பாட்டு என்றாலே மனசுல ஒரு சந்தோசம் வரும் . சில பாடல்கள் கேட்க பிடிக்கும் , சில பார்க்க பிடிக்கும் . சில ஆட்டம் போட வைக்கும் , அழ வைக்கும் , மனதை அமைதி ஆக்கும் . ஆட்டம் போட வைக்கும் பாடல்கள் அந்தந்த காலங்களில் மட்டுமே நிற்கும் . என்றென்றும் மனதிலே நிலைத்து நிற்பவை சில பாடல்களே . அந்த வரிசையில் என்னையும் இன்றளவும் கட்டிப்போட்ட பாடல்கள் நிறைய உண்டு அதில் சில மட்டும் இங்கு .
1 .பாடல் -பொன் மானே கோவம் ஏனோ
படம் - ஒரு கைதியின் டைரி
அந்த பாடலின் முன்பு வரையிலான காட்சியில் கமலை ஒரு முருக்குத்தனமான போலீஸ் தோற்றத்தில் பார்த்துவிட்டு பாடல் காட்சியில் ரேவதியிடம் கெஞ்சும் தோற்றம் சூப்பர் .கமலின் கெஞ்சலும் ரேவதியின் மிஞ்சலும் பாடகர்களின் குரலும் இன்றளவும் பார்க்க , கேட்க வைக்கும் பாடல் இது .
பாடல் இங்கே
2 .பாடல் - நாத வினோதங்கள் நடன சங்கீதங்கள்
படம் - சலங்கை ஒலி
கமல் என்றாலே ரொம்ப பிடிக்கும் . சின்ன வயதில் அதிக முறை கமலின் சில பாடங்களை பல முறை பார்த்ததுண்டு இன்றளவும் அது நடக்கும் . கமலின் நடிப்பு திறமை இப்போ தெரியும் அப்போலாம் அவரின் நடனம் , உடை அமைப்பு ரொம்ப ரசித்ததுண்டு . அந்த வகையில் கமலின் நடனத்தில் இந்தப்பாடல் கண்ணசைக்காமல் பார்க்க வைக்கும் பாடல் இது .
பார்க்க
3 பாடல் -மூங்கில் காடுகளே
படம் - சாமுராய்
பச்சை பசேல் என்று இருக்கும் இடம் என்றாலே பார்த்துக்கொண்டே இருப்பேன் , அந்த மாதிரியான இடங்களை விட்டு வர மனம் இருக்காது . என் நண்பர்களிடமும் என்னை எங்காவது காட்டிலே கொண்டு போய் விட்டுடுங்க சந்தோசமாய் இருப்பேன் என்று அடிக்கடி சொல்லுவேன் . இந்தப்பாடலில் விக்ரம் மீது பொறாமை வரும் அவ்வளவு அழகான இடங்கள் அதை காட்சிப் படுத்தியமை என்று ரசிக்க வைக்கும் பாடல் இது .
பார்க்க
இதே வகையில் இயற்கை காட்சியமைப்பில் உள்ள சில பாடல்கள்
ஆதித்தியன் இசையில் இந்தப்பாடல் அளவு வேறேந்தப்பாடலும் ரசித்ததில்லை.
ஒயிலா பாடும்
இஷா மற்றும் அரவிந்த் சாமி எப்போ பார்த்தாலும் புதுப் பாடல் மாதிரி பார்க்க , கேட்க வைக்கும் பாடல் .
திறக்காத காட்டுக்குள்ளே
எந்தக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாய் சுற்றித் திரிய நிறையவே பிடிக்கும் , இந்தப் பாடலும் அந்த வகையில் ஈர்த்த ஒன்று . பாடகியின் குரல் , பாடல் வரிகள் , இசை , காட்சிகள் என்று ஒட்டுமொத்தமாய் ரசித்த ஒன்று .
மலர்களே மலர்களே
சில பாடல்கள் கேட்க்கும்பொழுது பாடகர்களின் குரல் நமக்கு நெருக்கமானவர்களின் குரலை நினைவு படுத்தும் .ராவணன் படப் பாடல் முதல் முறை கேட்க்கும்போழுதே அந்தக் குரல் எனக்கு ரொம்ப பிடிச்ச குரல் .எத்தனை ஆண்களிடம் பேசிருந்தாலும் மறக்க முடியா குரல் ஒரு நண்பருடையது . கௌதம் மேனன் குரல் அடுத்து எனக்கு பிடிச்ச குரல் அவரிடமே சொன்னதுண்டு . இந்தப்பாட்டும் கேட்டவுடன் உங்க குரல் மாதிரி இப்பாடகரின் குரல் இருக்கு என்று சொல்லி நல்ல பல்ப் வாங்கினேன் . ஆயிரம் பேர் நடுவில் நின்று பேசினாலும் ஒரு வார்த்தை மூலமே கண்ணை மூடிக்கொண்டு கண்டுபிடிக்க முடியும் . மனதோடு நெருக்கமான சில குரல்களை மறக்க முடியாது .....அந்தப் பாடல்
உசுரே போகுதே
இந்தப்பாடல் கேட்க்கும்பொழுது என் கல்லூரி நண்பனின் குரலில் இப்பாடல் கேட்கும் . அவன் பலமுறை பாடி கேட்ட பாடல் இது . இன்று அவனுடன் சில மனஸ்தாபங்கள் காரணம் நட்பு முறிந்தாலும் பாடல் கேட்க்கும்பொழுது அவன் பாடிய பொழுதுகள் மனதில் வந்து போகும், கூடவே சில சொல்ல முடியா மௌனங்களும் துளி கண்ணீரும் . நல்ல நட்பு ஒருநாள் அவனுக்கு புரிய வரும் என்ற நம்பிக்கையில் அவனுக்காக இப்பாடல் .
பூவே செம்பூவே
