skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Monday, November 15, 2010

நட்பு - எதுவும் முடியும்-2

அதன் பின் வந்த நாட்களில் அரியர் பேப்பர் பேச்சுகளுடன் அப்பப்போ மாறிடுப்பா, வேண்டாம் , விட்ருப்பா என்ற அறிவுரைகளும் சேர்த்தே போனது . உலகிலேயே எளிமையான விஷயம்  அறிவுரை வழங்குவது , கஷ்டமான விஷயம் அதை கடைபிடிப்பது . இந்த இரண்டுமே எல்லையில்லா முடிவை நோக்கி போய்க் கொண்டிருந்தன . நடுவில் அவன் அரியர் பேப்பர் பாஸ் செய்திருந்தான் . குட்டிமா (நான் உருவத்தில் சின்ன பெண்ணாய் இருப்பதால் இவன் குட்டிமா என்றே அழைப்பான் )நான் பாஸ் செய்துவிட்டேன் என்று அவன் சொல்லும் பொழுது இந்தப் பையன் எப்போ மாறுவானோ என்று அவனை நினைத்து கவலையும் வந்தது .எல்லாம் ஒருநாள் முடிவுக்கும் வந்தது அவன் அம்மா வரையிலும் செய்தி போயிற்று பெற்ற மனம் எப்படித் தான் இதை ஏற்றுக் கொண்டதோ தெரிந்து கொண்ட அடுத்த நொடி இவன் கையோடு மதுரை கூட்டி செல்லப் பட்டான் . ஒரு நாள் போன் .

"நான் டெல்லி போய் சிவில் சர்வீஸ் படிக்க போறேன்மா "

"நீ நினைக்குற மாதிரி அது அவ்ளோ ஈசி இல்லை பா எப்படி படிப்பே நீ BE முடிக்கவே அந்த திணறு திணறிப் போனியே "

"இல்லமா அம்மா முகத்தை என்னால பார்க்க முடியல , என்னை அவங்க திட்டிருந்தா கூட கேட்ருப்பேன் அவங்க எதுவுமே கேட்கலைமா அதான் கஷ்டமா இருக்கு. வீட்டை விட்டு கொஞ்ச நாள் வெளியே இருக்கணும் அதுக்குதான் டெல்லி போறேன்  "

அவனை சங்கடப் படுத்தக் கூடாது என்று நினைத்தாலும் வந்த கோவத்தில் கண்ட மேனிக்கு திட்டி வைத்தேன் . பின்பு டெல்லியும் போய்விட்டான் . போய் நான்கு மாதத்தில் .

"என்னால இங்கே படிக்க முடியல இங்கே எல்லாமே தப்பா இருக்கு எதுக்காக என்னை அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்களோ மறுபடியும் நான் மாறிடுவேனொன்னு பயமா இருக்கு "

இதென்ன வம்பா போச்சு எங்கே போனாலும் இவன் கெட்ட நேரம் இவனை விடாது போல இருந்தது .

"உன்னால முடிஞ்சா படி இல்லேனா கிளம்பி வந்துடு "

வந்துட்டான் , வந்து ME ஜாயின் பண்ணிவிட்டதாய் சந்தோசமாய் சொன்னான் . இன்று அவன் கடந்தகால வாழ்கையில் இருந்து முற்றிலும் வெளியே வந்து நல்ல பிள்ளையாய் படிக்கிறான் . ஒருநாள் அவன் தொண்டை கரகரக்க பேசிக் கொண்டிருந்தது

" நான் இந்தளவு  மாறுவேன்னு நினைச்சுக் கூட பார்கலைமா, இப்போ சந்தோசமா இருக்கேன் . எப்படிமா எல்லாம் தெரிஞ்சும் நீ என்கிட்ட நீ எந்த வித்தியாசமும் காட்டாம பேசினே ? நான் வீடு வந்து இந்த ஒரு வருஷத்தில் நீ பழைய விஷயங்கள் எது பத்தியுமே என்கிட்ட பேசாம என்ன கொஞ்சகொஞ்சமா மாத்தினே . அடுத்த ஜென்மத்தில் உனக்கு நான் பிள்ளையாய் பொறக்கணும் . friendship நா என்னன்னு எனக்கு புரிய வச்சதே நீதான்மா .............." பேசிக்கொண்டே இருந்தான் . ஆமாம் அவன் கடந்த கால தவறை பற்றி அதன் பின்பு அவனிடம் நான் பேசவே இல்லை . மனிதன் வாழ்க்கையில் தப்பு செய்வது சூழ்நிலைக் கைதியாய் என்பதை நான் புரிந்திருந்தேன் .

எந்த ஒரு பண்டிகைக் காலமானாலும் எனக்கு வரும் முதல் வாழ்த்து இவனிடமிருந்துதான் . அவன் என்னைப் பற்றி பேசியவை எனக்கு சிரிப்புதான் வந்தது ஆனா சிரிக்கல அவன் ரொம்ப பீல் பண்ணி பேசிட்டு இருக்கிறான் . வெரி சிம்பிள் நட்புதான் "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கண் இடுக்கண் கலைவதாம் நட்பு " கடைசிவரை அவனுடனான் என் நட்பை நான் முறிக்க வில்லை . கத்தி கத்தி பேசி புரிய வைக்க முடியா விஷயம் மென்மையான வார்த்தைகளால் கூட புரிய வைக்க முடியும் . ஒரு தப்பு  செய்யும்பொழுது அதை எடுத்து சொல்லி முதலில் புரிய வைப்பதும் நட்புதான் .

பெண்களாலேயே கெட்டுபோன அவன் வாழ்கையில் இன்னமும் ஒரு பெண் தோழியாய் நான் . இது ஒரு சுய சொறிதல் அல்ல . பொறுமையுடன் கையாண்டால் எவரையும் மாற்ற முடியும் என்ன கொஞ்சம் நாட்கள் போகும் .  இதுவரையிலும் என் பிரெண்ட்ஸ் கிட்ட கூட பகிர்ந்து கொள்ளாத விஷயம் இவனின் கடந்கால வாழ்க்கை . இங்கே பதியக் காரணம் இவனைப் போல் உங்களுக்கும் ஒரு நண்பன் இருக்கலாம் எந்த காலத்திலும் அவனை விட்டு விலகாமல் எடுத்து சொல்லி புரிய வைத்து நல்ல நட்பை மற்றவர்களுக்கும் உணர்த்திடுங்கள் .   
Posted by மதார் at 12:40 PM
Labels: அனுபவம், நட்பு
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ▼  November (7)
      • மலை மாலை பக்தி உல்லாசப்பயணம்
      • அழகை ரசிக்கிறது தப்பா ?
      • டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும் - எச்சரி...
      • சமையலோ சமையல் - வாழைப்பூ செய்முறை படங்களுடன்
      • நட்பு - எதுவும் முடியும்-2
      • நட்பு - எதுவும் முடியும்-1
      • அவள் அவளாய் உன்னவளாய்
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio