![]() |
| சமாதானம் |
நடக்குறதை எல்லாம் பார்த்தா சின்னபுள்ளைங்க தோற்றுடுவாங்க போல . அவங்கதான் அவ என்னை அடிச்சுட்டா , இவ என்னை கிள்ளிட்டான் என்று சொல்வாங்க . எல்லோரும் மீண்டும் ஆரம்பக்கல்வி படிக்கணும் போல . சக மனிதர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று அப்போ படிச்சது எல்லாம் இப்போ மறந்திருக்க வாய்ப்பிருக்கு . வயசானா நியாபக மறதி வரது சகஜம்தான் . எப்போ பார்த்தாலும் குரங்கு வாலைப் பிடிச்ச கதை மாதிரி எதையாவது பிடிச்சு தொங்கிகிட்டு . நீங்க மட்டும் என்ன தனியா தொங்குறது எனக்கு எந்த ஆணியும் இல்ல நானும் வரேன் என்று கூட நாலு பேரு சேர்ந்து தொங்குறது . பார்த்துங்க ஓவர் வேய்ட் தாங்காம ஒருநாள் கிளை இல்ல மரமே வேரோடு சாய்ந்திடாம .
பதிவுலகம் வந்து ஒரு வருஷம் ஆகப் போகுது , நமக்குன்னு யாரும் நண்பர்கள் இங்கு இல்லியே , பதிவர்கள் கூட்டத்துக்கு போக முடியலையே என்று ரொம்ப வருத்தப்பட்டேன் . இப்போ ஆணியே பிடுங்க வேணாம் இப்படியே திரை மறைவிலேயே இருந்துடலாம் போல . அரசியல் கட்சிகள் நம்மகிட்ட ஐடியா கேக்கலாம் இனிமேல் , ஒருவரை எப்படி தாக்கலாம் என்று .நிஜவுலக அரசியலை விட பதிவுலக அரசியல் சும்மா சொல்லக்கூடாது மிகவும் சுவாரசியமாத்தான் இருக்கு . யார் எந்தக் குழு என்று தெரிந்துகொள்ள சில வில்லங்க பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களும் , அதைத்தொடர்ந்து வரும் ஆதரவு , எதிர்வினைகளுமே சாட்சிகள் . இனிமேலும் நாங்க குழு இல்லை என்று சொல்வீங்க ?இந்தக் கட்சி என்றாலே நமக்கு அலர்ஜிங்க . அதான் இன்னும் தனியாலாவே இருக்கேன் .மற்றவர்களைப் பற்றி விமர்சிக்கும் முன் இந்தப் வரிகளை நினைவுபடுத்துங்க "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " ஆமா இது எம் .ஜி.ஆர் பாட்டுள்ள அய்யய்யோ நான் அந்தக்கட்சி இல்லைங்க . நான் எப்போதுமே நடுநிலைவாதிங்க என்னது அதுக்கு பேரு கம்னியூசிட்டா, வேண்டாம் எந்த ஆணியும் புடுங்க வேணாம் .
எல்லாருமே ஒருநாள் மண்ணுக்குள்தான் போகப் போறோம் .இடைப்பட்ட இந்த கொஞ்ச நாளில் ஏன் இந்த கொலை வெறி ? இதையெல்லாம் பார்க்கும்போது நாம விலங்குத்தோல் போர்த்திக்கொண்டு மனிதன் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம் . இந்த பாலாய்ப் போனா பரிணாம வளர்ச்சி என்று ஒன்று வந்துதானே எல்லாரையும் படுத்தி எடுக்குது . இதுக்கெல்லாம் காரணம் அந்தக் கடவுள்தான் , பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுற கதை மாதிரி மனிதனையும் படைத்து கூடவே கொஞ்ச அறிவையும் நிறைய வன்மையும் சேர்த்தே படைத்து அனுப்பிட்டார் .இனி எல்லாரும் எதிர்வினைகள் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு எழுதுங்க .சிவா ,விஸ்ணு , பெருமாள் , சரஸ்வதி , லட்சுமி , பிள்ளையார் , அல்லா, கிறிஸ்து ஆமா இதுல எந்த கடவுளுக்கு எழுதுறது ? அதிலும் ஆண் கடவுள் என்றால் யாருக்கு ? பெண் கடவுள் என்றால் யாருக்கு எழுதுவது ? அட ஆண்டவா உன்னிலும் இத்தனை கட்சியா ? நம்மையெல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது . என்னது அப்போ நீ பெரியார் கட்சியா ? நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலையே ? நாராயணா அப்போ நீங்க அந்த ஜாதியா ? அய்யய்யோ இந்தப்பதிவை முடிக்க முடியலையே ,இந்தப் பதிவை எப்படிங்க முடிக்குறது ? யாராவது பின்னூட்டத்தில் சொல்லவும் .
பி.கு .1 .இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல என்பதை இவ்விடத்தில் "வன்மையாக " சொல்லிக்கொள்கிறேன் .
2 .இக்கரையோ அக்கரையோ எக்கரையும் சாரார் ஆற்றிலே படகிலே போய்க்கொண்டே எக்கரையும் வேடிக்கை பார்க்கும் என் படகில் ஏறிக்கொள்ளலாம் .வாங்க நாமளும் ஒரு புதுக்கட்சி ஆரம்பிக்கலாம் .
3 . இது எதிர்வினையா பக்க வினையா என்று ஆராய்ச்சி செய்வோருக்கு இலவசமாக செய்வினை வைக்கப்பட்டும் .

