உங்க பிரச்னை என்ன அக்கா ? உங்களுடன் முதன்முதலில் எனக்கு குழுமம் மூலமே தொடர்பு வந்தது காரணம் நாம் ஒரே கல்லூரி ஒரே மண் மற்றும் சில நேரங்களில் நம்மிடையே இருந்த ஒத்த சிந்தனை . பதிவர்களுடன் நான் அவ்வளவு எளிதில் நட்பு வைக்க மாட்டேன் . நீங்கள் ஒரு அனுபவம் நிறைந்த வயது வந்த பெண் என்று உங்களுக்கு நான் தங்கையானேன். உங்களுடன் ஆரம்பகால என் நட்பு நன்றாகத்தான் போனது . எல்லா பெண்களுக்கும் திருமணம் அதன் பின் வரும் கணவன் குடும்பம் என்ற பயம் எனக்கும் உண்டு . அதைப் பற்றிய உங்களுடனான விவாதங்களில் சில நேரம் ஒத்துப் போனேன் பல நேரம் உங்கள் கருத்துகளுடன் விலகி நின்றேன் உங்களுக்கும் தெரியாமலே . முகத்திலடித்தார்ப் போல் என்னால் பலகினவர்களுடன் பேச முடியாது என்பதே காரணம் . உங்கள் அடிமனதில் ஆண்கள் மேல் இருந்த வன்மம் சில நாட்களில் நான் உணர ஆரம்பித்தேன் ஆனால் அதை உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியவில்லை . ஆண்களை விட நாம் எந்த வகையில் குறைந்து போனோம் ? நாம் என் அவர்களுக்கு அடிமைப் பட வேண்டும் ? இப்படித்தான் உங்களுடனான பல விவாதங்கள் என்னுடன் நடந்தன . பதிவுலகில் எனக்கு இருந்த ஒரே நட்பு அரவிந்த் மட்டுமே அவர் இதுவரையிலும் என்னிடம் ஒரு வார்த்தையும் தவறாக பேசாத காரணத்தினாலே அவருடனான என் நட்பு இன்னமும் தொடர்கிறது . இதுவரையில் என்னை ஒருமையில் கூட அழைக்காத அவர் நட்பு அதை நான் உங்களிடமே சொல்லிருக்கிறேன் . அப்பொழுதெல்லாம் அவரை நல்ல பையன் என்று சொன்ன நீங்கள் இன்று வினவில்
/இரண்டு பிள்ளைகளுக்கு தாயான என்னை, கடித்துக்கதறுவதற்கு இவர்கள் விரும்புகிறார்கள். அதை புனைவு எழுதி தீர்த்துக் கொள்கிறார்கள். அக்கா என்று அழைத்தவர்கள் இப்போது தவறானமுறைகளில் அழைக்கிறார்கள். இதை நான் தட்டிக் கேட்டால் அது தப்பா? இது போன்று நடப்பது எனக்குமுதல்முறையல்ல.சரி இந்த முறை தட்டிக்கேட்டதால் என் அந்தரங்கம்.. அடுத்தடுத்த முறைக்கு என்ன செய்வீர்கள் தம்பிமாரே.? .. 99 வயது கிழவி நடந்து போனாலும் கூடி நின்று கிசுகிசு பேசி தன் மனதின் வக்கிரத்தை தீர்த்துக்கொள்ளும் மன நோயாளிகள்தானே இங்கே அதிகம்.?../
இப்படி நீங்கள் சொன்னவை குறித்து அதிர்ச்சியே வந்தது .
நீங்கள் அவருடன் பேசுகிறீர்களா என்று கேட்டே உங்களுடன் அவரை அறிமுகப் படுத்தினேன் . என்னிடம் சாட் இல் ஒரு பதிவர் சில வார்த்தைகள் தவறாக பேசினார் இது அரவிந்த் அறிவார் . ஆனாலும் அரவிந்த்க்கு அந்தப் பதிவரின் எழுத்து பிடிக்கும் இதில்தான் உங்களுக்கு அவர்மேல் கோவம் வர முதல் படி . ஒருவரின் எழுத்தை பிடிக்கும் என்பதால் அவரையே பிடிக்கும் என்று அர்த்தமா ? அப்படியே பிடித்தால்தான் என்ன தப்பு ? அதை ஒரு தோழியாய் நான் ஏற்றுக்கொண்டேன் .உங்களுக்கு ஏன் இதில் அரவிந்த் மேல் இவ்வளவு வன்மம் ?. உங்கள் கோவம் ஒருவருடம் முன்பு அதே பதிவர் வேறு ஒரு பெண்ணிடம் தவறாக பேசி நீங்கள் நடுவில் பஞ்சாயத்து பண்ணியதாக என்னிடமும் அரவிந்திடமும் சொன்னீர்கள் . அதைக் கேட்ட பின்னரும் அரவிந்த் எனக்கு அந்த பதிவரின் எழுத்து பிடிக்கும் என்று மீண்டும் சொன்னவுடனே உங்கள் கோவம் அதிகமானது .போரமில் நான் சாட் மற்றும் அந்த விஷயங்கள் சொல்வதற்கு முன்பே இவை அனைத்தும் நடந்தன . ஆனால் உங்கள் பதிவில் போரமிர்க்கு பிறகே நான் இந்த விசயமாய் அரவிந்திடம் பேசுமாறு உங்களை கேட்டுக் கொண்டதாக சொன்னது போய் . அதற்கு முன்பே நாம் மூவருமே இதைப் பற்றி பேசியாச்சு . அந்தப் பதிவரின் பெயர் நான் சொல்லப் போவது இல்லை . ஒருவரின் நிம்மதியான வாழ்வைக் கெடுக்க நான் விரும்பவில்லை . இங்கே தப்பு செய்யாதவர் யார்தான் ? அவர் பேசியது என்னிடம் நான் அதை மறந்து ரொம்ப நாள் ஆயிற்று .
அந்தப் பெண்ணிடம் நானும் பேசி விட்டேன் உங்கள் தயவில் " அது நடந்து ஒருவருடம் மேல் ஆகிறது அக்காவிடம் நான் அதை இதற்குமேல் கிளற வேண்டாம் என்று கூறிவிட்டேன் " என்று சொன்னார் . ஆனால் நீங்கள் இன்னும் விட்டபாடு இல்லை . .
தொடர்ந்து வந்த சில பதிவுகளும் (அரவிந்த், முகிலன் , புலிகேசி ) மற்றும் அரவிந்த் , நீங்கள் பேசிய சில சாட்கள் உங்களிக்கும் அரவிந்த்க்கும் பகையை பெருசுபடித்தியது. அவர்கள் ஜான்சி அக்கா என்று போரமிலும் , பதிவிலும் பயன்படுத்தியபோது உங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் நேரம் தாழ்த்தி காட்டியக் காரணம் என்ன ? முகிலனுடன் மோதல் வந்தது செந்தழல் ரவியின் மிசினரி திரி மூலம் . அரவிந்த் உடன் மோதல் வந்தது நீங்கள் கெட்டவர் என்று கூறியும் அதை அவர் ஏற்காமல் அவர் எழுத்தை நான் ரசிப்பேன் என்று அரவிந்த் தொடர்ந்து கூறி வந்தது . அடுத்து வினவில் நீங்கள் போட்ட முகிலனின் கவிதை அவர் மேல் உங்கள் கோவம் கூடியது . அதைத் தொடர்ந்து முகிலன் போரமில் உங்கள் பின்னூட்டத்துடன் ஆரம்பித்த திரி முகிலன் , அரவிந்த் , புலிகேசி , நீங்கள் என வாக்குவாதம் முற்றியது . போரமில் கும்மியடிக்கும் போதெல்லாம் வராத கோவம் இவை அத்தனையும் நடந்த பின் முகிலன் , அரவிந்த் மேல் வந்தது ஏனோ ?
மிக ஜாலியாக அடித்த கும்மி திரிகள் , தேதிகளை கவனிக்கவும் .
http://groups.google.com/
http://groups.google.com/
http://groups.google.com/
கும்மியின் தொடர்ச்சியாக வந்த முதல் ஜான்சி பதிவு
http://palaapattarai.blogspot.
சில கும்மிகள்
http://groups.google.com/
http://groups.google.com/
முகிலனின் தொடர் ஜான்சி பதிவு
http://pithatralkal.blogspot.
கட்ட கடைசியாக வந்த அரவிந்தின் ஜான்சி பதிவு
http://irumbuthirai.blogspot.
