பெண்ணுக்கு பெண்ணையே பிடிப்பதில்லை , பல இடங்களில் பல பெண்களின் செயல்கள் ச்சே ஏன் இப்படி இருக்காங்க என்று அவர்கள் மேல் கோவம் வர வைத்திருக்கிறது . நேற்று ட்ரெயின் டிக்கெட் புதுப்பித்துவிட்டு சரி பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சின்ன சம்பாசனை . பேச்சு வந்த திசையில் திரும்பினால் கையில் பெரிய பையுடன் ஒரு இளைஞர் வரிசையில் நிற்கும் ஒரு பெண்ணிடம் ப்ளீஸ் மேடம் ட்ரெயின் க்கு டைம் ஆய்டுச்சு மேடம் ரொம்ப லேட் ஆய்டுச்சு என்று கெஞ்சிக் கொண்டிருக்க அப்பெண்ணிற்கு முன் நிற்கும் பெண்ணும் ஏதோ சொல்ல அவர்கள் மூன்று பேருக்கும் வாக்குவாதம் . பிரச்னை இதுதான் , வெள்ளிகிழமை வார கடைசி சாயங்காலம் . இரண்டு பெரிய வரிசைகள் நானும் அரை மணிநேரம் நிற்க வேண்டியிருந்தது . அந்தப் பையன் வந்த நேரம் வரிசையில் நின்றால் டிக்கெட் எடுக்கவே எப்படியும் 45 நிமிடம் ஆகும் . இதன்மூலம் அவனின் வெளியூர் ட்ரெயின் அவனால் மிஸ் செய்யப் படலாம் . அவன் பயணத்திற்கு அவன்தான் பொறுப்பு சீக்கிரம் கிளம்பி வர வேண்டும் என்று நாம் பேசலாம் . என்ன இருந்தாலும் சில வேளைகளில் பிரயாணங்கள் நாம் நினைப்பது மாதிரி திட்டமிட்டபடி அவ்வளவு சுலபமாய் நடப்பதில்லைதான் .
அவன் செய்தது கவுன்ட்டர் இல் இருந்து 5 வது இருக்கும் பெண்ணிடம் தனக்கு ஒரு லோக்கல் ட்ரெயின் டிக்கெட் வாங்கித் தருமாறு பணம் குடுக்க பின்னால் இருக்கும் பெண் அவனிடம் சண்டை பிடிக்கிறாள் . வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் என்ன லூசா நீங்க மட்டும் எப்படி குறுக்கே வந்து வாங்கலாம் என்று அவரின் வாதம் . முன்னிருக்கும் பெண்ணும் இதுல என்னங்க இருக்கு அவருக்கும் பாவம் லேட் ஆய்டுச்சு என்றுதானே சொல்றார் எனக அப்படினா நீ எனக்கு பின்னாடி வந்து நில்லு என்று ஆங்கிலத்தில் குழாயடிச் சண்டை நடக்கிறது . இவனும் சாரி மேடம் ப்ளீஸ் மேடம் லேட் ஆய்டுச்சு மேடம் என்று கெஞ்சி கொண்டிருக்க பார்க்கவே கஷ்டமா இருந்தது . நிஜமாகவே அவனுக்கு வெளியூர் ட்ரெயின் நேரம் குறைவாக இருந்திருக்கலாம் . அதற்காக எல்லோருமே பொய்தான் சொல்வார்கள் வரிசையில் நிற்க சொம்பேரிபட்டு இப்படி நடிக்கிறார்கள் என்று எப்படி நினைக்கலாம் . அவனுக்கான டிக்கெட் வாங்க ஒரு நொடி போதும் அந்த ஒரு நொடியில் அப்பெண்ணிற்கு என்ன நஷ்டம் வரப் போகிறது ? அதற்க்கு முன்பான வாழ்க்கையில் அத்தனை நிமிடங்களையும் என்னவோ பயனுள்ளதாய் அமைத்துக் கொண்டதாய் நினைப்பு .இவர்களின் ஆங்கிலப் புலமையை , அறிவை , ஸ்மார்ட் நெஸ் காட்ட இப்படியான இடங்களும் செயல்களும் தேவைதானா ?
என்னுடைய பழைய டிக்கெட்டில் நான் வரிசையில் இருந்து ஒதுங்கி கையெழுத்து போடும் நேரத்தில் இருவர் டிக்கெட் வாங்க முடிந்தது , அதையும் வரிசையில் இருக்கும் பெண் ஆமா இப்போதான் ஒரு பெண்ணை முந்தி இரண்டு பேர் டிக்கெட் வாங்கினாங்க என்று சொல்லி என்னைப் பார்க்க அப்படியே வாய் வரைக்கும் திட்ட வந்தது . என்ன ஏதுன்னு தெரியாமலே இப்படி பேசுபவர்களை என்ன சொல்ல ? நான் வரிசையில் நின்றுகொண்டே கையெழுத்து போடும் நேரம் எனக்கு பின்னாடி நிற்பவர்களுக்கு நேர விரயம்.அதையே நான் கொஞ்சம் ஒதுங்கிப் போடுகையில் இருவர் டிக்கெட் வாங்க முடிந்தது .
எனக்கும் கூட ஒருமுறை இப்பையனின் நிலை வந்தது , நெல்லை எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒரு மணி நேரமே கையில் இருக்க லோக்கல் ட்ரெயின் டிக்கெட் எடுக்க அவ்ளோ பெரிய வரிசை . வேறு வழியில்லை நானும் முன்னே போய் நிலைமை சொல்லி டிக்கெட் வாங்கிப் போனேன் . கூட வந்த நண்பன் அர்ச்சனை செய்து கொண்டே வந்தான் . என்ன செய்ய முடியும் அலுவலகத்தில் இருந்து ஒரு மணி நேரம் முன் அனுமதி வாங்கி சென்னை டிராபிக் கடந்து ரூம் வந்து லக்கேஜ் எடுத்து ஸ்டேஷன் போறதுக்குள்ளே ஒரு போராட்டமே நடத்த வேண்டும் .அப்பெண்ணின் அந்த செயல் பார்க்கும்பொழுது அத்தனை பேர் முன்னிலையில் அவன் ஒரு 27 வயது மதிக்கத்தக் வாலிபன் பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அப்படி கெஞ்சுகிறான் என்றால் அவனின் சூழ்நிலை புரிய வேண்டாமா ? திட்டுவதற்கு வாய் வரை வந்ததை கண்ட்ரோல் பண்ணிட்டு வந்தேன் . ரூம் வந்தும் மனசு ஆற வில்லை அந்தப் பெண்ணை ஏதும் சொல்லாமல் வந்துவிட்டோமே என்று உறுத்திகிட்டே இருக்கு . பெண்களை ஏன் மேலதிகாரிகளாய் வர ஆண்கள் விரும்புவதில்லை என்று புரிகிறது .


