skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Monday, December 13, 2010

அரசுத்துறையின் அவலங்கள்

குடிமக்களான நமக்கு வேண்டிய அடிப்படைக் கட்டமைப்புகளை செய்து தரவேண்டியது ஒரு அரசின் கடமை .ஒரு திட்டம் நிறைவேற்றப்படுதலை மூன்று விதமாய் பிரிக்கலாம் . 1 .திட்டமிடல் 2 .செயல்படுத்தல்  3 .பராமரித்தல் . இதில் திட்டமிடல் என்பது மக்களின் தேவையும் அதை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து சில நேரங்களில் அரசே ஒரு திட்டத்தை தொடங்கலாம்  அல்லது மக்களின் தொடர் போராட்டங்களின் மூலம் தேவையின் பொருட்டு ஒரு திட்டம் வடிவமைக்கப் படலாம் . இது நடக்கவே மாதங்கள் வருடங்கள் என்று கிடப்பில் போடப்பட்டு கூட நிறைய திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கும் . அடுத்து வரும் செயல்படுத்தல் இதைப் பற்றி சொல்லவே வேண்டாம் பெட்டி பெட்டியாய் கை மாறி மாமா மச்சான் தெரிஞ்சவன் அறிஞ்சவன் என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு நியாயமாய் எந்த ஒளிவு மறைவுமின்றி டெண்டர் ஒரு வழியாய் ஒரு ஒப்பந்தக் காரர் கைவசம் போய் சேருவதற்குள் ஆட்சியே மாறி இருக்கும் . அந்தா வருது இந்தா வருது ஆடிக்கு வருது அமாவாசைக்கு வருது என்று கட்டி முடிக்கும் முன் அதற்கும் நடுவில் நாலு வாட்டி அது இடிந்து விழுந்து குறைந்தபட்சம் ஒரு நாலு உயிர் காவு வாங்கியபின் சரியாய் திட்டமிடப் பட்ட மாதங்களில் இருந்து தோராயமாய் சில பல மாதங்கள் சத்தியமா முன்னாடி முடியாது . பத்து மாத பிராஜெட் இருபது மாதத்தில் முடிந்தாலே அதற்கு ஒரு விழா எடுக்கணும் .

ஊரக வளர்ச்சித் துறை . கிராமப் புற மேம்பாட்டு துறை , என்று Rural Development   மத்திய மாநில திட்டங்களின் மூலம் கிராமப் புறங்களில் கட்டப் பட்ட பல கட்டிடங்கள் அவை ஏன் கட்டப் பட்டன என்ற செய்தி தெரியாமலே விடியலைக் கானா இரவு போல் இன்னமும் திறப்பு விழா  காணாமல் துரு பிடித்த பூட்டுகளுடன் தூங்கிக் கொண்டு இருக்கின்றன . எல்லாம் யார் வீட்டுப் பணம் ? கொஞ்ச நஞ்சமாய் மனசு வந்து மக்களுக்கு செலவழிக்கப் படும் பணமும் முழுவதுமாய் மக்களைப் போய்ச் சேராமல் திட்டம் தீட்டப் பட்டது நிறைவேற்றி விட்டோம் அத்தோடு எங்கள் பணி முடிந்து விட்டது என்று நாட்டுக்கு உழைக்கும் நல்ல பல அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் நிறைந்த நாடு நம் நாடு . அதிலும் சில கட்டிடங்களில் இருக்கும் பலகையில் திட்ட மதிப்பு அது முடிக்கப் பட வேண்டிய காலம் என்று ஒரு அறிவிப்பு  இருக்கும் . காலத்தை  விட்டுவிடலாம் ஆனால் திட்டத்தின் செயல் மதிப்பு என்று இருக்கும் தொகைதான் மூச்சு முட்ட வைக்கக் கூடியது . சிவில் இஞ்சினீயர்  படித்து முடித்து வேலை பார்க்கும் போதுதான் Estimation , Costing என்று ஒரு கட்டிடம் கட்ட எவ்வளவு பணம் செலவாகும் என்று என்னால் கணிக்க முடிந்த பின் இந்த மாதிரியான அரசுக் கட்டிடங்களின் திட்டமதிப்பு தொகை பார்த்து பல நேரங்களில் ஆத்திரம்தான் வந்தது . அங்கு குறிப்பிடப் பட்டு இருக்கும் தொகையில் பாதியே அதிகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் . பத்தடிக்கு பத்தடி ஒரு சின்ன கட்டிடம் கட்ட திட்ட மதிப்பு பல லட்சங்களில் இருக்கும் . அப்புறம் அந்த வேலையைப் பெற பெட்டிகள் பல மாறுவதில் சந்தேகமேயில்லை .

இப்படி பல குளறுபடிகளினால்தான் டெல்லி மெட்ரோ ரெயில் ப்ராஜெக்ட் நடக்கும்போதே தொடர்ந்து நடந்த சில விபத்துகள் . அது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய மெயில் ஒன்று பார்த்து என்ன சொல்ல கத்துக் குட்டியான எனக்கே அதில் அவளவு தவறுகள் தெரிந்தன . அடிப்படைத் தவறு டிசைன் முதற்கொண்டு site Execution வரை இருந்தது . பல பெட்டிகள் , அரசியல் என்று நடக்கும் பலப் பரிட்சையில் தகுதி குறைந்த பல ஒப்பந்தக் காரர்கள் கைவசம் இந்த மாதிரியான மக்கள் சார்ந்த அரசுத் துறை பணிகள் செல்வதுதான் அங்கே நடக்கும் விபத்துகளுக்கும் இழப்புகளுக்கும் காரணமாய் ஆகின்றன . அண்மையில் நாடே அறிந்த  டெல்லி அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து பல பேரை பழி  கொண்ட சம்பவமும் ஒரு உதாரணமாகத்தான் இருக்கும் . அடுத்து மூன்றாவதாய் வரும் பராமரிப்பு இப்படி ஒன்று நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கடவுள் பற்றி கமல் கூறுவது போலத்தான் இதுவும் . பல கோடிகளைக் கொட்டித்தான் ஒவ்வொரு திட்டமும் செயல் படுத்தப் படுகிறது . அது செயல் பாட்டுக்கு வந்த பின்னர் அதன் பராமரிப்பில் காட்டும் அலட்சியம் பல கோடி திட்டத்தினை சில ஆயிரங்கள் செலவழித்து பராமரிப்பதில்தான் அரசின் கஜானா குறைந்து விடப் போகிறதா என்ன ? அதிலும் பல திட்டங்கள் தீட்டப் படும்போது கணக்கில் எடுத்துக் கொண்டவை அனைத்தும் செயல்படுத்தப் படுவதும் இல்லை . உதாரணம் பலர் பார்த்திருக்கக் கூடும் டைடல் பார்க் பறக்கும் ரெயில் நிறுத்தம் . அந்தக் கட்டிடம் முழுவதுமாய் இன்னமும் கட்டி முடிக்கப் படவில்லை அதில் வெளிப்புறத்தில் பொருத்தப் பட்டிருக்கும் விளம்பரப்  பலகைகளுக்கான ஸ்டீல் போர்டுகளும் துருபிடித்து போய் எலும்புக் கூடாய் காட்சி அளிக்கிறது .அது ஒவ்வொன்றும் பொருத்தப் பட அரசின் பணம் எவ்வளவு சமந்தப் பட்ட ஒப்பந்தக் காரர்களுக்கு செலுத்தப் பட்டிருக்கும் .

அடுத்து இந்திரா நகர் நிறுத்தத்தில் இன்னமும் பாதி வேலைகள் அப்படியே நிற்கின்றன அதற்கு அமைத்த சாரங்களும் (Scaffolding props ) அப்படியே நிற்கின்றன . அதில் இருக்கும் ஒரு ஆணி கழண்டு விழுந்தாலும் மொத்த அமைப்பும் விழுந்து அதில் யாராவது நிற்கும் பொது கண்டிப்பாய் விபத்து ஏற்படும் . அதற்கு ஒரு விடிவு காலம் எப்பொழுது வருமோ ? . அங்கிருக்கும் படிக்கட்டுகளும் தூண்களும் அழகான வெள்ளை நிற tile கொண்டு கட்டிருப்பர் . அதன் நிறம் இப்பொழுது சிவப்பு , ஸ்டேஷன் கட்டியதிலிருந்து அந்த இடங்கள் துப்புரவு செய்யப் படவேயில்லை போல  பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும் . லாட்டரி தடை செய்யப் பட்டது போல இந்த பான்பராக் போன்ற இதர வஸ்துகளையும் தடை செய்தால் அரசுக் கட்டிடங்கள் கொஞ்சம் தப்பிக்கலாம் .அங்கிருக்கும் நடைமேடை , படிக்கட்டு என அத்தனையிலும் அவ்வளவு சுத்தம் பார்த்த பின் அந்த தண்ணீர் தொட்டி மற்றும் கழிவறைகளை யாரும் பயன் படுத்த நினைப்பரா?





                                                  விளம்பரப் பலகை

 விபரீதம் தெரியாமல் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் வாலிபர் .




Posted by மதார் at 5:23 PM
Labels: அரசு, அனுபவம், சென்னை, திருவான்மியூர் ஸ்டேஷன்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ▼  December (11)
      • அது ஒரு மீன் காலம்
      • நான் இன்ன ஜாதி நீ என்ன ஜாதி
      • மண்ணும் உறவும் நகர்ப்புறமும்
      • தோசையம்மா தோசை
      • அம்மா கை வைத்தியம்
      • பேச்சிலர் குட்டி குட்டி சமையல்
      • அரசுத்துறையின் அவலங்கள்
      • பளபளக்கும் அசன்டாஸ் பரிதவிக்கும் தரமணி
      • விவசாயம் அது ஒரு சுவாரசியம்
      • நவீன லாட்டரி சீட்டு கொள்ளை
      • நந்தலாலா - இன்னும் செதுக்கிருக்கலாம்
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio