காய் எனில் ஒரு நான்கு மிளகாய்
தக்காளி பழம் - இரண்டு
புளி - இரண்டு கொட்டை அளவு
பெ.வெங்காயம் - இரண்டு
மஞ்சள் தூள்
செய்முறை " கத்தரிக்காயை கழுவி குட்டிகுட்டியாய் நறுக்கிக் கொள்ள வேண்டும் . கடைசியில் நறுக்கினால் நன்று . வெட்டி வைத்த கத்தரிக்காய் காற்று படும்படி ரொம்ப நேரம் வைத்திருப்பின் காறும். பெரிய வெங்காயத்தை அதே போல் குட்டியாய் நறுக்கி வைக்கவும் . மேலே சொன்ன மிளகு , சீரகம் , மிளகாய் , புளி , தக்காளி வெட்டியது , மஞ்சள் தூள் , நறுக்கிவைத்த கத்தரிக்காய் , வெங்காயம் , இரண்டு டம்ளர் தண்ணீர் , உப்பு எல்லாம் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வைத்து எடுத்து ஐந்து நிமிடம் கழித்து பருப்பு மத்து வைத்து நல்லா மசிச்சாலே போதும் . எண்ணெய் ,கறிவேப்பிலை , கடுகு போட்டு தாளிக்கும்போது மீண்டும் மிளகு , சீரகம் , வெந்தயம் போட்டு தாளித்து கொட்டினாலே போதும் . சேர்க்கும் தண்ணீர் பொறுத்து குழம்பாகவும் , இட்லி தோசை தொட சைடு டிஷ் ஆகவும் இருக்கும் .
கத்தரிக்காய் பிரை :
இந்தமுறையில் கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாய் நறுக்கி வைக்க வேண்டும் . மிளகாய் தூள் , உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் மீன் பிரைக்கு செய்வதுபோல் தடவி ஒரு பத்து நிமிடம் வைத்தாலே போதும் . அதிலிருக்கும் தண்ணீர் வெளியே வந்து மசாலா கலந்து பிரைக்கு ரெடி ஆகிவிடும் . தோசைக் கல்லில் நல்ல சூட்டில் வைத்து கொஞ்சம் அதிகமாய் எண்ணெய் விட்டு பிரை பண்ண வேண்டும் . இது சுட சுட சாப்பிட சூப்பரா இருக்கும் .எரா சைடு டிஷ் :
தேவையானவை :எரா
பெரிய வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு
எண்ணெய் கடுகு போட்டு பின்னர் பூண்டு சேர்த்து முதலில் நறுக்கி வைத்த வெங்காயம் , உப்பு சேர்த்து வதக்க பாதியில் தக்காளி சேர்க்க வேண்டும் .தொடர்ந்து எரா , மிளகாய் தூள் சேர்த்து பத்து நிமிடம் வதக்க எரா சுருண்டு வெந்து உடனே சாப்பிட வேண்டும் என்பது போல் வரும் . இதே செய்முறையில் சிக்கன் செய்தாலும் நன்றாய் இருக்கும் தண்ணீர் சேர்க்க கூடாது . தனி மிளகாய் தூள் அல்லது சிக்கன் தூள் சேர்க்கலாம் .
