skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, August 10, 2010

தமிழில் பொறியியல் கல்வி



 

 இந்த வருடம் முதல் சிவில் மற்றும் மெக்கானிகல் துறை பொறியியலில் மட்டும்   தமிழ் வழி பொறியியல் நடைமுறைக்கு வருகிறது . இந்த திட்டம் பற்றிய பேச்சுக்கள் வந்த பொழுதே மாணவர்களை நினைத்து பயம்தான் வந்தது . ஆர்ட்ஸ் படிச்சு ஒரு வேலையில் சேர்ந்தாலே ஆங்கில மொழியின் தாக்கம் அதிகம் இருக்கிறது , எழுதுவதிலிருந்து பேசுவது வரை அனைத்தும் ஆங்கிலம் . ஒரு ரிப்போர்ட் , மெயில் , லெட்டர் என அத்தனையும் ஆங்கிலத்திலேயே பயன்படுத்தப்படுகையில் பள்ளிபடிப்பு வரை தமிழில் படித்து பொறியியலில் நான்கு ஆண்டுகள் படிக்கும் ஆங்கிலம் தான் பலரின் வாழ்வில் ஒளியேற்றுகிறது .அதிலும் மண் அள்ளிப் போடுவது போல் ஏன் இந்த வேண்டாத திட்டம் என்றுதான் தோன்றியது . இப்போதான் மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடம் படிக்கின்றனரா ? புரியாமல் படித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு . தமிழ் தமிழ் என்று சொல்லித்தான் தேசிய மொழியில் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாதபடி செய்தனர் இன்று ஆங்கிலத்துக்கு ஆப்பு . சில பயந்த மாணவர்கள் எதற்கு ரிஸ்க் என்று தமிழ் எடுத்துவிடுவர் அவர்களின் கஷ்டம் பின்னாளிலேதானே தெரியும் .அரியர் வைத்து பாஸ் செய்து பின்னர் நல்ல வேலைக்கான தகுதியை 
இழக்கும்பொழுது படித்த காலத்தில் ஒழுங்கா படித்திருந்தால் இந்த நிலை நமக்கு வந்திருக்குமா ?என்று கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் என்று சொல்வது மாதிரி இன்று நம்மில் எத்தனையோ பேர் ஏதோ கிடைத்த வேலைக்கு சென்று கொண்டு மனதினுள் புளுங்குவதுதான் இந்த தமிழ் வழி பொறியியல் படித்த மாணவர்களுக்கும் இன்னும் சில ஆண்டுகளில் நடக்கப் போகிறது . தமிழ் வழியில் படித்தால் வேலையில் முன்னுரிமை என்று இன்று சொல்லும் இதே ஆட்கள் நாளைக்கு என்ன செய்வார்கள் , பேசுவார்கள் என்று அவர்களுக்குதான் வெளிச்சம் . இதுவரையிலும் சொன்ன அத்தனையும் செய்து முடித்துவிட்டார்கள் !!!!!!!!! நல்ல வேலை இந்த திட்டத்துக்கு மாணவர்களின் வரவேற்பு குறைவாகவே உள்ளது என்பது பத்திரிகையில் தெரிந்தது . நான் கடைசியில் பேப்பர் படித்த வரை 25 மாணவர்களே தமிழ் வழி தேர்ந்தெடுத்தனர் .

  நம் இந்திய நாட்டில் மட்டும் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளன ? நாம் தமிழில் பொறியியல் படிப்பதாகவே வைத்துக்கொண்டாலும் வட நாட்டிலே இல்ல நம்ம பக்கத்துக்கு மாநிலத்துல உள்ளவங்களுக்கு தமிழில் கற்றதை அவர்களுக்கு புரிய  வைக்க முடியுமா ? அரசாங்க வேலை என்றால் பல மாநிலங்களுக்கும் சென்று பணி புரிய வேண்டும் . சில தனியார் துறைகள் உட்பட .நம் நாட்டுக்குள்ளயே நமக்கு இணைப்பு மொழியா ஆங்கிலம்தான் இன்றளவும் இருக்கு . சரி மத்திய அரசு தேர்வு வைக்கும்பொழுது நமக்கு மட்டும் கேள்வித்தாள் தமிழில் தரவேண்டும் இதுவே மற்ற மாநிலத்தவரிடமிருந்து நம்மை பிரிக்காதா ? சொந்த நாட்டுக்குள்ளேயே அன்னியர் ஆக மாட்டோமா ? நாம் மட்டும் தமிழில் படித்து மற்ற மாநிலங்கள் ஆங்கிலத்தில் படிக்கும் பொழுது வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் அவர்களுக்கே .இதன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பறிபோகின்றன .

