"ஏண்டி பார்வதி கொஞ்சம் வெளில வாயேன் , எவ்ளோ நாழியா கத்திண்டு இருக்கேன் உன் காதில விலலையோடி "
"என்ன மாமி காலங்கார்த்தால என்ன சமாச்சாரம் சொல்லுங்கோ , பின்வாசலில பிள்ளையாண்டான குளிப்பாட்டிட்டு இருந்தேனாக்கும் தண்ணி சத்தத்துல குரல் காதில விழல "
"நான் என்னனு சொல்வேண்டி வெளில சொன்ன நேக்கு வெட்க்கக் கேடு நீங்க எப்படி மாமி ஏமாந்தேள்னு நாலு பேரு கை கொட்டி சிரிப்பாலேடி "
"மாமி விஷயத்தை சொல்லுங்கோ "
"நான் வேற யார்கிட்டடி போய் சொல்வேன் யாருட்டையாவது நேக்கு மனசு விட்டு பொலம்பனும் போல இருந்துசுடி அதான் கார்த்தாலயே உன்னை தேடி வந்துட்டேன் "
"மாமி சஸ்பென்ச கூட்றேலே நீங்க பொலம்புறத பார்த்தா விஷயம் ஏதோ பெருசு போலல்ல இருக்கு "
"அதேதாண்டி கேட்டுட்டு நீங்க எப்படி மாமி இப்படி மாட்டிநேள்னு என்னை ஏதும் கேட்கப்படாதுடி இப்பவே சொல்லிட்டேன் "
"சரி மாமி கேட்கல சொல்லுங்கோ "
"கொஞ்ச நாளைக்கு முன்னே ஒரு குடும்பஸ்தன் வீடு வாடகை கேட்டு வந்தாண்டி .உனக்கு தெரியுமேடி அந்த குச்சி ஒன்னு ரொம்ப நாளா காலியா கிடந்தது "
"ஆமா மாமி தெரியும் TO LET போர்டு கூட ரொம்ப நாளா மாட்டி இருந்தேளே அப்புறம் ஒரு குடும்பம் கூட குடி வந்தாலே "
"அதாண்டி நானும் சொல்ல வந்தேன் , குடும்பம்னா நமக்கும் மாமா ஆத்துல இல்லாத நேரத்துல பொம்மனாட்டி பேச்சு தொணைக்கு ஒத்தாசையா இருப்பாலேன்னு குடி வச்சேண்டி"
"அப்புறம் மாமி "
" ஆம்பிளையாண்டான் ரொம்ப சாதுடி , அந்த பொம்மனாட்டி வந்த மறு நாளே ராட்சசி மாதிரி அவனண்ட நடந்துகிட்டாடி .வெளில பாக்க நல்லாதாண்டி இருந்தா . அவ உடுத்துறதும் வெளில போறதும் நம்ம பொம்மனாட்டியல் தோட்டுடுவாடி தெரியுமோ "
"ஆமா மாமி நானும் பாத்துருக்கேன் அவாளுக்கு மூணு பிள்ளையளும் இருந்தாலே "
"ஆமாண்டி அந்த பச்ச கொலந்தையளுக்காகத்தான் நானும் பொறுமையா இருந்தேன் , ராத்திரியானா அவா போடுற சண்டை சத்தம் மாமா பல நாலு தூங்கலன்னா பாத்துக்கோடி "
"என் வீடு வரைக்கும் கூட சத்தம் கேட்டது மாமி நானும் தெரு நாய் சண்டை போடுதுன்னு நினைச்சேன் .அப்புறம் என்ன மாமி பண்ணினேள் "
"மாமா என்னண்டை கோசுட்டார். அடிச்சு பத்துடி அவாள மனுசா ராத்திரி நிம்மதியா தூங்க முடிதான்னு ஒரே சண்டை . ஏன்னா கொலந்தைளுக்காக பாக்கபடாதோன்னு கேட்டேன் , அவரு மொரச்சதுல எனக்கு கண்ணுல தண்ணியே வந்துடுத்து. அந்த ஆம்பிளையாண்டையும் நான் பேசினேன் பாவம்டி அந்த மனுஷன் அந்த லூசு பொம்மனாட்டிகூட குடும்பம் தள்ளுற கதையை கேட்டா புல்குருவி கூட தண்ணி குடிக்காதுடி . கொலந்தைளுக்காக அவளை சமாளிச்சுண்டு இருக்கான் ."
"அப்புறம் மாமி "
" வெளியே போக சொல்லிட்டேண்டி மாமா அவாளை குடி வச்சு வர வருமானம்தான் நமக்கு கஞ்சி ஊத்தப் போறதா , வீடு சும்மா வேணா பூட்டிக் கிடக்கட்டும் அவாளை போக சொல்லுன்னு சொல்லிட்டார்டி "
"ஐயோ பாவம் மாமி அந்த கொழந்தைல வச்சுட்டு அந்த ஆம்பிளையாண்டான் என்ன செய்வான் "
" நானும் அவன்ட்ட இதையேதாண்டி கேட்டேன் , நீங்க வேற மாமி இந்த லூசு கூட நான் அதிக நாள் குடி இருந்தது உங்க வீடுதான் மாமி அதுக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லனும்னு சொல்லிட்டாண்டி . இதுக்கு முன்னே இருந்த இடம் எல்லாம் அடுத்த நாளே கிளம்ப சொல்லிடுவாலாம் "
"நீங்க பண்ணது சரிதான் மாமி லூசு பொம்மனாட்டினு தெரிஞ்ச பிறகும் ஆத்துல குடி வைக்க முடியுமோ , அவா ஒருநாள் இல்ல ஒருநா நம்மளையே ஏதாவது செஞ்சுண்டா என்ன மாமி பண்றது ? கொலந்தைளுக்க்காகவும் அந்த ஆம்பிளையாண்டானுக்கும் பார்த்து சனியனை தூக்கி தலைல போட முடியுமோ "
"அதாண்டி பொண்ணே நானும் பண்ணேன் துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு பெரியவா நமக்கு சொல்லிக் குடுதுருக்காலோல்லியோ , விலகிடனும்டி . என்ன வருத்தம்னா நீங்க எப்படி மாமி மனுசா குணம் தெரியாம வீட்டை விட்டேல்னு நாலு பேரு பேசுவாலேடி"
"அதுக்கென்ன மாமி செய்ய முடியும் தாழம்பூ கூடத்தான் வெளிய பாக்க அம்புட்டு அழகா இருக்கு வாசனையும் அடுத்த தெரு வரைக்கும் வீசும் . அதுக்காக அதை பூஜைக்கு வைக்க முடியுமோ ? உள்ளே பிரிச்சு பார்த்தா அம்புட்டு புழு இருக்கும் . தாழம்பூ மாதிரிதான் மாமி சில மனுசாலும் வெளியே நல்லாத்தான் இருப்பா . பழகிப் பார்த்தாதானே அவா வண்டவாளமெல்லாம் தெரிய வரும். நீங்க மனச போட்டு கொலப்பிக்காதேள் "
"ஆமாடி நீ சொல்றதும் சரிதாண்டி இந்நேரம் அந்த ஆம்பிளையாண்டான் என்ன செய்றானோ தெரிலடி நான் ஆத்துக்கு போறேண்டி வந்து நாழியாறது மாமா தேடுவா "
"போயிட்டு வாங்கோ மாமி "
********************************************************************
டிங் டிங் டிங்
"யாருங்க வேணும் "
"அம்மா வீடு வாடகைக்குன்னு .............."
"ஆமா தம்பி அட்வான்ஸ் இவ்ளோ வாடகை ................எல்லாம் சம்மதம்னா நாளைக்கே வந்து பால் காய்ச்சலாம் "
"நன்றிமா நாளைக்கே என் பொண்டாட்டி பிள்ளைங்களோட வந்துறேம்மா "
"வாடகைக்குதானே வீடு விடறேன் இவன் ஏதோ இலவசமா குடுக்குற மாதிரி நன்றி எல்லாம் சொல்லிட்டு போறான் ..........ஏங்க கத்துறீங்க பேப்பர் அங்கதானே இருக்கு . அந்த செவிட்டு மிசின எடுத்து காதுலத்தான் மாட்டுங்களேன். உங்களுக்கு காது செவிடுன்னா எல்லோருக்கும் செவிடு மாதிரி தெருவுக்கே கேட்க்குற மாதிரி கத்துறீங்க ............

