இயக்குனர் சிலர் பெயரை சொன்னாலே அவர் படமா சூப்பர் இந்த இசையமைப்பாளரா அவர்னாலே பாட்டு ஹிட்டு .இது ஒருவிதமான பிராண்ட் நேம் மாயை .இதேபோலத்தான் இந்த தளமா இங்கே என்ன எழுதினாலும் அது நூத்துக்கு நூறு சரியாத்தான் இருக்கும் .இப்படி ஒரு மாயையை என்ன செய்ய . வினவு தளத்திலிருந்து வெளிவரும் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு அது வெளிவந்த அடுத்த நொடியே வரிசையில் இருந்து ஆதரவுக் கொடி பிடிப்போரை என்ன செய்வது ?.
நரிக்கும் காக்காவுக்கும் நடுக் காட்டில் கல்யாணம் அதில் குயில் கூவியது மயில் ஆடியது என்று தங்கள் கழக ஆளுங்களை விட்டு களப் பணிசெய்து புரட்சி என்று எழுதலாம் .அல்லது வின் குடும்பம் யாரை அடித்து உலையில் போட்டு முன்னேறியது என்று கழக ஆட்கள் வைத்து பி ஹெச் டி செய்து எழுதலாம் .இப்படி எழுதுவதிலாவது பத்தில் ஒரு வார்த்தை உண்மையாய் இருக்கலாம் .அதை விட்டுட்டு ஆணீயம் ,பெண்ணீயம் ,பார்பனீயம் என்று ஏதாவது ஒரு ஈயத்தின் பெயரில் பதிவுலகில் யாராவது ஒருவர்மேல் தூக்கிக்கொண்டு வரும் குற்றப் பத்திரிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு எழுதும் நிலை போனால் பூசுவதற்கு கரி அல்ல தார்தான் ஆர்டர் செய்ய வேணும் .
இப்போ புதுசா ஒரு பல்லவி எங்கே பார்த்தாலும் பாடுது .பதிவர்கள் எல்லாமே அனானி யாருமே தங்கள் முழுவிபரம் தந்து எழுதுவதில்லை . ஒன்னு புரியல இங்கே எழுத வர வேண்டும் என்றால் ரேசன் கார்டு காப்பி எடுத்து போட்டுதான் எழுதணுமா . நாங்களாவது பெயர் ,வயது ,இடம் ,செய்யும் தொழில் என குறைந்தபட்சம் எங்களைப் பற்றிய சுய விபரங்கள் போட்டுதான் எழுதுறோம் .இது எதுவுமே இல்லாமல் இருக்குற சிம்பல் ,நம்பர் , எழுத்து என்று போட்டு ஆணா,பெண்ணா என்று கூட தெரியாமல் ஒரு வலைப்பக்கம் அல்லது ID மட்டும் வச்சுக்கிட்டு வாய் கிழிய வக்கனையா அடுத்தவர்களை பற்றி கேள்வி எழுப்புவது .இப்படிப்பட்ட ஆட்களின் கூட்டம் ஒன்று வைத்துக் கொண்டு "ஆணாதிக்கத்திடம் அடிமைப்பட்டு இருக்கும் மதார் , புனைவுக்கு பெயர் பெற்றவர்கள் அரவிந்த் ,முகிலன் ." என்று லேபிளிலும் வலைதளைதிலும் எங்களைப் பற்றி எழுத எந்த யோக்யதையும் இல்லை . எங்கள் பெயர் போட்டு எங்களைப் பற்றியும் எங்கள் நடத்தை குணம் பற்றியும் எழுதிக் கிழிக்க நீங்கள் யார் ? .அதிலும் ஒரு அரை என் போடோவையும் பார்த்துவிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி போட்டோ விஷயம் வெளிவந்ததும் அப்படியா அப்படியா என்று ஒன்னும் தெரியா பாப்பா மாதிரி நடிப்பு . அதிலும் நான் நடிப்பில் லீனாவை மிஞ்சிவிட்டேன் என்று பட்டம் வேறு . எனக்கு பட்டம் குடுக்க நீங்கள் யார் ?.
பூனை கண்ணை மூடிட்டு உலகமே இருட்டு என்று சொல்லுமாம் . அதுபோல வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்குமாம் . இருக்குறவங்களும் சரி ஆதரவு குடுக்குரவங்களும் சரி எல்லாமே பூனை கூட்டம் .ஒரு நாள் அல்ல ஒரு நாள் பால் நிச்சயம் .
பலர் இருக்கும் இடத்தில் எழுத வந்தாச்சு அப்புறம் ஆணென்ன பெண்ணென்ன ? . ஒரு பெண் பதிவர் ஆண் பதிவரை பொறுக்கி என்று போற வழியில பொறுமையா சொல்லிட்டு போகலாம் .அதே ஒரு ஆண் ஒரு வார்த்தை பெண்ணைப் பற்றி சொன்னால் போதும் உடனே இருக்கு வார்த்தைகள் வன்புணர்வு ,துகிலுறிப்பு.செய்தி கேள்விப்பட்ட உடனே உக்காந்து பக்கம் பக்கமா எழுத வேண்டியது கேட்டா நடுநிலையாம் .இதுக்கு பேரு நடுநிலை இல்லை கொடுநிலை .அதிலும் நீங்க என்ன சொன்னாலும் சரியாத்தான் சாமி இருக்கும் என்று தலையாட்ட ஒரு படித்த முட்டாள் கூட்டம் .
நீங்கள் ஒரு இயக்கமா? போராடும் கூட்டமா ? போராடுங்க நியாமான விசயத்துக்கு அந்த நியாயம் எல்லோருக்கும் சரிசமமாய் எல்லா காலகட்டத்திலும் கடைபிடிக்க வேணும் .இல்லையில்லை நாங்க ஈயத்துக்குதான் பெருசா போராடுவோம் என்றால் தார் நிச்சயம் .
