skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, November 16, 2010

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும் - எச்சரிக்கையும்

1.jpg

untitled.JPG



டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு நேற்று இரவு எட்டு மணியளவில் இடிந்து விழுந்து 66 உயிரழப்பு . இன்றைய பத்திரிகைகளின் தலைப்பு செய்தி . வழக்கம்போல் கட்டிடம் கட்டிய பில்டர் மேல் தப்பு சொல்லியாச்சு எப்போதும் நடக்கிறதுதானே . முதலில் ஐந்து மாடி அளவில் மட்டுமே கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது . தற்பொழுது அதன் மேல் இன்னொரு தளம் கட்டப்படுகிறதாம் நல்ல விஷயம் . அடுத்து கட்டிடம் இருப்பது யமுனை நதிக்கரையின் ஓரம் . இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த கனமழையினால் யமுனையில் வெள்ளம் அதனால் கட்டிடம் இடிந்து விழுந்து விட்டது . இன்னமும் எத்தனைக் காரணங்கள் வரும் என்று தெரியவில்லை . மிக முக்கியமாய் சொல்லப் படும் காரணம் water logging . water logging என்றால் ஒரு இடத்தில் தண்ணீர் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தோமானால் அது ஒரு அளவு வரையியே உள்ளே பூமிக்குள் போகும் . கீழுள்ள மண் எல்லாம் ஈரமான பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் மேற்கொண்டு உள்ளே இறங்காது . ஈர மண்ணும் சேறு போல் மாறிவிடும் அதன் கடினத்தன்மையும் குறைந்து வலுவிழந்து விடும் .

 யமுனை ஆறு பல வருடங்களாய் அங்கேதான் ஓடிக் கொண்டிருக்கிறது வருடா வருடம் வெள்ளமும்வந்து கொண்டுதான் உள்ளது . என்னமோ இரண்டு மாதத்திற்கு முன்புதான் யமுனை வந்ததாகவும் வெள்ளம் வந்ததாகவும் water logging ஆகி கட்டம் இடிந்து விட்டது . கட்டிடத்துக்கான அடித்தளம் முதலில் அங்கு எடுக்கப்படும் மண் சாம்பிள் பரிசோதிக்கப்பட்டு அதன் தாங்கும் சக்தி எல்லாம் கணக்கிடப்பட்டே கட்டிடத்துக்கான உயரத்துக்கு ஏற்ப அடித்தளம் அமைக்கப்படும் . இந்த மாதிரியான water body அருகில் கட்டப்படும்  கட்டிடங்கள் பெரும்பாலும் pile foundation முறையிலேயே கட்டப்படும் . இடிந்த கட்டிடத்துக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தின் Basement இல் இருக்கும் தண்ணீர் இதன் ஆயுளும் எவ்வளவு என்று தெரியவில்லை பார்க்க  வீடியோ . இதேபோல்தான் தண்ணீர் இதன் அடியிலும் இருந்திருக்கும் அப்பொழுது யாருமே கவலைப்படாமல் எல்லாம் முடிந்த பின் ஆமாம் இங்கேயும் தண்ணீர் நின்றது ......... என்று வரும் statements .இதன் மேல் இன்னொரு தளம் கட்ட நடந்த ஏற்பாடுகள் இது ஒன்றும் விபத்திற்கு பெரிதாய் காரணமாய் இருக்காது . எப்பொழுதுமே FUTURE  EXTENSION   என்று கருத்தில் கொண்டே அடித்தளம் வடிமைக்கப்படும் (டிசைன்) ஒரு தளம் அப்படி ஒன்றும் பெரிதாய் பாதிப்பு ஏற்படுத்தாது .விபத்திற்கு முழுக்க முழுக்க தண்ணீர் மட்டுமே காரணமாய் இருக்க முடியும் . தேடிய வரையில் இக்கட்டிடம் எந்த ஆண்டு எந்த வகையில் கட்டப் பட்டது என்று தெரியவில்லை . பதினைந்து ஆண்டுகள் முன்னம் மட்டுமே கட்டிருந்தால் pile foundation முறையில் கட்டி இருந்தால் இந்த விபத்து இவ்வளவு கோரமாய் நடக்க வாய்ப்புகள் குறைவு . டெல்லி முடிஞ்சி போச்சு அருகிலேயே UPCOMING இடத்திலும் நிறைய கட்டிடங்கள் உள்ளன . அதற்க்கு ஏதாவது வழிமுறை  தேர்வு செய்தால் நன்று . முடிந்தால் மண்ணின் தரத்தை பலப்படுத்தலாம் . sand foundation முறைகள் இருக்கின்றன .

நமது சென்னையிலும் ஏனைய இடங்களிலும் இடம் குறைந்த விலைக்கு கிடைத்து விட்டது என்று வீடு கட்டி வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை . ஏற்கனவே பல ஆண்டுகளாய் இருந்த நீர்பிடிப்பு தளங்கள் என்றுமே ஆபத்தானவை . மழைக்காலங்களில் வாட்டம் பார்த்து தண்ணீர் அங்கேதான் வந்து தேங்கும் . நான் பார்த்த வரையில் வேளச்சேரி , பெருங்குடி ரெயில் நிலையங்களை சுற்றியுள்ள வீடுகள் குளத்தினுள் கட்டப் பட்டுள்ளன . அந்த கட்டங்களின் ஆயுளும் வெகுக் குறைவே . இப்பொழுது அடுக்கு மாடி குடியிருப்புகளும் அங்கே கட்டப்படுகின்றன .
2.gif3.jpg


அதற்க்கு அடுத்தாற்போல் இருக்கும் காலியிடங்களில் விரைவில் அரசு அல்லது தனியார் துறைக் கட்டிடங்கள் பல அடுக்குகளைக் கொண்டு கட்டப்படலாம் . அப்பொழுது நடக்கும் அதிர்வுகள் மூலம் (ரமணா படத்தின் காட்சிதான் அது கற்பனைக்  காட்சி அல்ல  )  இப்பொழுது கட்டப் பட்டிருக்கும் குட்டிக் குட்டி கட்டிடங்கள் நிலைமை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை . அப்பொழுது வந்து இதற்க்கு CMDA அப்ரூவல் எப்படி கிடைத்தது இங்கு குளம் இருந்தது தெரியாதா? தண்ணீர் கனெக்சன் , கரண்ட் கனெக்சன் குடுத்தது எப்படி தோண்டு   ஊழல் எங்கெல்லாம்  நடந்துள்ளது என்று காமன் வெல்த் , ஆதர்ஷ் வீடு மாதிரி சில நாட்கள் பத்திரிகைகளில் வந்து தலைப்பு செய்தியாய் அலங்கரிக்கலாம் . நமக்கும் செய்தி படித்து பொழுது போகும் . வழக்கம்போல் அரசை குறைகூறியே நமக்கு காலம் போகும் .
Posted by மதார் at 8:44 PM
Labels: அரசு, டெல்லி கட்டிடம் விபத்து
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ▼  November (7)
      • மலை மாலை பக்தி உல்லாசப்பயணம்
      • அழகை ரசிக்கிறது தப்பா ?
      • டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும் - எச்சரி...
      • சமையலோ சமையல் - வாழைப்பூ செய்முறை படங்களுடன்
      • நட்பு - எதுவும் முடியும்-2
      • நட்பு - எதுவும் முடியும்-1
      • அவள் அவளாய் உன்னவளாய்
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio