இமயமலை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே . மிக உயரமான சிகரம் . இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவில் இருக்கும் நிலப்பரப்பில் இருக்கிறது . இன்னும் எவ்வளவோ செய்திகள் உண்டு . நான் படித்த செய்திகளின் அடிப்படையில் எனக்கு வந்த சந்தேகம் இது . இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவில் முன்னொரு காலத்தில் கடல் இருந்ததாக நம்பப்படுகிறது .அப்பொழுது இந்தியாவின் நிலப்பரப்பு இலங்கை மற்றும் அந்தமான் தீவுகளுடன் இணைந்திருந்ததாம் . இப்பொழுது அங்கு வாழும் உயிரினம் மற்றும் இதர இயற்கை சூழல்கள் வைத்து இவை நிரூபிக்கப் படுகின்றன .இந்தியாவின் நிலத்தட்டுகள் சீனாவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகருகின்றன .அதுபோலவே சீனாவின் நிலத்தட்டுகள் இந்தியாவை நோக்கி நகருகின்றன . இதன்மூலமே இடையில் இருந்த கடல் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க ஆரம்பித்ததாம் . கையில் சப்பாத்திமாவை வைத்து இரண்டு கைகளாலும் அழுத்தும்போது அது வெற்றிடமான மேல் நோக்கி உயரும் .கடலில் நடந்தது இதுவே . இந்தியா சீனா இடையேயான தொடர் அழுத்தம் காரணமாக கடல் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி ஒடுங்கி காலப்போக்கில் அதன் தண்ணீர் குளிர்ந்து ஐஸ் கட்டிகளாகி இமயமலை உருவானது . அது கடல்தான் என்பதற்கு ஆதாரம் அதன் மேல் இருக்கும் படிமங்கள் . இறந்து போன கடல் வாழ் உயிரினங்கள் பாசிகள் இவைகளின் படிமங்கள் இமயமலையில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றன . இனனமும் நடந்து கொண்டிருக்கும் நிலத்தட்டுகள் நகர்தலால் இமயமலை ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டு (?) இருக்கின்றது . (வளருதா , குறையுதா சரியா தெரியல ) . தொடர்ச்சியான இந்த வடக்கு நோக்கிய நகருதலால் தென் இந்திய நிலப்பரப்பு தொடர்ந்து கடலுக்குள் செல்கிறது . இலங்கையில் இருந்து இந்தியா பிரிந்த காரணமும் இதுவே .
எல்லாம் சரி என்னோட சந்தேகம்
1 .இமயமலை கடலை மூலதனமாய் கொண்டு உருவாகி இருந்தால் அதன் உருகுதலில் இருந்து வரும் கங்கை நதி நீர் எப்படி நல்ல தண்ணீராக இருக்கிறது ?
2 .முதலில் அது எப்படி ஐஸ் கட்டிகளின் குவியலாக மாறியது ? மூலம் கடல் நீராய் இருக்கும்பொழுது
3 .உப்பளங்களில் இருக்கும் கடல் நீர் வெயிலின் உஸ்ணத்தால் காய்ந்து போகையிலும் அதன் சுவை உப்பாகத்தான் இருக்கும் . இதில் இமயமலை எப்படி நல்ல நீராக மாறியது ?
இவை என்னுடைய சந்தேகங்களே ............நிறைய படிக்க முடியவில்லை .இதுவரை படித்த செய்திகளின் காரணமாய் தோன்றியவை இவை . தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் .
