"காற்றுக்குள்ளே வாசம் போனால் " ரொம்ப சின்சியரா ஆபீசில் ஆணி எடுத்துக் கொண்டிருக்கையில் போன் .
"ஹலோ " எதிர்முனையில் ஆண்குரல்
"நீங்க கவிதாவா ? "
"இல்லை "தொடர்ந்து
"நீங்க குமார் சிஸ்டரா " இல்லீங்க ராங் நம்பர் கட் .
நம்பரில் கால் வந்ததால் அதை கண்டுக்காம விட்டுட்டேன் . சில மணிநேரங்கள் கழித்து மீண்டும் போன் அதே நம்பர் .
" நீங்க கார்த்திக் பிரெண்டா " இல்லீங்க கட் .
மீண்டும் கால் வரலாம் என்று X போட்டு பத்திரப் படுத்தியாச்சு . அடுத்த நாள் போன்
'உங்க நம்பர் என் பிரெண்ட் மொபைலில் இருந்து எடுத்தேன் " அப்படியா சரி கட்
.
சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் போன்
" கீழே ஒரு சிம் கிடந்தது அதுல உங்க நம்பர் இருந்தது "
"இன்னும் எத்தனை கதை சொல்வீங்க இதுக்கு மேல போன் வரக்கூடாது " கட்
அதுவரையிலும் நம்பர் எப்படி இவனுக்கு கிடைத்திருக்கும் என்று கேள்விக்கு பதில் அப்போதான் தெரிந்தது . AIRTEL , AIRCEL , BSNL,VODAFONE Etc . இவர்கள் கொடுக்கும் சேவைகளுக்காக அடிக்கடி நம்பர் மாற்றும் பழக்கம் சிலருக்கு உண்டு . அப்படி எவரோ தூக்கிப் போட்ட சிம் கார்டு மூலம் எனக்கு இரண்டு நாள் தலைவலி . இன்னும் அந்த சிம் கார்டில் இருந்த எத்தனை எண்களுக்கு இதே மாதிரி போன் பண்ணானோ தெரியல . நீங்கள் சிம் மாற்ற வேண்டுமா பழைய சிம்மை தூக்கி போடாதீங்க . அதிலிருக்கும் நம்பர்களை அழித்துவிட்டு போடுங்கள் இல்லை அதை முடிந்த வரையில் மற்றவர் பயன்படுத்தாத வகையில் உடைத்து போடுங்கள் . நீங்கள் போற போக்கில் வீசிவிட்டு போகும் சிம் கார்ட் மூலம் பலருக்கும் இப்படி பிரச்சனைகள் வரலாம் . குறிப்பாக அதிலிருக்கும் பெண்களுக்கு அவர்கள் உங்கள் உறவினர் , தோழியாகக் கூட இருக்கலாம் . ஒரு ராங் கால் மூலம் எத்தனை பெண்களின் வாழ்வோ வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது .
சிம் கார்டு அன்றி புதுவகையில் பெண்களின் நம்பர் கண்டுபிடிப்பது . தொடர்ந்து ஏதோ ஒரு எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவேண்டியது அல்லது போன் செய்ய வேண்டியது . தப்பித்தவறி "WHO R U " பதில் அனுப்பிட்டோம் செத்தோம் . சிக்கிருச்சுடா ஒரு பொண்ணு நம்பர் . அவ்ளோதான் அப்புறம்தான் அவங்க வேலையே தொடங்கும் . சில ராங் கால்ஸ் .
"எனக்கு காதல் தோல்வி உங்ககிட்ட பேசினா எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு தயவு செய்து என்னோடு பேசுங்க "
"சரிங்க உங்க ஸ்டோரி எல்லாம் சொல்லிடீங்கள்ள இப்போ மனசு லேஸ் ஆய்ருக்கும் உங்களுக்கு ஆயிரம் பிரச்னை இருக்கலாம் எனக்கு ஆயிரத்து ஒரு பிரச்னை இருக்கு இனிமேல் போன் பண்ணாதீங்க " கட்
அவனின் தொடர் தொல்லை தாங்காமல் ஒரு நாள் கால் அட்டென்ட் பண்ணி பேசினா அவன்பாட்டுக்கு ஒரு கதை சொல்லிட்டு இருக்கான் .இதேக் கதையை ஒரு பத்து பெண்களிடம் சொன்னால் கண்டிப்பா ஒன்னு ஏமாறும் . sympathy creation
இதேமாதிரியான தொடர் ராங் கால் ஆண்குரல்(எப்படித்தான் நம்பர் கிடைக்குமோ தெரியல ) இந்த ராங் கால் அட்டென்ட் பண்ண ஒரு காரணம் நண்பர்கள் பல நேரங்களில் நம்பர் மாற்றிவிட்டு விளையாடுவர் . அவர்கள் என நினைத்துக் கொண்டே அட்டென்ட் பண்ணுவதுதான் காரணம் . பேசிய உடனே தெரிந்துவிடும் நண்பர் அல்ல என்று . அந்த பையனை நான் திட்ட ( ஆரம்பத்தில் பொறுமையாதான் பேசுவேன் இருந்தாலும் திட்ட வச்சுடுவாங்க ) அவன் நண்பன் போன் பண்ணி என்னைத் திட்ட (எப்படி என் நண்பனை நீ திட்டலாம் ? நீ என்ன அவனுக்கு பஞ்சாயத்தா ? இது ஒரு சின்ன சாம்பிள் ) மீண்டும் முதல் ஆள் ரொம்ப நல்லவன் மாதிரி சாரிங்க என் பிரெண்ட் உங்களுக்கு போன் பண்ணி திட்டிட்டான் நான் அவனை ஏன்டா அப்படி பண்ணேன்னு திட்டிட்டேங்க சாரிங்க . ( ஒன்னாதான் இருந்து போன் பண்ணிருப்பாங்க இந்தக் கதையை நாம் நம்பனும் திருநெல்வேலிக்கே அல்வா ) என் தங்கைக்கு நாளைக்கு ராத்திரி ............கல்யாணம் . நீங்க என் பிரெண்ட் (அப்படி நான் சொல்லவேயில்லை அவனா சொல்லிக்கிட்டான் )கண்டிப்பா வரணும் .
" சாரிங்க என்னால வர முடியாது உங்க தங்கைக்கு என் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க ."
Good image creation by friend
அடுத்த ராங் கால் .
"எப்படி என் நம்பர் கிடைத்தது "
"சும்மா ஒரு நம்பர் போட்டேன் உங்க நம்பர் வந்துடுச்சு "
"நீங்க வேலை வெட்டி இல்லாம போன் பண்ணுவீங்க மத்தவங்களுக்கு வேலை வெட்டியெல்லாம் இருக்காதா "
"என் பெயர் வருண் உங்க பெயர் "
"நீங்க உங்க பெயர் சொன்னால் நானும் சொல்லனுமா "
"நீங்க என்ன ஆந்திராவா "
"ஏன்"
"இல்ல ரொம்ப கோவப் படுறீங்களே "
"ஏன் ஆந்திரா பொண்ணுகளுக்கு மட்டும்தான் கோவம் வருமா "
"சரிங்க இனி உங்க பிரெண்ட் நான் "
"தேவையே இல்லை எனக்கு ஏற்கனவே நிறைய பிரெண்ட்ஸ் இருக்காங்க " கட் .
New friend creation
எனக்குத் தெரிந்து இத்தனை வகைகள் இன்னமும் எத்தனைஎத்தனையோ உண்டு . இதில் ஏதாவது ஒன்றில் ஏமாந்தாலும் போதும் . எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் இல்லைதான் . ஆனால் இந்த மாதிரியான அழைப்புகள் மூலம் பழகும் நட்புகள் பெரும்பாலும் ஆபத்துகள்தான்.

