skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Friday, December 17, 2010

தோசையம்மா தோசை

வீட்டில் இருக்கும்போதே தோசை என்றால் பிடிக்காது . அம்மாதான் வெறும் ஆவில வேகுற இட்லி சாப்டுற என்னில வேகுற தோசை வேணாமா என்ன பிள்ளை நீ என்று சொல்வாங்க . ஹாஸ்டல் போனேன் சாதா தோசை , ரவா தோசை , மசாலா தோசை என வாரத்தில் நான்கு   முறை தோசை .இதில் எல்லா தோசைக்கும்  வைக்கும் சாம்பார் என்னவோ ஒன்றுதான் . மெஸ் மாஸ்டர் முதல் அங்கிருக்கும் பெண்கள் வரை நமக்கு பிரெண்ட் , அதான் பேசியே மயக்கிடுவோமே .மெஸ் உள்ளே  நமக்கு தாராள மரியாதை உண்டு வெள்ளி இரவு இருக்கும் சாதா தோசைக்கு மெஸ்ஸில் இருக்கும்  தக்காளி , வெங்காயம் , பச்சைமிளகாய் , உப்பு கொண்டு நான் செய்யும் பச்சடி அங்கிருக்கும்  சாம்பாரைவிட  தோசைக்கு  நல்லா இருக்கும் .என்ன என் பிரெண்ட்ஸ் செஞ்சவளுக்கும் கொஞ்சம் குடுப்போமே என்று நினைக்கும் பெரிய ஆட்கள் அல்ல . நான் தோசை எடுத்துவிட்டு திரும்பும் முன் வெற்று டிபன் பாக்ஸ் தான் இருக்கும் .           

சனிக்கிழமை காலை ரவா தோசை அது வாங்க வரிசையில் நிற்கும் நேரத்துக்கு நான் பஸ் ஏறினால் என் வீட்டுக்கு போய்டலாம் . அந்த தோசை சுட மாஸ்டர் விளக்குமாறை எண்ணையில் தொட்டு அந்த பெரிய தோசக் கல்லை கொஞ்சம் கூட்டி எடுத்து மாவு ஊத்தி தோசை சுடும் அழகே தனி . என்னோட பாவரைட் தோசை  அது வாங்க வரிசையில் நிற்க வேண்டும் . நாம் முதலாவது அல்லது இரண்டாவது வருடம் படிக்கும் மாணவியாகும் பட்சத்தில் வரிசையில் நிற்க ரொம்பவே பொறுமை வேண்டும் . மூன்றாவது , நான்காவது படிக்கும் மாணவியர் வந்து அவர்கள் பாட்டுக்கு முன்னே போய் வாங்குவர் நாம் பார்த்துக் கொண்டே நிற்க வேண்டும் .அடுத்த நாள் சண்டே காலையில் மசால் தோசை இதுவும் வரிசையில் நின்றே வாங்க வேண்டும் . தோசைக்கு நடுவில் வைக்கும் உருளைக்கிழங்கு மசாலா கலவை சூப்பர் டேஸ்ட் . இரண்டு  தோசை போதும் போதுமென்கிற அளவுக்கு வயிறு நிறையும் . மதியம் இருக்கும் அவியல் சாப்பாடு சாப்பிட எப்படியும் மணி மூன்று ஆகும் .

எங்கள் மசால் தோசைக்கு  இன்னொரு பெயர் மயக்க தோசை .சாப்பிட்ட அரை மணிநேரத்தில் நித்திரா தேவி நம்மை அழைக்கும் . தூக்க மாத்திரையே போடாமல் இதமான தூக்கத்துக்கு  எங்கள் ஹாஸ்டல் மசால் தோசை இரண்டு போதும் .வழக்கமான நேரங்களிலேயே நான் ஒரு தோசைதான் சாப்பிடுவேன் அதுக்கே எப்படியும் ஒருமணி நேரம் தூங்கிடுவேன் . எக்ஸாம் நேரமென்றால் அரை தோசைதான் நிறைய படிக்க வேண்டும் என்றால் முன்னிரவே இரண்டு வாழைப் பழம் எடுத்து வச்சுடுவேன் காலையில் பாலும் பழமும் கொஞ்ச சீக்கிரமே லஞ்ச் சாப்பிடுவேன் தூக்க மாத்திரை தோசைக்கு கட் சொல்லிடுவேன் . என் ரூம் மேட் சாப்பிட்டு வருவா , முதலில் உக்காந்து படிப்பா அப்புறம் ஒரு பத்து நிமிடத்தில் மெதுவா படுத்துக் கொண்டே படிப்பா நான் பார்த்துக் கொண்டே இருப்பேன் எப்படியும் இரண்டு தோசைக்கு தூங்கணுமே ? அடுத்த பத்து நிமிடத்தில் புக் ஒருபுறமும் அவள் ஒருபுறமும் ரெஸ்ட் எடுப்பர் அதேதான் ஆப்பரேசன் சக்சஸ் . இரண்டு தோசை எப்படியும் இரண்டுமணி நேரம் தூங்கனும் இல்லேன்னா படிக்கவே முடியாது .

நாங்கள் நான்காவது ஆண்டு வந்தவுடன் முதல் வேலை ரவா தோசையை தூக்கினதுதான் . அதிக நேரம் நிற்க வேண்டி இருப்பதால் மெனுவில் இருந்து ரவா  தோசைக்கு குட்பாய் சொல்லியாச்சு . அரசுக் கல்லூரி என்றாலும் விடுதியைப் பொறுத்த வரையில் நாங்கள் வைத்ததுதான் சட்டம் .ஒவ்வொரு வருடமும் மெனு லிஸ்ட் தயார் பண்ணுவதும் நான்காம் ஆண்டு மாணவியர் தான்  . சட்னியில் உப்பில்லை என்றாலும் என்ன மாஸ்டர் உப்பிலே என்று தைரியமாய் கேட்க முடியும் .போராட்டமில்லா வாழ்க்கை ஏது,  நாங்களும் போராட்டம் செய்து ரௌடி என்று நிரூபிக்க ஒரு நேரம் வந்தது .ஒருநாள் ஏதோ திடிரென்று காலையில் சாப்பிட எதுவுமே ஹாஸ்டலில் ரெடி பண்ணவில்லை அத்தனை மாணவியரும் பட்டினி . விடுதி அலுவலகம் முன்பு எல்லோருமே உக்காந்து போராட்டம் யாருமே கிளாஸ் போகல . இருந்த இடத்துக்கு உடனே தேடி வந்தது ப்ரெட் ஜாம் . இப்படியே தோசை தோசை என்று வெறுத்துப் போய் வெளி இடங்கள் சென்றாலே தோசை தவிர எது வேண்டுமானாலும் சாப்பிடத் தொடங்கினேன் . எத்தனை நாளைக்கு தப்பிக்க முடியும் இப்பொழுது இருக்கும் ரூம் நான் வந்து சேர்ந்த போது வாரத்தில் குறைந்தது நான்கு இரவுகள் தோசை வெறுத்துப் போய்ட்டேன். அந்தக் கொடுமையில் இருந்து தப்பிக்க ஒருவழியாய் எப்படியோ எல்லோரையும் சமைக்க பழக்கிட்டேன் தோசைக் கொடுமை கொஞ்சம் குறைந்தது .

மாத பட்ஜெட்டில் எப்படியும் தோசை பொடிக்கு ஒரு அமௌன்ட் இருக்கும் . வேலையே இல்லாத சாப்பாடு மாவு ரெடி மேட் வாங்கினோமா தோசை சுட்டோமா பொடியை வச்சு சாப்பிட்டோமா என்று இருக்கும் . இவங்களை இப்படியே விட்டா நல்லா இருக்காது என்று தோசை பொடி வாங்குவதை குறைத்துக் கொண்டேன் . அப்படியே இருந்திருக்கணும் போன மாசம் நாமலே தோசைப் பொடி செய்வோமே ரொம்ப நாள் ஆச்சே என்று உளுந்து வாங்கி வந்தேன் . அதுவும் ரொம்ப நாளா இருந்தது சரி வேலையை விட்டாச்சு பொடி செய்வோமேன்னு செஞ்சேன் . இந்த வாரம் பாதி நாள் தோசைதான் சாப்பிடுறேன் . இதுதான் சொந்தக் காசில் சூனியம் வச்சுக்கிறதா? நான் செய்த எலுமிச்சை ஊறுகாயும் சாப்பிடும் அளவுக்கு ஊறி வந்திடுச்சு அது இன்னமும் அவங்களுக்கு தெரியாது . தெரிஞ்சது அது முடியும் வரை சைடு டிஷ் செய்வதும் நின்று போய்டும் என் சொந்தக் கையால் எனக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு.என் தோசைக் கொடுமையில் இருந்து நான் வெறுத்துப் போய் என்றோ எடுத்த முடிவு என் வீட்டில் தோசையே சுட மாட்டேன் , என்ன ஒன்னு வரப் போற புண்ணியவானுக்கு  தோசை  பிடிக்காத உணவாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் .

Posted by மதார் at 3:40 PM
Labels: அனுபவம், ஹாஸ்டல்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ▼  December (11)
      • அது ஒரு மீன் காலம்
      • நான் இன்ன ஜாதி நீ என்ன ஜாதி
      • மண்ணும் உறவும் நகர்ப்புறமும்
      • தோசையம்மா தோசை
      • அம்மா கை வைத்தியம்
      • பேச்சிலர் குட்டி குட்டி சமையல்
      • அரசுத்துறையின் அவலங்கள்
      • பளபளக்கும் அசன்டாஸ் பரிதவிக்கும் தரமணி
      • விவசாயம் அது ஒரு சுவாரசியம்
      • நவீன லாட்டரி சீட்டு கொள்ளை
      • நந்தலாலா - இன்னும் செதுக்கிருக்கலாம்
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • முகம் தெரியா வில்லன்கள்
    வாழ்க்கையில் எத்தனையோ வில்லத்தனம் மத்தவங்க பண்ணி பார்த்திருப்போம் ஏன் சில நேரங்களில் நாம் கூட சில சில்லறை வில்லத்தனம் செய்திருப்போம் . ஆனால்...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio