skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Friday, May 6, 2011

என் பள்ளி - சின்ன பயணம்

சுமார் எட்டு வருடங்கள் இருக்கும் 2003 பள்ளி முடித்தபின் அந்தப் பக்கமே போகவில்லை . போன வாரம் ஒரு வேலையாய் அண்ணாவுடன் அருகில் இருக்கும் ஊர் போய் திரும்பும் வழியில் என் பள்ளி .அண்ணா என் ஸ்கூல்னா என்றேன் மெதுவாய் போனான் அண்ணா . கேட்டில் நின்றிருந்த என் பிரெண்டின் சித்தப்பா அவரும் அப்பள்ளியில் பணி புரிபவர் .என்னை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார் காதோரம் கொஞ்சம் வெள்ளை முடிகள் புதிதாய் .மகராஜன் அண்ணா என்று எங்களால் செல்லமாய் அழைக்கப்படும் எங்கள் அண்ணன். என் அண்ணா நிறுத்து வண்டியை நிறுத்து என்று கதை தொடங்கிவிட்டேன் ,எங்கே நிறுத்தாமலே போய்விடுவானோ என்ற பயம்தான் .அண்ணா எப்படி இருக்கீங்க என்றேன் கேட்டில் நின்றுகொண்டே. மெதுவாய் பேசிக் கொண்டே உள்ளே சில அடிகள் நடந்தால் என் இயற்பியல் ஆசிரியர் . என்னை பன்னிரெண்டாம் வகுப்பில் செதுக்கியவர் என்றே சொல்லாம் .பள்ளிக்கு தெரியாமல் எங்களுக்கு (பிரெண்ட்ஸ் ) மட்டும் லீவ் நாட்களில் பாடம் எடுத்தவர் .இரண்டு இயற்பியல் புத்தகங்களில் ஒன்றை விடுமுறை நாளிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கும் முன்னே படிக்க வைத்தவர் .இறுதித் தேர்வில் 195 /200 எடுக்க வைத்தவர் . இந்த மார்க் எடுக்க நான் படித்தேன் என்பதைவிடவும் படிக்க வைத்தவர் .இன்று ஒரு பொறியாளராய் அதுவும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும் அளவுக்கு நான் வர இயற்பியலில் வரி வரியாய் என்னை படிக்க வைத்தவர் .அடிக்க மாட்டார் சில வார்த்தைகள் போதும் .

இன்று பள்ளியிலேயே சிறப்பு வகுப்புகள் எடுக்க அனுமதிக்கிறார்கள் போல . நான் போகையில் மாணவிகள் படித்துக் கொண்டிருந்தனர் .பொறாமையாய் இருந்தது அவர்களைப் பார்க்க . சீருடை , இரட்டை சடை என்று ஒரு நிமிடம் அந்த இடத்தில் நான் இருந்து படித்த பொழுதுகள் நினைக்காமல் இருக்க முடியவில்லை . நடுவில் கம்பீரமாய் நின்ற மேடை திசை மாறியிருந்தது . 6 முதல் 8 வரை படித்த ஓட்டு அறைகள் இடிக்கப் பட்டிருந்தன .புதிய கட்டிடங்கள் வரப் போகிறதாம் நல்ல விஷயம் .இருந்தாலும் பாதி அளவு மட்டுமே இருக்கும் சுவர் நல்ல வேப்ப மரக் காற்று பறவைகளின் சத்தம் இனி கேட்காது . ஏழாம் வகுப்பில் இருபது பேர் காது பிடித்து தோப்புக் கரணம் போட்ட வேப்ப மரம் வெட்டப் பட்டிருந்தது . ஒரு மாணவனுடன் நான் போட்டி போட்டுக் கொண்டு படித்த மரம் வெட்டப் பட்டு புதிய கட்டிடம் அங்கேதான் மாணவர்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப் பட்டிருக்கும் . பெரிய மைதானம் தெரியா வண்ணம் கட்டிடங்கள் .பத்தாம் வகுப்பில் தமிழ் படிக்காமல் போன குற்றத்திற்காக வகுப்பே இரண்டு கைகளையும் நேராய் தூக்கி அசையாமல் நின்ற இடம் வரிசையில் முதலில் நின்ற எனக்கு கை வலியிலும் படிக்காமல் போய் தண்டனை பெற்ற அவமானத்திலும் கண்களில் நீர் பொலபொலவென வழிந்த இடம் அது தெரியாமல் புதிய கட்டிடம் இருந்தது .

ஜம்முராஜ் சார் இப்போதும் பியூரட்,பிப்பெட் ,பெரிய ஸ்கேல் எல்லாம் உடைக்கிறாரா சார் என்றேன் .நீலகண்டன் சார் எதுவுமே சொல்லாமல் சிரித்தார் .எங்கே இப்போ எல்லாம் யார் மேலையும் கை வைக்க முடியல போலீஸ் ஸ்டேஷன் போயிடறாங்க என்றார் சோகமாய் . ரிசல்ட் எப்படி சார் வருது என்றேன் . 95 % வருது என்றார் இன்னும் சோகமாய் சிரித்துக் கொண்டே . நான் படித்த காலத்தில் SSLC ,HSC இரண்டிலும் 100 % வந்தது வரும் .தொடர்ச்சியாய் மூன்று முறை 100 இரண்டிலுமே வந்து தூத்துக்குடி மாவட்ட சுழற்கேடையம் பள்ளிக்கு பரிசாக வந்தது . ஒருமுறை SSLC யில் தன் ஆங்கில வகுப்பில் ஒரு மாணவர் மட்டும் பெயில் ஆனார் அதனால் 100 % போய்விட்டதே என்று அந்த சார் அன்று முழுவதும் சாப்பிடவே இல்லை .

சின்ன சின்ன அரசியல் ,சண்டைகள் என்று இருந்ததேத் தவிர பெரிய அளவில் எந்தப் பிரச்சனைகளும் வந்ததில்லை . இன்று மானேஜ்மென்ட் சரியில்லையாம் .அந்த அளவு பள்ளியில் பிரச்சனைகள் கேட்கும்போதே கஷ்டமா இருந்தது . நம் பள்ளியில் படித்தோர் நிறைய பேர் நல்ல வேலையில் வெளிநாட்டில் இருக்கின்றனர் . இன்டர்நெட் மூலம் நான் பார்த்திருக்கிறேன் என்று சில மாணவர்களின் பெயர்களைச் சொல்லும்போது நிஜமாகவே அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் . ஒரு ஆசிரியர் எதிர்பார்ப்பதும் அதுதானே . நேரமின்மையால் அரை மணிநேரம் மட்டுமே ஏழு வருடங்கள் படித்த பள்ளியில் எட்டு வருடங்கள் பிறகு என்னால் செலவழிக்க முடிந்தது .இடம் மாறிய வகுப்புகளையும் வெட்டப் பட்ட மரங்களையும் பார்த்துக் கொண்டே வெளிவந்தேன் .மீண்டும் என் பள்ளி SSLC,HSC இரண்டிலும் 100 % வர வேண்டும் சுழற்கேடையம் மீண்டும் பள்ளியை அலங்கரிக்க வேண்டும் .
Posted by மதார் at 10:54 PM
Labels: அனுபவம், பள்ளி
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ▼  2011 (9)
    • ►  November (1)
    • ▼  May (2)
      • என் பள்ளி - சின்ன பயணம்
      • அழிவை நோக்கி விவசாயம் -ஸ்ரீவைகுண்டம் அணை
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio