skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Thursday, May 17, 2012

வளராமலே இருந்திருந்திருக்கலாம் .



பொதுவா பையன்களை அம்மாவுக்கும் பெண்களை அப்பாவுக்கும் பிடிக்கும் . நான் மட்டும் விதிவிலக்கா என்ன அப்பா செல்லம் .நால்வரில் என்னைத் தவிர மற்ற மூவரும் அம்மா குடும்ப சாயலிலும் நான் மட்டும் அப்பா சாயலில் இருப்பதும் ஒரு காரணமோ என்னவோ . என் பிள்ளைகள்ள மூணு பேருக்கும் நல்ல மூக்கு உனக்கு மட்டும்தான் உன் அப்பா மூக்கு சப்ப மூக்கு என்று அம்மா அடிக்கடி சொன்னதால் இருக்குமோ . அப்பா ஒரு கடின உழைப்பாளி இரக்க குணம் உடையவர் . யார் தேவை என்று கேட்டாலும் வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவிடம் பணம் குடுக்கச் சொல்லி  அதிகம் வாங்கி கட்டிக் கொள்பவர் .குடுக்க அந்நேரம் நம்மிடமும் இருக்க வேண்டுமே . 

வீட்டில் அலங்கரிக்கும் ஒரே ஒரு புகைப் படம் அப்பாவோடது மட்டுமே . இரண்டு பை வைத்த சட்டை போட்டு முறுக்கி விட்ட மீசையுடன் அப்படி ஒரு கம்பீரமாய் ஆர்மி மனிதர் மாதிரி இருப்பார் . அப்பாவிடம் பாசம் அதிகம் என்றாலும் அவரின் உருவத்துக்கும் குரலுக்கும் அந்த அளவு பயமும் இருக்கும் . நானெல்லாம் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி மறைபவள் . அப்பா கையால் அடி வாங்குவதும் பிரம்பால் அடி வாங்குவதும் ஒன்றுதான் .உழைத்து உழைத்து உரமேறிய கைகள் செருப்பிடாத கால்கள் . 

முற்றத்துக் கட்டிலில் அப்பா உடன் படுத்துறங்க அக்காவும் நானும் போடும் சண்டைகள் .இரண்டு மூன்று வருடங்கள் வரை அப்பா மார்பின்  மேலேயே ?எல்லோருக்கும் ஆரம்ப உறக்கம் .வளர்ந்ததும் அருகில் படுத்துறங்க நடக்கும் சண்டைகள் . இன்று எங்களின் அடுத்த தலைமுறையும் அதையே செய்கிறது .அண்ணன் குழந்தைகள் அத்தனைபேரிடமும் இருக்கும் இந்தப் பழக்கம் நாங்க வளர்ந்துட்டோம் என்று சொல்லுது . 

எத்தனை அடித்துக் கொண்டாலும் அம்மாவை ஒரு நொடியும் பிரிந்திராத அப்பா . வீட்டுக்கு வந்ததும் இருவரும் கேட்கும் முதல் கேள்வியே ஏல அப்பா எங்க ,அம்மா எங்க? என்பதாகத்தான் இருக்கும் . வயல்களுக்கு நடுவில் பேரூந்து நிறுத்தத்தை நோக்கி செல்லும் வரப்புகள் இன்றும் சொல்லும் கதைகள் .பிறந்த வீட்டுக்கு கத்திக் கொண்டு செல்லும் அம்மா பின்னாடியே அம்மாவை சமாதானப் படுத்திக் கொண்டு செல்லும் அப்பா அவர்களுக்கும் பின்னாடியே அழுதுகொண்டு செல்லும் நான் .வரப்புகளும் அதன் வழித்தடங்களும் இன்னமும் மாறவில்லை .இன்று இல்லாத அம்மா வீட்டுக்கு என் அம்மாவும் செல்வதில்லை . 

ஒருமுறை விடுமுறைக்காக வீட்டுக்கு சென்றபோதுதான் அது நடந்தது .அப்பாவுக்கு ரொம்பவும் முடியாமல் படுத்த படுக்கையாய் . இடுப்பில் இருந்து நழுவி விழும் வேட்டியை ஓடிப்போய் கட்டி விடுகையில் அப்பா முகம் பார்க்க முடியவில்லை . அம்மா கொடுத்த கசாயத்தை குடிக்க அப்பாவிடம் கொடுக்க அதை அவர் வாங்கிக் குடிக்கக் கூட முடியாத நிலையில் இருக்க தோல் மேல் சாய்த்து வைத்து மருந்தை கொஞ்சம் கொஞ்சமாக அப்பா வாயில் ஊற்றும்போது வந்த கண்ணீர் அப்படியே நின்றது .எத்தனை நாள் உன் மார்பின் மேல் படுத்துறங்கி இருப்பேன் அப்பா இன்று என் தோளில் நீ .

அதன் பின்னர் அப்பாஎழுந்து நடமாடி விட்டார் இருந்தாலும் அந்த நாளுக்குப் பிறகுதான் நான் வளர்கிறேன் கூடவே அப்பவும் அம்மாவும் வளர்கின்றனர் என்பதே உரைத்தது .பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கு வயதாவது மனதுக்குள் ஒரு பயத்தை நிறுத்திவிட்டது .

போன வாரம்தான் கவனித்தேன் என்னம்மா எல்லா முடியும் வெள்ளையா போச்சு அதுக்குள்ளே என்கும்போதே அம்மா பாட்டியாகிவிட்டாள் என்று புத்தி சொல்லுது .

நீ போய் தண்ணி எடுத்துக் கொடு அப்பா எங்கையாவது விழுந்துடப் போறார் என்று அம்மா சொல்லும்போது அப்பாவின் நடையில் வந்த தளர்வு தெரியுது .அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்ள மாட்டார்களாம். ஆமா இவங்களுக்கு நேத்து முந்தாநேத்துதான் கல்யாணம் ஆச்சி பேசிக்க மாட்டாங்களாம் என்று நான் சொல்கையில் அம்மா முகத்தில் நான் பார்த்திராத வெட்கம் . எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து நடக்கும் கூத்து இது . சாதாரண உரையாடலில் வடக்கு தெற்கு திசைக்கெல்லாம் சண்டை போட்டு மாதக் கணக்கில் பேசாமல் இருப்பர் . இவர்கள் பேசாமல் இருக்கும் காலகட்டத்தில் எனக்கும் அக்காவுக்கும் அர்ச்சனைகள் அதிகம் நடக்கும் .அப்பாக்கு சாப்பாடு வச்சு கொடுத்தியா , பொம்பளைபுள்ளைங்க வீட்டுக்கு  வந்த ஆம்பளைக்கு சாப்பாடு வச்சு கொடுக்குவதாலான்னு பாரேன் என் கணியம்மாக்கா என்று எதிர்த்த வீட்டு கிழவி அக்காவிடம் பிராது போகும் .

 நீங்க எத்தனை பேரக் குழந்தைகளுக்கு வேணா தாத்தா பாட்டியா இருந்துட்டு போங்க எனக்கு என்னைக்கும் நீங்க அப்பா அம்மாவா வேணும் . நான் வளராமலே இருந்திருந்திருக்கலாம் .

காலையில் ஏர்மாடு பிடித்துக் கொண்டு உழ போகும் அப்பா ஏழு மணிக்கு கஞ்சி கொண்டு போகும் நான் . அப்பா சாப்பிட குட்டி வாய்க்காலுக்குள் குட்டி தொட்டி கட்டி குட்டி குட்டி மீன் பிடித்து ஒரு மீன் பண்ணை மீண்டும் செய்யணும் .அப்பா எனக்காக மிச்சம் வைக்கும் கஞ்சியை சேற்று வாசனையில் சாப்பிடனும் . அப்பா மாடு பாவம்பா அடிக்காதப்பா என்று அப்பாவை ஏசனும் . தார்க்கம்பை எடுத்து ஒளிச்சு வைக்கணும் . வைக்கப்படப்பு சுத்தி சுத்தி மாடு பிடிக்கணும் .குட்டி கன்றுக்கு முட்டு பழக்கி கொடுக்கணும் .ஆட்டுக்குட்டியை மடியில் போட்டு தூங்க வைக்கணும் .சாஸ்தா கோயில் கசத்தில் விழுந்து நீச்சலடிக்கணும் .அக்கா கூட சண்டை போடணும் .அப்பா புளிய மரத்தில் கட்டி வச்சு அடிக்கணும் .

சம்மருக்கு வீட்டுக்கு போகாமலே இருந்திருக்கலாம் .
Posted by மதார் at 10:47 PM
Labels: அனுபவம், ஆசைகள், கிராமம்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ▼  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ▼  May (3)
      • ஆயிஷா
      • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
      • வளராமலே இருந்திருந்திருக்கலாம் .
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio