skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Thursday, June 24, 2010

கோவில் சண்டை - வாங்க வேடிக்கை பார்க்க

இது எங்கள் ஊர் பகுதிகளில் நடக்கும் கோவில் கொடை விழாவில் நடக்கும் ஒரு சின்ன பகுதி, வட்டார மொழி வழக்கில் . (எந்தளவு புரியப்போகுதுன்னு தெரியல , தமிழ் அகராதி தேட வேணாம் )

"யோவ் தள்ளுங்கப்பா தள்ளுங்க ,தள்ளுங்க  என்னப்பா இங்க பிரச்னை ? சப்பரம் ஏன் போகாம நிக்கு? ஏ முத்து நீ ஏம்ல இப்படி விரைச்சுகிட்டு நிக்க ?" இது ஊர் பெருசுகளில் ஒரு பெருசு .

"மாமா நான் சொல்றேன் " என்றது  ஒரு இளவட்டம் .இசக்கி நீ சொல்லு என்னல நடந்துச்சு ?

"அது ஒண்ணுல்ல மாமா இந்தா சப்ரம் தூக்குரானே  நம்ம பரமசிவத்துக்கும் , முத்து சித்தப்பா மவன் முருகனுக்கும் ரெண்டு நாள் முன்னாடி நம்ம தரிசி வய பத்துல தண்ணி அடைக்கும்போது சின்ன வாக்குவாதம் . அதான் பரமசிவம் சப்ரம் தூக்குற பயனுவட்ட எல்லாம் ஏல எவனும் முருகன் வீட்டு முன்னாடி சப்ரத்த நிப்பாட்ட கூடாதுன்னு சொல்லிட்டான். பயனுவலும் நிக்கல அதான் முத்து சித்தப்பா என் வீட்டுல தேங்கா பழம் ஒடைக்காம சப்ரம் ஒரு அடி போக்கூடாதுன்னு சத்தம் போடுறாரு " என்று சொல்லி முடித்தான் .

ஏல என்னல்ல நினைசுகிட்டு திரியிரீய ? ஒங்க ரெண்டு பேரு சண்டைய ஊரு சண்டைய ஆக்குரீயளால ? ஏல ஏற்கனவே ஊர்ல இருக்க பிரச்சன பத்தலையால உங்களுக்கு . அவஅவன் வேலை வெட்டிய விட்டுபுட்டு வரிய வாங்கி வருஷம் ரெண்டு கொட குடுக்குரதுக்குள்ள உயிர் போவுது , இதுல நீங்க வேற ஏம்ல கரைச்ச பன்றிய? ஏல  முத்து அவனுவதான் சின்ன பயனுவ மண்டைல மசாலா இல்லாம வெளாட்டு வாக்குல ஏதோ செய்ரானுவன்னா நீயும் சின்ன பையன் மாதிரி  ஏம்ல சப்பரத்த மறிச்சு வச்சுட்டு நிக்க ?

"இல்லனே ஏற்கனவே நான் கொலை செஞ்சுட்டு இங்க வந்தம்னு என்கிட்ட பத்து வருசமா வரி வாங்க மாட்டேங்குரீய , சரி வரிதான் வாங்கல வீட்டு முன்னாடி தேங்கா பழம் ஓடைக்க சப்ரமாவது நிக்குதேன்னு நானும் இதுவரைக்கும் ஒன்னுஞ் சொல்லல . ம .............டி இந்த சின்ன பயலுவ இந்த வாட்டி அதையும் நிக்காம கொண்டு போறானுவ . அதான் கொஞ்சம் சத்தம் போட்டுட்டேன் "

சரிப்பா சரிப்பா எங்க சத்தி நைனா ? தேங்கா பழத்த ஒடைக்க சொல்லுப்பா . " எலேய் சப்ரம் தூக்குரவனுவலா ஒங்களோட பெரிய பாடா போச்சுல . அங்கங்க சொணங்காம ஒரு மணிக்குள்ள சப்ரத்த சீக்கிரம் சுத்தி கோயிலுக்கு கொண்டு வந்துருங்கள . சீக்கிரம் மதியக் கொடைய முடிச்சுட்டு ஊர் வரி போட வேண்டாமா ,பொங்கி ஆக்கி சாப்ட வேண்டாமால . தூக்குங்கப்பா தூக்குங்க தூக்குங்க .

பி.கு.புரியாதவர்கள் கண்டபடி திட்டிடாதீங்க . 
Posted by மதார் at 8:48 PM
Labels: கோவில் கொடை, வட்டார மொழி
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ▼  June (5)
      • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
      • கோவில் சண்டை - வாங்க வேடிக்கை பார்க்க
      • போரம் பொறுமையை சோதிக்கும் தளம்
      • வாழைப்பூ மொட்டு குழம்பு -மீன்குழம்பு வடிவில்
      • நீங்க பதிவரா ?எந்த கட்சி?
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio