தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?
மேடம் என் போட்டோ என்ன பாண்டி பஜாரில் ரோட்டோரம் கூவி கூவி விற்கும் வியாபாரப் பொருளா ? இல்லே ஆடி மாதம் தெருவுக்கு தெரு வைத்து வருவோர் போவோருக்கு எல்லாம் கூப்பிட்டு இலவசமாக குடுக்கும் கூழா ? உடனே உன் போட்டோ ப்ரோபைல் மூலமா நாடு நாடு சுத்துதுன்னு சப்ப கட்டு கட்டக் கூடாது .பதிவுலகம் வந்த புதிதில் எல்லோரையும் போல நானும் போட்டோ வைத்தேன் அதன் விளைவுகள் ஒரு நண்பர் மூலம் சொல்லக் கேட்டு போட்டோ எடுத்து பல மாதங்கள் இருக்கும் . உங்களை எதுவும் நான் இலவச புகைப்பட தூதரா வைக்கலையே ? இல்ல உங்க கிட்டு போட்டோ குடுத்து தான் எல்லோருக்கும் அனுப்ப சொன்னேனா ? இதுக்குதான் போட்டோ கேட்டீங்களா ,யார் எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு எதிராய் திரும்பலாம் அப்பொழுது இதை வைத்து பந்தாடலாம் என்று ? . என் நல்ல நேரம் என் வீட்டு முகவரி குடுக்கல இல்ல இந்நேரம் அதையும் ஊருக்கே பரப்பி இந்நேரம் என் வீட்டு வாசலில் நாலு பேரை வர வச்சுருப்பீங்க.
"உனக்கு அரவிந்த் சுயரூபம் தெரியாமல் மதார் பழகிக்கொண்டு இருக்கிறாள் , அவள் கண்மூடித்தனமா அரவிந்த்க்கு ஏன் சப்போர்ட் பண்றா தெரியுமா "
அப்படியா ? அரவிந்த் சுயரூபம் அப்படி என்ன உங்களுக்கு தெரியும் ? சொல்லுங்களேன் தெரிஞ்சுக்கிறேன் .ஒரு பத்து நாள் சாட் மூலம் மட்டுமே ஒருவரின் சுயரூபம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் ஒரு அதி புத்திசாலி என்று எனக்கு தெரியாமல் போயிற்று .
உண்மையிலேயே என் மேல் அக்கறை இருந்து நான் ஒரு தவறான ஆளுடன் பழகுறேன் என்று தெரிந்தால் அதை என்னிடமே நீங்கள் சொல்லி இருக்க வேண்டும் அதை விடுத்து இப்படி பார்க்குறவங்க கிட்ட எல்லாம் கிசுகிசு மாதிரி என்னை பற்றி பேசுவதா ? இப்படி உங்களுடன் பழகின ஒரு பொன்னையும் பையனையும் சேர்த்து தப்பா பேச உங்களுக்கு கொஞ்சம் கூட ..................இல்ல .
"அரவிந்த் அவ போட்டோ பார்த்து இருப்பானா "
இதில் உங்களுக்கு ஒரு துளி அளவுக்கு கூட சந்தேகம் வேண்டாம் உங்களுக்கும் முன்பே அரவிந்த் என் போட்டோ பார்த்தாச்சு .
அப்புறம் என்ன "அரவிந்த் ஏன் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசல " அரவிந்த் எந்தளவுக்கு எனக்கு ஆதரவா இருக்கார் பேசுறார் என்று எனக்கு தெரியும் இங்குள்ள பலருக்கும் தெரியும் அது உங்களுக்கு தெரிய வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை .
அப்புறம் என் மேல் என்ன கேஸ் அது நுசென்ஸ் கேஸ் போடுவீங்களா ? எங்கே உங்க வீட்டு அட்ரஸ் குடுங்க பார்க்கலாம் அப்படியே என்னைப்பற்றி தவறா இணையத்தில் பிறருடன் பேசியதற்கும் என் போட்டோ என் அனுமதி இல்லாமல் பிறருக்கு அனுப்பியதற்கும் என் பெயர் உங்கள் தளத்தில் மற்றும் வினவிலும் பயன்படுத்தி எழுதியமைக்கும் என்ன கேஸ் போடலாம் என்று நீங்களே சொன்னால் இன்னும் கூடுதல் வசதியாய் இருக்கும் .
உங்களைப் பற்றி நீங்களே குடுக்கும் வாக்குமூலம் .........
//தம் மேல் உள்ள குறை என்ன என ஆராயாமல் , தன் ஈகோ பாதிப்படைந்துவிட்டதாய் எண்ணி பழிவாங்கினால் மட்டுமே பாடம் படிப்பிக்க முடியும் என மிக தவறான எண்ணத்தை ஆயுதமாக்கிக்கொள்வர்.
//
//நடந்த பிரச்னையை மனதில் வைத்து மருமகளை தண்டிப்பது.. அதே போல மருமகளும் வயதான மாமியாரை தண்டிப்பது.//
இப்படித்தான் நீங்கள் என்னை பலிதீர்த்ததா?
//ஒரு துணை அமைதியாக ஒதுங்கி சென்றாலும் அடிபட்டவர்/பாதிக்கப்பட்டவர் , அவரை சீண்டிக்கொண்டே இருப்பார்.. பழிவாங்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்..
" நீங்க அன்னிக்கு அப்படி செய்தீங்கல்ல.. அதுக்கு பலனா நான் இன்னிக்கு இங்கே இப்படி செய்கிறேன்.."
இவை உங்களை நீங்களே சொல்லிக்கொள்வது........
//உன்னை என்ன செய்றேன் பார்.. உன்னை பத்தி எனக்கு தெரியாதா.. ?.. உன்னை எப்படி , எங்கே போட்டுக்கொடுக்கணும் னு எனக்கு தெரியும் என வெறிகொண்டு பழிவாங்க பேசித்திருவது மிக மிக அல்பமான கோழைத்தனம்..
//
/ஆரம்பத்தில் தன்னோடு கூட இருந்து தமக்கு ஆதரவளித்தவர்கள் தன் வீரத்தை மெச்சியவர்கள், விலக விலக , இன்னும் அதிக ஆளுமை காட்ட கூட இருந்தவர்களையே மிரட்ட ஆரம்பிப்பார்கள்..
என்னை இழுத்து தேரில் ஏற்றியது இந்த வகையில் தானே ..........
//இந்த முறை அடங்கி போகிறேன்.. ஆனால் மீண்டும் என் ஆளுமையை நான் காண்பித்தே தீருவேன் " என தன்னையே புரிந்துகொள்ளாமல் தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிடுவதுண்டு..//
கிட்டத்தட்ட ஒரு மனநோய் அளவுக்கு அவர்களின் ஆளுமை பாதிக்கப்பட்டிருக்கும்..
இதைத்தான் நானும் எல்லோரும் உங்களிடம் இருந்து தெரிந்து கொண்டது
//பிரச்னை எப்படி வருகிறது என்பதை ஆராயாமல் அந்த பிரச்னையை எப்படி தீர்த்தால் என்னென்ன விளைவுகள் /தீர்வு கிடைக்கணும் என்பதை கொஞ்சம் முன்கூட்டியே ஆராய்ந்தால் இந்த பழிவாங்கும் எண்ணம் வரவே வராது.//
அப்படியா ? இது ஏன் உங்களுக்கு தெரியல ? அறிவுரை எல்லாம் அடுதவங்களுக்குதானோ ?
//ஒரளவு நியாயமாக யாருக்கும் தொந்தரவில்லாதவர்களை திருத்துகிறேன் என்ற நோக்கில் நாமும் அதிகாரத்தை கையிலெடுத்தால் அது விபரீதமாக முடியக்கூடும்...
//
நான் ஆரம்பித்தில் இருந்தே உங்களிடம் சொல்லியது இதைத்தான் ....நாம் யாரையும் திருத்துவதற்காக படைக்கப்படவில்லை .
நீங்கள் இத்தனை செய்த பிறகும் உங்கள் மேல் எனக்கு கோவம் போய் பரிதாபம்தான் வருது . ஒரு நல்ல மருத்துவரிடம் போய் பார்ப்பது நல்லது .இந்த வயது 40 -45 வயது வரையான பெண்களுக்கே வரும் பயம் , நம்பிக்கையின்மை , பழிவாங்குதல் என்ற ஹார்மோன் பிரச்சனையினால் வரும் குணங்களின் வெளிப்பாடுதான் உங்களின் செயல்களின் பிரதிபலிப்பு .
