skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Saturday, May 29, 2010

ஒரு பெண்ணின் திருமண எதிர்பார்ப்புகள்

  என் கல்லூரித் தோழி விடுதியிலும் பெரும்பாலான சமயங்களில் சேர்ந்தே இருப்பது வழக்கம் . கழுத கெட்டா குட்டிச்சுவரு என்பது மாதிரி நாலு பொண்ணுங்க ஒன்னு சேர்ந்தா ஒன்னு ஆண்களைப் பற்றிய பேச்சா இருக்கும் இல்லைனா கல்யாணம் பற்றிய பேச்சா இருக்கும் . அனேக முறை கல்யாணப் பேச்சுதான் நடக்கும் .அந்த மாதிரியான ஒரு விவாதத்தில் ஒருமுறை உனக்கு எந்த மாதிரியான திருமணம் வேண்டும் என்று கேட்டோம் ,உன்னுடைய வருங்கால கணவரைப் பற்றிய உன்னுடைய எதிர்பார்ப்புகள் என்னென்ன என்று கேட்கும்பொழுது அவள் சொன்னவை, அதற்கு முன் அவளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் . ஆள் சுமார்தான் , பார்த்தவுடன் திரும்பிபார்க்க வைக்கும் அளவுக்கு அழகு அல்ல , இடுப்பு வரை கருகருவென்று நீண்டு கிடக்கும் கூந்தல் மேல் மட்டும்  பல பெண்களுக்கு பொறாமை உண்டு . நம் இந்தியப் பெண்களுக்கான சராசரி உயரம் ஒல்லியான தேகம் . ஆனால் அவள்  ஆண் பெண் என்ற பாகுபாடன்றி எல்லோரிடமும் சகஜமாய் பழகும் பெண் . அதனாலேயே அவளின் நட்பு வட்டம் கொஞ்சம் பெரியது . இனி விசயத்துக்கு வருவோம் . அவளின் எதிர்பார்ப்புகள் இனி ஒரு நேர்முக வடிவில் ,அவளுடைய பெயர் வர்ஷினி என்று வைத்துக்கொள்வோம் .

கேள்வி : உனக்கு பிடிச்சது காதல் திருமணமா ? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமா ?
வர்ஷினி  : காதல் திருமணம் முதல் சாய்ஸ் காதலே அமையாத பட்சத்தில் பெற்றோர் விருப்பம் .

கேள்வி : உன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் ?
வர்ஷினி  :படிச்சவரா இருக்கணும் , நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை , வாழ்க்கைக்கு தேவையான அளவு வருமானம் இருந்தால் போதும் . அக்கம் பக்கம் பார்த்து அதிகப்படியாய் ஆசைப்படும் பெண்ணல்ல நான் . அதனால பணம் வச்சு பிரச்னை இல்லை . ஆண் ஆணாய் அவருக்குரிய மிடுக்குடன் இருக்கணும் . கூஜா தூக்குற ஆள் மட்டும் வேண்டவே வேண்டாம் . சின்னச் சின்னச் சண்டைகள் வரணும் பிறகு ஒரு சமாதானம் வரணும் , எதற்க்கெடுத்தாலும் ஆமாஞ்சாமி போடக்கூடாது , என்னுடைய உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கணும் . (எங்களுக்குள் "மிதிக்காம இருந்தா சரிதான்" ).

கேள்வி :காதல் திருமணம் என்றால் எந்த மாதிரி இருக்கணும் ?
வர்ஷினி  :கலப்பு திருமணம் என்றால் சரி . ஆனால் மதம் மாறி  மட்டும் திருமணம் பண்ண மாட்டேன் . இத்தனை வருசமாய் ஒரு இந்துவாய் வளர்ந்தவள் நான் . என்னுடைய குழந்தையும் ஒரு இந்துவாதான் வளரனும் . (எங்களுக்குள் "ஏன் கோவிலுக்கு நேர்ந்து விடப் போறாளா ")

கேள்வி :சரி உன் வீட்டுக்காரருக்கு சமைச்சு போடுவியா ?
வர்ஷினி  :சற்றே கோவத்துடன் , யாரைப் பார்த்து என்ன கேள்வி கேக்குறீங்க நான் நளனுக்கு தங்கட்சியாக்கும் (நாங்க "நளன் இருந்து கேட்ருந்தா இந்நேரம் தூக்குல தொங்கிருப்பார் ) . ஒரு ஒல்லிப்பையனை கல்யாணம் பண்ணி என் சமையல் சாப்பிட்டு குண்டாக்கி காட்டுறேன் பாருங்க . அவங்க வீட்ல எல்லாரும் ஆச்சரியப்படணும் .(எங்களுக்குள் " ஆமாமா அப்புறம் வாசலை கொஞ்சம் அகலப் படுத்தாம இருந்தா சரி ")

கேள்வி  : சரி உனக்கு ஒரு பையனை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று விரும்பினால் அவனிடம் உன் காதலை நீ வெளிப்படுத்துவியா ?
வர்ஷினி : என்னைப் பொறுத்த வரைக்கும் என் மனசுல ஒரு பையன் இடம் பிடிப்பதை விட என்னிடம் பழகும் அந்தப் பையன் மனசுல தோணனும் , இவ நமக்கு ஏற்றவள் , நம்ம குடும்பத்துக்கும் ஏற்றவள் இவளை திருமணம் செய்யலாம் என்று . என் பழக்க வழக்கம் , குணம் , படிப்பு , அழகு என்று பிடித்து என்னிடம் அவன் தன் காதலைச் சொன்னால் எனக்கும் அவனை வேண்டாம் என்று சொல்ல காரணம் இல்லாத பட்சத்தில் வீட்டில் சொல்லி திருமணம் செய்வேன் . பெத்தவங்க சம்மதம் இல்லாம பண்ண மாட்டேன் . கண்டிப்பா அவர்கள் சம்மதிக்க வச்சுடுவேன் , இது வரை என் சம்மந்தப்பட்ட  என்னுடைய முடிவு எதுவும் தப்பானது இல்லை , அது என் வீட்டாருக்கும் தெரியும் .(எங்களுக்குள் "இவகிட்ட காதலை சொல்றவன் ரொம்ப பாவம் ")

கேள்வி  :திருமணதிற்கு பிறகு கணவர் குடும்பம் உன்னுடன் இருந்தால் ஏற்றுக்கொள்வாயா ? (மாமி , மாமா , தங்கை , தம்பி )

வர்ஷினி :நானும் பெரிய குடும்பத்துல பொறந்து வளர்ந்தவதான் . யார் இருக்காங்களோ இல்லியோ மாமியார் கண்டிப்பா என்கூட இருக்கணும் . என் தலை பூ கூட சீக்கிரம் வாடாது அதனால என் மாமியார் ஆயுள் கெட்டியாம் , (எங்களுக்குள்"அப்போ சீக்கிரம் உன் புருசனுக்கு முடி கொட்டிரும் , சண்டை தீர்த்து முடியாதே ") உங்கள மாதிரி ஆட்களை சமாளிச்சு பழக்கம் இருக்குறதால மாமி கூட சண்டை போட மாட்டேன் , நீங்களே எத்தனை மாமிகளுக்கு  சமம் .(இது நிஜம் விடுதியில் தங்கிப் படிச்சாலே மத்தவங்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் , ஒருஒரு பெண்ணும் ஒருஒரு மாதிரி இருப்பாங்க , சூடு சொரணை எல்லாம் ரொம்ப கம்மியாதான் இருக்கும் , இது இருந்தாதானே மாமியார் மருமகள் சண்டை வரும் .)

 கேள்வி  : எங்களுக்கு நீ சொல்ல விரும்புவது ?
வர்ஷினி : உங்க ஆத்துக்காரருக்கு வீட்டு சமையல் போரடிக்காம பார்த்துக்கோங்க , ஹோட்டல் தேடி போக விடாதீங்க அது உங்களுக்குத்தான் கஷ்டம்.ஹோட்டல் சுவை பிடிச்சு போச்சுன்னா அப்புறம் உங்க சமையல் பிடிக்காது  (எங்களுக்குள் "ஹோட்டல் போய் சாப்பிட்டா சமைக்குற வேலை மிச்சம் இதுல கஷ்டம் என்ன இருக்கு 

") 
வர்ஷினி : அடிப்பாவிங்களா  நான் சொன்னது சமையல் இல்லை , வீட்டு சமையல் -நீங்க , ஹோட்டல் சமையல் - உங்களுக்கே புரிஞ்சுருக்கும் .

ஒட்டுமொத்தமாய் நாங்க அவளின் பதிலில் வாய் மூடாமல் ரொம்ப நேரம் அப்படியே நின்னோம் .

இப்பெண்ணின் எதிர்பார்ப்புகள் சரியா ?

இந்த பேச்சின் நடுவில் என்னிடமும்  கேட்க , நானும் எனக்கு ஜோசியர் மாப்பிள்ளை நார்த்திலிருந்து வருவார் என்று சொன்னார் என்று பலமுறை சொல்ல , ஒருமுறை அவர்கள் உனக்கென்ன மாப்பிள்ளை வட இந்தியாலிருந்து வரப் போறார்  என்று சொல்ல அப்போதான் எனக்கு எல்லாம் புரிஞ்சது . அது வட இந்தியா இல்லை , என் வீட்டிலிருந்து வட திசையில் மாப்பிள்ளை அமையும் என்று ஜோசியர் சொன்னதாய் பிறகு சொல்ல அவர்களின் (ஒரு பத்துபேர் )ஒட்டுமொத்த  பார்வையும் என்மேல் .என் நல்ல நேரம் அன்னைக்கு அடி வாங்காம தப்பிச்சேன் . (வட திசையை நான் ஆங்கிலத்தில் நார்த் என்று சொன்னதால் வந்த குழப்பம் அது )
Posted by மதார் at 12:34 AM
Labels: ஆசைகள், திருமணம், பெண்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ▼  May (6)
      • என்னுடைய கோவம் நியாயமானதா ?
      • ஒரு பெண்ணின் திருமண எதிர்பார்ப்புகள்
      • மரண பயம் பார்த்ததுண்டா ?
      • ஏப்ரல் பயணம் ஒரு அனுபவம்
      • அல்வா வாங்கி வரும் நெல்லை மக்களே கவனம்
      • ஊர்பிரச்சனை உடனடி தீர்வு வேண்டும்
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio