ஒரு ஞாயிறு மதிய சாப்பாடு முடித்தபின் தி ஜா வின் அம்மா வந்தாள் எடுத்துக் கொண்டு பால்கனியில் இருந்து படிக்க ஆரம்பித்தேன் .
"என்னடி அதிசயமா தூங்காம புக் படிக்கிறே "
"காலைல எழுந்ததே 11 மணி அப்புறம் எப்படி மதியம் தூங்க முடியும் சரி சொல்லு என்ன விஷயம் ?"
"ஒன்னும் இல்ல மனசே சரி இல்ல "
"சரி சரி கொஞ்சம் தள்ளி நின்னு புலம்பு "
"ஏண்டி என்ன ஆச்சு "
"ம் ஒன்னும் இல்ல பக்கத்துக்கு அப்பார்ட்ட்மேன்ட்ல ஒரு வண்டி கிளம்புது மறைக்காம நின்னு புலம்பு ஆ என்ன சொல்ல வந்தே "
"அடிப்பாவி ஒன்னும் இல்ல பேச வந்ததே மறந்து போச்சு "
"நானே இப்போதான் புதுசா பார்கிறேன் வண்டி போயிருச்சு நீ சொல்லு "
"ஒன்னும் இல்ல " அவ்ளோதான் போய்ட்டா நான் என்ன பண்ண ?
***************************************************************************************************
சூப்பர் மார்கெட் போகும் வழியில்
"வாழ்கையே போர் அடிக்குது ......சரி வீட்டுக்கு என்னவெல்லாம் வாங்கணும் "
"அங்கே போனா எல்லாம் நியாபகம் வந்துடும் ....அந்த பையன் dressings நல்லா இருந்தது "
"எந்த பையன் "
"இப்போ கிராஸ் பண்ணி போனானே "
"அடிப்பாவி நான் பார்க்கலியே "
"நான் பார்த்தேனே "
"நீ திருந்தவே மாட்டியா பத்தாஞ்சலி "
"நான் என்ன பண்றது அழகான பையன்களா என் கண்ல பட்டா பார்கத்தான் தோணும் அழகை ரசிக்கிறது தப்பா "
பத்தாஞ்சலி பேரு கொஞ்சம் புதுசா இருக்குல்ல ?
நானும் ஸ்கூல் படிக்கும்வரை யாரையும் ஏறெடுத்து பார்த்தது இல்லை குனிந்த தலை நிமிரா பொண்ணுதான்(நம்பலேன்னா உங்க இஷ்டம் ) . ஹாஸ்டல் போய் குட்டி சுவரா போனதுதான் . மொத்தம் ஐந்து departments அதிலும் மெக்கானிக்கல் துறையில் 70 மாணவர்கள் . அடுத்து மற்ற துறைகளில் துறைக்கு 30 மாணவர்கள் என்று எடுத்தாலும் முதல் வருடத்தில் மட்டும் 190 மாணவர்கள் அது போக 3 வருட சீனியர்ஸ் BE தவிர்த்து ME பார்ட் டைம் 6 மணிக்கு மேல் என்பதால் பார்க்க முடியாது அப்படியே பார்த்தாலும் எல்லாம் கிழடு கட்டைங்கலாதான் இருக்கும் . சோ இத்தனை மாணவர்களில் ஒரு ஐந்து பேரை சைட் அடித்தது ஒரு குற்றமா ? இதுக்கு எல்லாரும் ஒரு கூட்டம் போட்டு எனக்கு பாஞ்சாலி என்று பெயர் வைத்தனர் . அடுத்த வருடம் அதுவே பத்தாகி பத்தாஞ்சலி என்று ப்ரோமோசன் ஆனது . அதன் பின் எண்ணிக்கை கூட பெயர் வைக்க முடியாமல் பத்தாஞ்சலியோடு நின்று போனது . என்ன எல்லாரும் சைட் அடிச்ச மேட்டர கடலை போடுற விஷயத்தை கமுக்கமா வைக்க தண்டோரா போட்ட நான் (நாமதான் ஒரு திறந்த புதகமாச்சே ) அவர்களுக்கு அவல். இதிலும் M^4P^3UST என்று பார்முலா செட் பண்ணாங்க . ஒன்னும் இல்ல அது நானா சேர்த்த கூட்டம் அல்ல அவங்களா சேர்த்து விட்ட கூட்டம் இப்படித்தான் சொல்லி நாலு வருசமும் தப்பிச்சேன் .
சென்னை வந்த பிறகு கட்டாய ஹெல்மெட் சட்டத்தால் கொஞ்சம் தடங்கல் ஏற்பட்டது . முகத்தை மூடாமல் வந்தால் பின்னாடியே இலவச இணைப்பு மாதிரி ஒரு சாரியோ சுடியோ உக்கார்ந்துட்டு இருக்கும் . திருமணம் ஆனவர்களை பார்க்க ஏனோ கண்கள் விரும்புவதில்லை (அவ்ளோ நல்லவள் ஆய்ட்டேன் ) . தப்பித்தவறி பிரெண்ட்ஸ் கூட போகும்போது யாரையாவது பார்த்து கமெண்ட் சொன்னால் நீ மட்டும் எப்படிடி சைட் அடிக்குறே எனக்கு மட்டும் அது தோணவே மாட்டேங்குது என்பாள் . நான் சொல்லும் ஒரே டயலாக் "வெளில வந்துட்டா அவன் பப்ளிக் ப்ராபர்டி அழகை பார்த்து ரசிக்கிரத்தில் தப்பில்லை அதை அனுபவிக்க நினைக்குரதுதான் தப்பு " இப்படி நான் சொன்னா விடுவாங்க ஒரு கொலைவெறி லுக் . நாம்தான் அசர மாட்டோம்ல அந்த பையன் மீசை வச்சா இன்னும் நல்லா இருப்பான் ............நீ திருந்தவே மாட்டே........ வேற யாரு என் பிரெண்ட்ஸ் தான் தலைல அடிச்சுட்டு வருவாங்க .
அழகை ரசிக்கிறது தப்பா ?
