இரவு மணி 11 (பேப்பர் படிக்கும் நேரம் ) ஒரு பக்கத்தில் "பருப்பின் விலை இனி குறைய வாய்ப்பு உள்ளது" சந்தோசத்துடன் அடுத்த பக்கம் பார்க்கிறேன் "பால் விலையை ஏற்றச் சொல்லி போராடப் போகிறோம்" . அடப் பாவிகளா இதுக்கு மேல எங்கிட்டு இருந்து ஏத்துறது ஏற்கனவே ஏறிப் போய்தானே இருக்கு ! .
எப்படியும் ஒரு 12 க்குள்ளே தூங்கி இடிபடாம பஸ்ல போய் (நடக்குற காரியமா ?) ஒரு எட்டு மணிநேரம் நோயாளி மாதிரி ஒரே இடத்துல முதுகு கண்ணு வலிக்க உக்கார்ந்து முடிஞ்சவரைக்கும் ஆணி புடுங்கி ஆஞ்சி ஓஞ்சி போய் கொஞ்சம் பொழுது போக்கலாம்னு தமிழ்மணம் வந்து இன்னைக்கு மகுடத்துல என்ன உக்கார்ந்திருக்குன்னு எட்டி பார்த்தா நான் பாக்குற நேரமெல்லாம் பெரும்பாலும் கம்யூனிசப் பதிவுதான் இருக்கு அடுத்து வெய்ட்டிங் லயும் ஒன்னு நிற்கும் . அது இறங்கினதும் இது போய் உக்கார்ந்து கொள்ளும் ..அடப் பாவிகளா அப்போ நம்மளைத் தவிர இங்கே எல்லோருக்கும் கம்னியூசம் தெரியுதா ? புரியுதா ? பின்னே வெய்ட்டிங் மகுடம் வர சில பல எண்ணிக்கைகளில் ஓட்டு விழனுமே ? இதுல நிறைய பதிவுகள் வெய்ட்டிங் மட்டும்தான் கன்பார்ம் ஆகாமலே போய்டும் . கம்னியூசத்துக்கு தான் மகுடமே உருவாக்கப் பட்ருக்குமோ? யாராவது இந்த சந்தேகம் தீர்த்து வைங்களேன் .சில சமயம் கம்னியூசம் கொஞ்சம் காத்து வாங்க போற நேரத்துல அத்தி பூத்தாப் போல வேறு சில பதிவுகளும் தட்டி முட்டி மகுடத்துல உக்கார்ந்து அப்பாடா நானும் மகுடம் வந்துட்டேன் என்று விடுற பெருமூச்சு ...........காதுல கேட்கத்தான் செய்யுது .
நான் பார்த்த வரைக்கும் சினிமா விமர்சனம் எழுதினா நாலு பேரு ரசிக்கிறாங்க . கொஞ்சம் காமெடி கலந்து எழுதினா நாலு பேரு சிரிக்குறாங்க . நம்ம சொந்த சொரிதல சொறிஞ்சா அட உங்களுக்கும் இந்த சொறி இருந்துச்சான்னு சந்தோசப் பட்டு போறாங்க .கம்னியூசம் எழுதினாலே சண்டைதானே நடக்குது ?(ஆதி மனிதன் காலத்துக்குப் பிறகு இந்த அடிச்சுக்குற விசயத்துல மட்டும் நாம இன்னும் மாறவே இல்ல )
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ........ இந்தப் பதிவுலக கம்யூனிசப் பதிவுகளால் எங்கேயாவது யாருக்காவது ஒரு நல்லது நடந்திருக்கா ? அப்படி நடந்திருந்தா ஒன்னு சொல்லுங்களேன் . நானும் கம்யூனிசம் படிச்சு பதிவு எழுதுறேன் .
நானும் ஒரு ஒரு வருசமா பதிவுலகத்துல கம்னியூசம் படிக்க முயற்சி பண்றேன் ஒன்னும் வேலைக்கு ஆகல . சரி நண்பர்கள்கிட்ட கொஞ்சம் விளக்குங்கன்னு கேட்டா அடுத்த மாசம் நம்ம ரூம் வாடகை 1000 கூடப் போகுது அது பத்தி உனக்கு கவலை இல்ல கம்யூனிசம் தெரியலன்னு கவலை ...........என்று இன்னும் விழுந்த அர்ச்சனைகளுடன் நம்மல மாதிரியே நம்ம தோழிகளுக்கும் அறிவு கொஞ்சம் கம்மிதான் என்று எந்த சந்தேகத்தையும் தீர்த்து வைக்கும் நம்ம பதிவுலகம் படித்த பல அறிவாளர்கள் இருக்கும் இடத்தில் கேட்கலாம் என்று இப்போ உங்கள் முன்னால் , கொஞ்சம் கம்னியூசம் சொல்லிக் குடுங்களேன் .
சிறப்பு குறிப்பு : பெருமதிப்பிற்குரிய ஐயா நெத்தியடி DDD தாங்கள் தற்சமயம் NARI என்ற பெயரில் இங்கு உலா வருவது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம் . நீங்கள் போரமிலும் உள்ளீர்கள் என்று என் சின்ன அறிவின் மூலம் அறிந்து கொண்டேன் . எல்லோரும் நீங்கள் என் நண்பர் என்று என்னுடைய ஒரு பதிவின் மூலம் தப்பா நினைச்சுட்டு இருக்காங்க . நீங்க யாருன்னு வலையுலகம் முழுவதும் நானும் வலை போட்டு தேடித் பார்த்துட்டேன் ..........ப்ச் முடியல . யாரையும் நம்ப முடியாது நீங்களாவது எனக்கு கம்யூனிசம் கத்துக் கொடுங்களேன் ...............