இவை அனைத்தும் பட்டம் பெற்ற பின் வரும் விளைவுகள் . மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திகொடுக்கத்தான் முடியுமா ? ஆங்கில வழியில் கற்று வெளிவரும் பொறியியலாளர்கள் மட்டும் வருடத்திற்கு லட்சக்கணக்கானோர் .உள்நாட்டு , வெளிநாட்டு வேலை வாய்ப்பு அதிகம் இருந்தும் வேலையில்லாதோர் நிறைய .இனி அதை செயல்படுத்துவதில் வரும் சிக்கல்கள் என்னென்ன என்று பார்க்கலாம் .ஆங்கிலத்தில் பொறியியல் படிக்கும்போதே பல சிக்கல்கள் . நான் படித்தது அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் . இப்பொழுது தமிழ்நாடு முழுவதுமே அண்ணா தான் .அதற்க்கு முன்புவரை மனோன்மணியம் பாடத்திட்டம் (MS University ) .பாடத்திட்டம் மட்டுமே மாற்றிய அரசு நூலகங்களில் உள்ள புத்தகங்களை மாற்றவில்லை . இத்தனைக்கும் அரசு பொறியியல் கல்லூரி . அனைத்துமே MSU பாடத்திட்ட  புத்தகங்கள் . இவ்வளவுக்கும் நான் அண்ணாபல்கலைக்கழகம் ரெகுலரின் மூன்றாவது batch . மூன்று வருடங்களில் கூட எங்கள் பாடதிட்டதுக்கான புத்தகங்கள் நூலகங்களில் மிக குறைவே இருந்தன . நான் படிக்கும் காலத்தில் நடந்த ஒன்று  . ஜீயலாஜி(Geology -civil engg   ) ஒரு பாடம் , கல்லு , மண்ணு , காடு, மேடுன்னு பலது பத்தி படிக்கணும் . ஒரு தலகாணி சைஸ் புத்தகம் எனக்கு அத பார்த்தே மயக்கம் வந்துடுச்சு (+2 வரை தமிழ்தான் ), சும்மா விலாவாரியா விளக்கி சொல்லிருப்பாங்க . என்னதான் நெறைய படிச்சாலும் குறைச்சுத்தான் எழுதணும் . ஏன்னா எக்ஸ்சாம்ல ஒரு புக்லெட் தான் தருவாங்க . 40  பக்கம்தான் ஒரு பக்கத்துக்கு 15 வரிகள்தான் எழுத முடியும் (எனக்கு அதுவே அதிகம்தான் , 35 மேல தாண்டாது . ஒருமுறை கணிதத்தில் மட்டும் பத்தல , ஏன்னா வெட்டு குத்து நிறைய . கணக்குக்கும் எனக்கும் ரொம்ப தூரம் , 40 எழுதியும் அப்போ கப்புதான் வாங்கினேன் ). இதுல 100 மார்க்குக்கு எழுதணும் . 3 மணி நேரம் எக்ஸ்சாம். சொல்ல வந்தத மறந்துட்டேன் . தலகாணி சைஸ் புக் , என் மொத்த வகுப்பும் அந்த புக் வச்சு படிக்க நாங்க கொஞ்ச பேர் மட்டும் நூலகத்துல உள்ள yellopages படிச்சோம் , பாஸ் பண்ணிட்டோம் . yellopagesna ஒன்னும் இல்ல நாங்க படிச்சது 1960 ல வந்த மேல்நாட்டு பதிப்பக புத்தகம் , அன்றைய விலை நம் மதிப்பில் 40 . அந்த புக் கலர் மஞ்சளா இருக்கும் . ரொம்ப சின்ன புக் , படிப்பதற்கும் அவ்ளோ ஈஸியா இருந்துச்சு . இதுல எண்ண வேடிக்கைனா 1960 புக் ல இருந்த விசயங்களே இன்றைய பதிப்பு தளகானிலையும் இருந்துச்சு . எரிமலைகள் பத்தின விஷயங்கள் மாறாம அப்படியே இருந்துச்சு . (அதுக்கு பிறகு ஆராய்ச்சியே பண்ணலையோ?)


முதல்ல ஆங்கில புத்தகங்கள் எல்லாம் தமிழில் மொழி பெயர்க்கனும் , இது எந்தளவு சாத்தியம்? இன்னமும் நாம பேச்சுவழக்குல சொல்ற சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரியல . இதுக்கு பல இடங்கள்ள பட்டிமன்றமே நடக்குது .இப்போ இருக்குற அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் படித்தவர்கள் , இவர்களால் எந்த அளவுக்கு புரியும் படியான தமிழில் பொருள் மாறாமல் மொழிபெயர்க்க முடியும் ? ஆங்கிலத்தில் ஒரு வரியை தமிழில் மூன்று வரிகளில் எழுதினால் மட்டுமே புரியும் (.உதாரணம் :+2  பாடங்களில் தமிழ் வழி புத்தகங்கள் இரண்டும் , ஆங்கில வழி புத்தகங்கள் ஒன்றும்  இருக்கும் .)நிலைமை இப்படி இருக்க இப்பவே பொறியியலில் தலகாணி சைஸ் புத்தகங்கள் மொழிபெயர்ப்புக்குபின் 3 தலைகாணி சைஸ் வரும் . எப்படி படிக்க முடியும் ? அடுத்த வழி பாட திட்டம் (Syllabus )குறைக்கப்படும் . இப்பவே கொஞ்சம்தான் படிக்குறோம் . நானெல்லாம் இருக்குற 5 unitla 3 தான் படிப்பேன் சில நேரம் எல்லாத்துலயும் பாதிபாதி, என்னை மாதிரி நிறையபேர் உண்டு . அடுத்து எக்ஸாம் , இருக்குற 3 மணி நேரத்துல எவ்ளோ எழுத முடியும் ? சரி 40  பக்கம் பத்தல, எக்ஸ்ட்ரா பேப்பர் தராங்க எழுதி முடிக்குறோம் . ஒரு பேப்பர் திருத்த எவ்ளோ நேரம் எடுப்பாங்க ? எனக்கு தெரிஞ்சு 5  நிமிஷம் . நாம விழுந்து விழுந்து படிச்சு எழுதினது எல்லாம் ?????



  மாணவர்கள் பத்தி பார்த்தாச்சு  . பாடம் எடுக்குற ஆசிரியர்கள் பத்தி பார்க்க வேண்டாமா ? இப்போ பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் படித்தவர்கள் , தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பாடங்கள் முதலில் அவர்களுக்கே புரிவது சிரமம் , பிறகு எங்கிருந்து விளங்கும்படி மாணவர்களுக்கு எடுப்பது ? தொழில்நுட்ப வார்த்தைகள் (Technical words ) பொறியியலில் ஆங்கிலத்தில் அதிகம் அதுவும் சிவில் மற்றும் மெக்கானிகல் துறைகளில் ரொம்பவே உண்டு . அதுவே கற்பதற்கும் ஈசி .முதலில் நமது பள்ளிகல்வியை பார்க்க வேண்டும் . தமிழ் , ஆங்கிலம் , பிரெஞ்சு , சமஸ்கிருதம் என்று பள்ளிக்கல்வி பலவாறு படித்துவிட்டு பொறியியல் மட்டும் தமிழில் எப்படி கற்ப்பது? இன்று வரை பழகி விட்ட ஒன்றை மாற்றுவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல . தமிழ் மொழியில் கற்றல் மட்டுமே ஒரு மாணவனுக்கு புரிதலை உண்டு பண்ணுவதில்லை . அப்படி பார்த்தால் கலாம் கூடத்தான் தமிழ்வழியில் பள்ளிக்கல்வி கற்றார் அப்படிஎன்றால் அவர் கல்லூரியில் பாடங்கள் புரியாமல் கற்று வந்தார் என்று சொல்ல முடியுமா ?

 தமிழை வளர்க்க பொறியியல் மட்டுமே வழி இல்லை . குறைந்தபட்சம் அனைத்து பள்ளி ,பட்ட படிப்புகளிலும் சங்ககால தமிழ் பாடங்கள் ஒரு பேப்பர் வைக்கலாம் . பட்டப்படிப்புகளில் ஒரேமாதிரியாய் , ஒருதுறை சார்ந்த பாடங்களை மட்டுமே படிக்கும் அலுப்பு கூட சங்ககால தமிழை இன்னும் ஆர்வமாய் கற்க வைக்கும். 

பி.கு. இது ஒரு மீள்பதிவு . ப்ளாக் தொலைந்து போனதில் மீட்டெடுத்து சில மாற்றங்களுடன் . இப்பதிவு மீண்டும் இடத் தூண்டியது கார்த்திகைப் பாண்டியனின் கீழ்க்கண்ட பதிவே .

தமிழில் பொறியியல் கல்வி -சாத்தியமா?

Posted by மதார் at 8:32 PM
Labels: தமிழில் பொறியியல் கல்வி
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ▼  August (6)
      • மாடுகளுக்கும் பாசம் , உணர்ச்சிகள் உண்டு
      • ராங் கால்ஸ் -புது முயற்சிகள்
      • என்னப் பெண் இவர்?
      • சின்ன பொய் போதும்
      • தமிழில் பொறியியல் கல்வி
      • குழந்தைகளுக்கு மட்டும் என்னை பிடிப்பதேன்
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio