skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Saturday, May 22, 2010

ஏப்ரல் பயணம் ஒரு அனுபவம்

இந்தமுறை பயணம் ரயிலில் இருந்தே இனிமையாய் ஆரம்பித்தது (எல்லாத்துக்கும் சேர்த்து பின்னாடி வேட்டு வச்சுட்டுள்ள) . எப்போதுமே ரயில்பயணம் நான் விரும்பியபடி இருக்காது . ஆனா இந்தமுறை 2 குட்டிபசங்க குடும்பமாய் , ஒரு இளந்தம்பதி, ஒரு கர்னல் மனைவி , நான் என எங்க போர்சன் புத்தகப் பரிமாற்றம் , பழம் , ஜூஸ் பரிமாற்றம் என்று நல்லா இருந்தது . குட்டிபசங்கதான் சரியான வாய் , வால் பசங்க . ட்ரெயின் கிளம்பும்போதே சப்பாத்தி , வேக வச்ச முட்டைன்னு வெளுத்து வாங்குறாங்க . எனக்கு பசி கிள்ளுது . சின்னவனுக்கு 5 வயது , பெருசுக்கு 7 . சப்பாத்திக்கு முன்னாடியே பெரியவன் முட்டை சாப்பிட சின்னவன் ஜோயல் "ஏல நீ மாத்தி மாத்தி தின்கிறியோ " என்று கேட்க அடப்பாவிங்களா எப்படி சாப்பிட்டா என்னடா எல்லாம் ஒரு இடத்துக்கு தானே போகுதுன்னு நான் பசியோட இருக்க வந்தாரு மகராசன் பராட்டவோடு . முட்டை பரோட்டா முப்பது ருபாய் . வாங்கிட்டேன் பசியோடு ஓபன் பண்ணா வெறும் பரோட்டா 2 , ஒரு முட்டை போட்டா குருமா கவர் இதான் முட்டை பரோட்டா அதை பார்த்து எல்லாரும் சிரிச்சுட்டோம் . எப்படிலாம் ஏமாத்துறாங்க? .

                   வழக்கம் போல் ட்ரெயின் விருதுநகர் தாண்டி மெதுவாய் செல்ல இரண்டு வாண்டுகளும் ஜன்னலோரம் உக்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தவாறே ட்ரெயின் மெதுவா போற காரணங்களை அலசி ஆராய்றாங்க. அவர்கள் கூறிய காரணங்கள் . பெரியவன் "ஏன்ல ட்ரெயின் மெதுவா  போகுது ?" சின்னவன் "ட்ரைன்ல காத்து நிக்கல " , அடுத்தமுறை , பெரியவன் "ஏன்ல ட்ரெயின் மெதுவா  போகுது ?" சின்னவன் " ட்ரெயின் செத்து போச்சு ", கொஞ்சநேரம் பிறகு , பெரியவன் "ஏன்ல ட்ரெயின் மெதுவா  போகுது ?" சின்னவன் "ட்ரெயின்க்கு சுகர் " எப்படிலாம் யோசிக்குறாங்க " .
                   பெரியபையன் என் பக்கத்துல இருந்துகிட்டே சின்னவனை பத்தி குறை சொல்ல அவன் "எலேய் பொய் புளுவாதல்ல " என்று சொல்ல என்னால திருநெல்வேலி வரும்வரை சிரிச்சு முடியலை .

                 அடுத்து பஸ் பயணம் , பஸ்ல பாட்டு அவ்வளவு சத்தமா வச்சுக்கிட்டு நடத்துனர் கத்தி கத்தி டிக்கெட் கேட்க ஏன் இவ்வளவு சத்தமா முதல்ல பாட்டு வைக்கணும் என்று இருந்தது . கொஞ்ச நேரம் போனபிறகு பின்னாடி இருந்து ஒரே சத்தம் ஒரு பையன் "யோவ் டிரைவர் பாட்ட நிறுத்துயா " என்று சத்தம் போட நடத்துனருக்கும் அவனுக்கும் சிறு வாய்த்தகராறு வர ஒருவழியாய் பாட்டை நிறுத்தியாச்சு . சரி ஒரு தொல்ல விட்டதுன்னு நிம்மதியா இருந்தா பஸ் காவல் நிலையம் முன்பு நிறுத்தி அந்த பையனை போலீஸ் கிட்ட ஏதோ பெரிய தகராறு பண்ணா மாதிரி நடத்துனர் புகார் சொல்றாரு . நடந்தது இதுதான் அந்த பையனுக்கு மொபைல் ல பல முறை கால் வந்திருக்கு அவனால பாட்டு சத்தத்துல பேச முடியாம கஷ்ட படவே பாட்டை நிறுத்த சொல்லிருக்கான் . இதுக்கு காவல் நிலையம் போகனுமா ? பையனும் இதை கொஞ்சம் பதினெட்டு வயசு முறுக்குல நறுக்கென்று சொல்ல அங்கிருந்த பெண் போலீஸ் " என்னல நானும் பார்த்துட்டே இருக்கேன் பெரிய ம_ _ கணக்குல பேசிகிட்டு இருக்க " என்று சவுண்ட் விட ஐயோ பாவம் பையன் கூடகொஞ்சம் வாய்துடுக்குல பேசி அடி வாங்கிட கூடாதே என்று இருந்துச்சு . நல்ல வேலை பையன் அப்புறம்  கொஞ்சம் நிதானமாவே பேசிட்டான். அரசுத்துறை அரசாங்க ஊழியர்களுக்கே ஆதரவுக் குரல் குடுப்பது எப்போ நிற்கும்னு தெரியல .

*************************************************************

ஊர் திருவிழா , பல வருடங்களுக்குப்பின் இந்தமுறை ஒருவழியா போயிட்டேன் . ஊர்ல நிறைய மச்சான்ஸ் உண்டு அதிலும் ஒருத்தர் அவ்வளவு பாசம் . கோவிலில் வைத்து "என்னக் கொழுந்தியா எப்போ வந்த ? " நானும் " ம் வந்தாச்சு, யோவ் மச்சான்  இலை குடும் " பஞ்சாமிர்தம் வாங்கத்தான் . கோவிலில் இருந்து வரும் வழியில் மீண்டும் அதே மச்சான் " கொழுந்தியா நாளைக்கு நம்ம வீட்லதான் உனக்கு சாப்பாடு என்ன சமைக்க? " , "பிரியாணி செய்யும்வே  சாப்ட்டு ரொம்ப  நாள் ஆச்சு " , " ஆகட்டும் கண்டிப்பா வந்துரனும் " சரின்னு சொல்லிட்டு வந்தேன் ஆனா போகல . அடுத்தமுறை என்னை பார்க்கும்போது திட்டு இருக்கு . ஊருக்கு போனாலே அதுவரை சென்னை மக்களுக்காய் பேசிய வாய் ஊராரை பார்த்தாலே நம்ம பேச்சு தன்னால சரளமா வருது . இந்த மச்சான் குடும்பம் எங்க வீட்டு பெரியவங்க கிட்ட வேறொரு பிரச்னை மூலம் பேச்சுவார்த்தை இல்லை  . ஆனா என்கிட்ட இதுவரையிலும் குடும்ப சண்டையை அவர் குடும்பம் காமிச்சது இல்லை , எப்போ ஊருக்கு போனாலும் அவர்கள் அண்ணன் தம்பிகள் நான்கு பேர் " என்ன கொழுந்தியா எப்போ வந்த ? எப்படி இருக்க ?" என்று நலம் விசாரிப்பாங்க இதான் கிராம மக்களின் குணம் .
*****************************************************************

                  கந்தூரி விழா பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியல . ஊர் அருகில் இருக்கும் பள்ளிவாசலில் வருடந்தோறும் வெகு விமர்சையாய் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் விழா இது . மதம், ஜாதி என்ற வேறுபாடு இல்லாமல் சுற்று வட்டார மக்களும் ஆண்டாண்டு காலமாய் இவ்விழாவில் பங்கெடுப்பதுண்டு . இப்பள்ளிவாசலின் பெயரே என் அப்பாவால் எனக்கு சூட்டப்பட்டது . நோன்பு இட்டு பத்து நாள் பிறகு மாலையில்  நடக்கும் விளக்கு பூஜை பெயர் பெற்றது .

பள்ளி உள்ளே போய் ஏதோ ஒரு நம்பிக்கையில் கடவுளை மனதினுள் வேண்டிக்கொண்டே அங்கிருக்கும் உண்டியல் குடத்தில் மக்கள் காணிக்கை இடுவாங்க . சில மத முஸ்லிம் பெரியவர்கள் நமக்கு சின்ன சின்ன உருண்டைகள் நிறைந்த பாக்கெட் ஒன்னு விபூதி மாதிரி தருவாங்க . வெளியில் வந்ததும் முதல் வேலை அதை உடைத்து தின்பதே , நல்ல இனிப்பாய் இருக்கும் .
இரவு 11 மணி வாக்கில் வான வேடிக்கைகள் ரொம்ப நேரம் நடக்கும் . பல வருடங்களுக்கு முன்பு ரொம்ப சிறப்பா நடந்த இவ்விழா இப்பொழுது அவர்களுக்கிடையில் நடந்த கோஷ்டி மோதலில் ஏதோ பெயருக்கு நடத்துறாங்க . குறைவான கூட்டமே இருந்தது இம்முறை பார்க்கவே மனசு கஷ்டமா போச்சு . ஏழு வருடங்களுக்குப் பிறகு நான் கலந்துகொண்ட கந்தூரி விழா ஜுரம் இருந்ததினால் ஒரு மணி நேரம் மட்டுமே அங்கு இருக்க முடிந்தது . அந்த  மட்டும் போனதே 2 இன்ஜெக்சன் துணையுடன் .


ஆப்பு : ஜாலியா ஊருக்கு போன நான் அன்ன ஆகாரம் இல்லாமல் 10 நாள் மருத்தவ மனைக்கும் வீட்டுக்குமே போயிட்டு வந்துட்டு இருந்தேன் , இந்த மருந்து மாத்திரை எல்லாம் எவன்யா கண்டு பிடிச்சான் ?. அதனாலேயே 20 நாள் நல்லா வீட்ல இருந்தாச்சு . வாங்கின மாத்திரையில் ஒன்னு கூட சாப்பிடல . அதயெல்லாம் பார்த்து பார்த்தே நான் இல்லாத நேரத்தில் வீட்டில் எனக்கு அர்ச்சனை நடக்கும் .
Posted by மதார் at 1:32 AM
Labels: நினைவுகள், பயணம்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ▼  May (6)
      • என்னுடைய கோவம் நியாயமானதா ?
      • ஒரு பெண்ணின் திருமண எதிர்பார்ப்புகள்
      • மரண பயம் பார்த்ததுண்டா ?
      • ஏப்ரல் பயணம் ஒரு அனுபவம்
      • அல்வா வாங்கி வரும் நெல்லை மக்களே கவனம்
      • ஊர்பிரச்சனை உடனடி தீர்வு வேண்டும்
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio