நிகழ்வு 1 :
கல்லூரி மூன்றாம் வருடம் நாங்கள் மாணவ , மாணவியர் ஒரு 50 பேர் 3 நாள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றோம் . வரும்வழியில் இருக்கும் Black Thunder தண்ணில1 நாள் முழுவதும் நல்லா ஆட்டம் போட்டோம் . வாட்டர் கேம்ஸ் நிறைய உண்டு . சிலது நீச்சல் தெரிந்தால் மட்டுமே விளையாட முடியும் . எங்கள் வகுப்பில் பெண்களில் எனக்கும் , ஒரு நான்கு மாணவர்களுக்கும் மட்டுமே நீச்சல் தெரியும் என்பதால் நாங்கள் மட்டுமே அதில் இருக்க என் சக நண்பனுக்கும் அதில் விளையாட ஆசை . அது ஒரு மேட்டிலிருந்து பெரிய குழாய் வடிவில் வரும் சுரங்கப்பாதை அதில் மேட் மூலம் சறுக்கிக்கொண்டு வந்து கீழிருக்கும் நீச்சல் குளத்தில் விழ வேண்டும் . குளம் ஒரு பத்தடி ஆழம் . ஆழ் தண்ணீரின் குணம் மேலிருந்து விழும்பொழுது கீழிருந்து ஒரு உந்துவிசை நம்மை தூக்கிவிடும் அதற்குள் நாம் சுதாரித்து நீச்சல் அடித்துவிட வேண்டும் கொஞ்சம் மிஸ் பண்ணாலும் நம் உடம்பின் எடையால் புவி ஈர்ப்பு விசை மூலம் கீழே இழுக்கப்படுவோம் . (கிணத்துல குளிச்சவங்களுக்கு இது தெரியும் ) நண்பனின் நண்பன் , டேய் மச்சான் நான் இருக்கேண்டா தைரியமா வா நீ விழுந்ததும் நான் உன்னை பாத்துக்கிறேன் என்று வாக்குறுதி குடுக்க அவனும் சுரங்கம் வழியா வந்து விழுந்துட்டான் , அவனுக்கும் நீச்சல் தெரியாது . விழுந்தவன் அப்படியே மூழ்க வாக்குறுதி குடுத்த நண்பன் தண்ணிக்குள்ள குதிச்சி தம் கட்டி மூழ்கினவன் காலை பிடிச்சி அவன் தலை தண்ணிக்கு மேல வர வச்சுட்டான் , அவங்க இருக்குற இடம் கரையிலிருந்து ஒரு பத்தடி தூரம் அவனுக்கும் சுத்தமா நீந்த தெரியல மாணவர்கள் யாரும் இதைப் பார்க்கவும் இல்ல . ஒருத்தனால மட்டும் அவனை கரைக்கு கொண்டுவர முடியாது வேற வழி இல்ல ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு நானே நீந்திப்போய் அவன் கைய பிடிச்சி கொண்டு வந்து கரையில் விட்டேன் தாமதிக்குற ஒவ்வொரு நொடியும் மூழ்கிருக்குரவனுக்கு ஆபத்து . நீச்சல் தெரியாம ஒருவழியா அவன் கரைக்கு வந்ததும் முழிச்ச முழி , ஏன் இப்படி முழிக்குற உன்ன என்ன சாகையா விட்டுடுவோம் என்றேன் . அவன் பாவம் வாக்குறுதி குடுத்தவனை கெட்ட கெட்ட வார்த்தையில திட்ட ஆரம்பிச்சுட்டான் . நிகழ்வு 2 :
பிரெண்ட பாக்குறதுக்காக பஸ்ல பெரம்பூர் போயிட்டு இருந்தேன் . புரசைவாக்கம் அருகில் ஒரு பையன் 20 -25 வயசுக்குள்ள இருப்பான் நல்ல உயரம் . ரன்னிங்கில் முன்வாசலில் ஏற ஸ்லிப் ஆகி விழுந்துட்டான் டிரைவர் உடனே பஸ்ஸ நிறுத்திட்டார் , அத்தனைபேரும் தொலைஞ்சானுதான் நினைச்சோம் . ஏறினவன் முன் வீலுக்கும் பின் வீலுக்கும் நடுவுல கிடக்குறான் அப்புறம் அவனை அருகில் இருந்தவங்க தூக்க நல்ல வேலை அடி எதுவும் படல , டிரைவர் மட்டும் சைடு கண்ணாடி பார்க்காம இருந்திருந்தா அன்னைக்கு அவன் காலி . பயத்துல நல்ல வேர்த்துடுச்சு அவனுக்கு , அன்னைக்கு அவன் கண்ணுல தெரிஞ்ச பயம் இனி ஜென்மத்துக்கும் ரன்னிங்கில் ஏற மாட்டான் .நிகழ்வு 3 :
பாண்டிபஜாரில் அலுவலகம் முடிஞ்சு நானும் என் ப்ரெண்டும் பஸ் ஏற வெயிட் பண்ணிட்டு இருக்க அப்போதான் தேனாம்பேட்டை சிக்னல் முடிஞ்சு முதலில் இரண்டு சக்கர வாகனங்கள் வர ஒரு இரண்டு பசங்க ஹெல்மெட் போட்டு எங்களை கடந்து செல்ல நான் எங்களுக்கான பஸ் வருதான்னு முன்னமே அந்த ரோடு பக்கம் பார்த்துட்டு இருந்தேன் . இந்த பசங்களையும் ஏனோ கண் தன்னிச்சையாய் நோட் பண்ணிச்சு (சைட் அடிச்சதத்தான் இவ்வளவு மரியாதையா சொல்றேன் , ஹெல்மெட் போட்டாலும் பார்ப்போம்ல ) எங்கள் முன் வர வண்டி ஸ்கிட் ஆகி அப்படியே சறுக்கிகிட்டு போகுது படத்துல வர ஸ்டன்ட் ஸீன் பாக்குற மாதிரி இருக்கு . பெட்ரோல் கொட்டுது , ஹெல்மெட் எல்லாம் கழண்டு ஓடுது . எல்லாரும் அதிர்ச்சில நிக்குறோம் . நல்ல வேலை முதலில் வந்தவங்க எல்லாம் பைக் அதனால எல்லாம் ஸ்டாப் பண்ணி அவங்களை தூக்கி விட்டாங்க , பின்னாடி மட்டும் ஒரு கார்ப்பரேசன் பஸ் வந்திருந்தது அவ்ளோதான் , நம்ம ஊரு பஸ் பிரேக் பிடிக்குற லட்சணம்தான் தெரியுமே இங்க பிடிச்சா பத்தடி தள்ளிபோய்தான் பஸ் நிக்கும் . பாவம் அந்த பசங்க கொஞ்சம் அடி பட்டுடுச்சு பான்ட் கூட கொஞ்சம் கிழிஞ்சு போச்சு . அவங்க முழிச்ச முழி நல்ல வேலை தப்பிச்சுட்டோம்டா சாமின்னு சொல்ற மாதிரி இருந்தது . ஹெல்மெட் போடுறது மட்டுமில்ல போடுற ஹெல்மெட் கொஞ்சம் கழண்டு போகாத அளவுல போடுங்க .