முகிலனுடன் மோதல் வந்த திரி
http://groups.google.com/
http://groups.google.com/
அரவிந்த் உடன் மோதல் வந்த திரி
http://groups.google.com/
அக்கா பொங்கிய பதிவு
Wednesday, August 25, 2010
புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.- 2
சாந்தி அக்கா எழுதிய புனைவுக் கதை
http://punnagaithesam.
என் குடும்பத்திலோ எனக்கோ ஏதாகிலும் பிரச்னை வந்தால் அதற்கு இரும்புத்திரை அரவிந்த், முகிலன் இவர்களே காரணம் என்றும் சொல்லிக்கொள்கிறேன்.
இந்த வார்த்தைகள் கூறும் அளவுக்கு இங்கு எதுவும் நடக்கவில்லை . போரம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த சில பதிவுகள் மோதல் என அனைத்தையும் வடகரைவேலன் அவர்களும் அறிவார் . அவர் வந்து சமரசமோ இல்லை தீர்போ சொல்லுமளவுக்கு இது ஒன்றும் அவ்வளவு பெரிய விசயமும் இல்லை என்பதை அவரும் அறிந்திருப்பார் . அக்கா என்னுடனான ஒரு சாட்டில் உன் வயதில் எனக்கு உன் அளவு பக்குவம் இல்லையென்று ஒருமுறை சொன்னீர்களே , என் இந்த 24 வயதில் இருக்கும் பக்குவம் உங்களுக்கு உங்கள் 42 வயதிலும் வரவில்லை . ஒருவர் மேல் வன்மம் கொண்டு கருவறுக்க வேண்டிய இடம் இது அல்ல .
பெண்களுக்கே உரிய மறப்போம் மன்னிப்போம் என்ற உணர்வு உங்களிடம் இல்லையே . இரண்டு குழந்தைகளுக்கு தாயான நீங்கள் ஆண்களிடம் காட்டும் வன்மம் ஏன்? குழந்தைகள் தவிர பிற ஆண்களிடம் உங்கள் தாய்மைக்குனம் வெளிபடாதா?
/புன்னகை தேசம். said... ஏழர .http://twitter.com/ezharai - [ ஒரு அப்பாவி பெண்ணிடம் " படுக்க வாரியா ' னு கேட்டான் கயவன் பதிவர் ஒருவன் . } அரவிந்து இந்த கயவன் பதிவருக்கு எதுக்கு இப்ப நீங்க சொம்பு தூக்கறீங்க? நீங்க அந்த கயவன் பதிவருக்கு ஏன் காவலரா இருக்கீங்க?2:15 pm
-----------
இந்த கயவன் பதிவர் அந்த அப்பாவி பெண்ணிடம் மட்டுமல்ல., மதார் என்ற பெண்ணிடமும் தாகத முறையில் பேசியதாய் குழுமத்திலே சொல்லியபோதுதான் நான் தெரிய வந்தேன் அவன் பலரிடம் இப்படி தாகாத முறையில் பேசியிருக்கான் என..
அப்ப மதார் என்னை அர்விந்திடம் பேச சொல்லி கட்டாயப்படுத்தவே
நான் அர்விந்திடம் பேசினால் அந்த கயவனை தனக்கு பிடிப்பதாகவும் சொன்னார்..
அப்பவே எனக்கு புரிந்தது..
உங்களுக்கு புரிந்ததா?..ஏன் சொம்பு தூக்கினார் என?...
மதாரிடம் கயவன் என்ன பேசினார் னு குழுமத்தில் அல்லது மதாரிடம் கேளுங்கள்.../
நீங்கள் ஒரு இடத்தில் அந்தக் கயவன் பேசிய பெண் பதிவர் பெயரை சொல்ல முடியாது அவரின் வாழ்க்கை இருக்கு என்று ரொம்ப வருத்தப் பட்டீங்க.
அப்ப மதார் என்னை அர்விந்திடம் பேச சொல்லி கட்டாயப்படுத்தவே
ஏன் அக்கா என் பெயரை மட்டும் சொல்லும்பொழுது என் வாழ்வு தெரியவில்லையா ? நானே போரமிலும் அதை பகிர்ந்துள்ளேன் இல்லை என்று சொல்லவில்லை . ஆனால் இன்னொரு ஆண்பதிவருடன் எனக்கு இருக்கும் நட்பை இப்படித்தான் எல்லா இடங்களிலும் கொட்டமடிப்பீர்களா ?
