Wednesday, September 1, 2010
தண்ணீரும் கண்ணீரும்
சாவுக்கும் வெளிவராத நீ
ஒரு சொல்லுக்கு மட்டும்
திரண்டு வருவதேன் ?
வெளிவரும் வேகம்தனில்
இரு கரை தொட்டு
புரண்டோடுவதேன் ?
மீண்டும் வருகையில் சொல்
நானும் உன்னுடனே வருகிறேன்
வழியினில் மூர்ச்சையாகிப்
போகையிலும் உன் சிரிப்பொலி
மட்டும் என் காதுகளில்
தொடர்ந்து ஒலிக்கட்டும்
சங்கமம் வரையிலும் .....
***************************************
பல நேரக் குளியல்களில்
தண்ணீரோடு சோர்வுகளும்
சோப்பு நுரைகளும் போகலாம் !
சில நேரக் குளியல்களில்
தண்ணீரோடு சோகங்களும்
கண்ணீரும் போகலாம் !
